வணக்கம் நண்பர்களே! பொதுத்தமிழ் பாடங்களைப் பதிவிட ஆரம்பிக்கலாம் வாங்க!
பொதுத்தமிழ் பகுதியிலிருந்து 100 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
பொதுத்தமிழ் பாடமானது கீழ்க்காணும்,
இலக்கணம்
இலக்கியம்
தமிழறிஞர்களும் தமிழ்தொண்டும்
என மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் முதல் பிரிவில் இடம் பெற்றிருக்கும் இலக்கணம்(மொழிப்பயிற்சி) பகுதியிலுள்ள பாடங்களை வரிசையாக பார்க்கலாம்.
கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லுக்கு பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து பொருத்த வேண்டும்.இதில் இரண்டு பிரிவுகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்..
பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு என்றும் பொருத்தமான இணையைத் தேர்ந்தெடு என்றும் வினா கேட்கப்படும்..
அவையாவன,
1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்கள்
எடுத்துக்காட்டு:
மாருதம் - குதிரை
தவ்வை - மூங்கில்
புரவி - காற்று
வேய் - மூதேவி
விடை:
மாருதம் - காற்று
தவ்வை - மூதேவி
புரவி - குதிரை
வேய் - மூங்கில்
2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்கள்
நூலின் பெயர் கொடுக்கப்பட்டிருக்கும் அந்நூலை இயற்றிய ஆசிரியரைத் தேடிப் பொருத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு:
பாண்டியன் பரிசு - பாரதியார்
இயேசு காவியம் - புலவர் குழந்தை
குயில்பாட்டு - பாரதிதாசன்
இராவண காவியம் - கண்ணதாசன்
விடை:
பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
இயேசு காவியம் - கண்ணதாசன்
குயில்பாட்டு - பாரதியார்
இராவண காவியம் - புலவர் குழந்தை
வினா எப்படி கேட்கப்படும்?
குரூப்-4
குரூப்-2
எந்தப் புத்தகத்தில் படிக்கலாம்?
ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் மொழிப்பயிற்சி பகுதியில் கொடுக்கப்பட்டிருக்கும் அருஞ்சொற்பொருளை அறிக என்ற பகுதியை மட்டும் படித்தாலே பொருத்தமான பொருளை எளிதாகக் கண்டறியலாம்.
அதே போல ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்யுள், கவிதைகள், கதைகள் மற்றும் உரைநடைத்தொகுதிகளின் ஆசிரியர்களை நன்கு படித்து அறிந்து கொண்டாலே நூலை எழுதிய நூலாசிரியரை எளிதாகத் தேடிப் பொருத்தலாம்.
எனவே வினாக்களுக்கு எளிதாக விடையளிக்க வேண்டுமெனில் நிறைய சொற்களையும் அவற்றிற்கான பொருளையும் நிறைய நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் தெரிந்திருத்தல் அவசியமாகும்.
இப்பாடத்திலிருந்து 10 வினாக்களுக்கான தேர்வு வைத்திருக்கிறேன்.. பதில் அளியுங்கள்.. பதித்த பாடம் பளிச்சென மனதில் பதியட்டும்..
1.பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல் TEST LINK
2.புகழ் பெற்ற நூல் நூலாசிரியர்கள் TEST LINK
|