Ads Area

இமயமலை - இந்திய இயற்கையமைப்பு - புவியியல் - TNPSC Geography


இமய மலைகள் உலகின் இளமையான மற்றும் மிக உயரமான மலைத் தொடர்கள் ஆகும். இதனை வடக்கு மலைகள் என்று அழைப்பர்.இம்மலைகளை பனி சூழ்ந்துள்ளதால் பனி உறைவிடம் என்று அழைப்பர்.மேற்கில் சிந்துப் பள்ளத்தாக்கில் இருந்து கிழக்கே பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரை சுமார் 2500 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு பரவியுள்ளது.  


இம்மலைகள் காஷ்மீர் பகுதியில் 500 கிலோ மீட்டர் அகலத்துடன் அருணாச்சலப் பிரதேசத்தில் 200 கிலோ மீட்டர் அகலத்துடன்  வேறுபடுகிறது. பிரபலமான  பாமீர் முடிச்சு உலகின் கூரை என அழைக்கப்படுகிறது.   இது மத்திய ஆசியாவின் உயரமான மலைத் தொடரையும் இமய மலையையும் இணைக்கும் பகுதியாக உள்ளது. இமய மலை உச்சியிலிருந்து கீழ் நோக்கி வில் போன்ற வடிவத்தில் அமைந்துள்ளது. இமாலயா என்ற சொல் சமஸ்கிருத மொழியில் பனி உறைவிடம் என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் பெரு அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.



1.  டிரான்ஸ் இமயமலைகள் 
2. இமயமலைகள் 
3. கிழக்கு இமயமலை அல்லது பூர்வாஞ்சல் குன்றுகள் 

1.  டிரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமயமலைகள்)

இமயமலைகள் மேற்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகிறது. மலைகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு அதிகமாக இருப்பதால் இவை திபெத்தின் இமயமலை எனவும் அழைக்கப்படுகிறது.  இம்மலைகள் மேற்கு மற்றும் கிழக்கு எல்லையில் சுமார் 40 கிலோ மீட்டர் அகலத்திலும் அதன் மையப்பகுதியில் 225 கிலோ மீட்டர் அகலத்திலும் காணப்படுகிறது.  இப்பகுதியில் காணப்படும் பாறை அமைப்புகள் கடலடி உயிரின படிமங்களை கொண்ட டெர்சியரி கிரானைட் பாறைகளாகும்.  இப்பாறைகளின் ஒரு பகுதி உருமாறிய  பாறை படிமங்களாக இமய மலைத்தொடரின் மைய அச்சாக அமைந்துள்ளது. இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் சாஸ்கர், கைலாஷ் மற்றும் காரகோரம். 

2.மத்திய இமயமலைகள் 

இவை வடக்கு மலைகளின் பெரிய பகுதியாக அமைந்துள்ளது. இது ஒரு இளம் மடிப்பு மலையாகும்.  வடக்கே இருந்த அங்காரா நிலப் பகுதியும், தெற்கே இருந்த கோண்ட்வானா நிலப்பகுதியும்  ஒன்றை நோக்கி ஒன்று நகர்ந்ததால்  ஏற்பட்ட அழுத்தத்தின் காரணமாக இடையிலிருந்து டெத்திஸ் கடலில் என்ற கடல் மடிக்கப்பட்டு இமயமலை உருவானது .  இது பல மலைத்தொடர்களை உள்ளடக்கியது.  இவை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.. 

(i) பெரிய இமய மலைகள் அதாவது ஹிமாத்ரி 
(ii) சிறிய இமயமலை அதாவது ஹிமாச்சல்(வெளி இமயமலை)
(iii) சிவாலிக் பெரிய இமயமலை அல்லது ஹிமாத்ரி

(i) பெரிய இமயமலை 

பெரிய இமயமலை சிறிய இமயமலைக்கு வடக்கே மிக உயர்ந்து செங்குத்தாக அமைந்துள்ளது. இதன் சராசரி அகலம் 25 கிலோ மீட்டர் மற்றும் சராசரி உயரம் 6000 கிலோ மீட்டர் ஆகும். சிறிய இமயமலை மற்றும் சிவாலிக் குன்றுகளை ஒப்பிடும் போது இப்பகுதி குறைவான மழையை பெறுகின்றது.  மற்ற  மலைத் தொடர்களை ஒப்பிடும்போது இப்பகுதியில் பௌதீக சிதைவாகவே உள்ளது.  இமயமலையில் மிக உயர்ந்த சிகரங்களில் பெரும்பாலானவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன.   அதில் முக்கியமானவை எவரெஸ்ட் ஆகும்.  எவரெஸ்ட்  (8848 மீட்டர்) உயரம் கொண்டவை மற்றும் கஞ்சன் ஜங்கா  8586 மீட்டர் உயரம் கொண்டவையாகும்.  எவரெஸ்ட் சிகரம் நேபாளத்திலும் கஞ்சன் ஜங்கா சிகரம் நேபாளம் மற்றும் சிக்கிமிற்கும் இடையேயும் அமைந்துள்ளது.  இது மற்ற மலைத்தொடர்களை விட தொடர்ச்சியான மலைத் தொடராக அமைந்துள்ளது.  இம்மலையில் எப்போதும் நிரந்தரமாக பனி சூழ்ந்து காணப்படுவதால் கங்கோத்ரி, சியாச்சின் போன்ற பனியாறுகள் காணப்படுகின்றன. 

(ii) சிறிய இமயமலைகள் அல்லது ஹிமாச்சல் 

இதை இமயமலையின் மத்திய மலைத்தொடர் ஆகும்.  இதன் சராசரி அகலம் 80 கிலோமீட்டர் ஆகும். இதன் சராசரி உயரம் 3500 முதல் 4000 மீட்டர் வரை வேறுபடுகிறது. வெண்கற்பாறைகள் , சுண்ணாம்புப் பாறைகள் மற்றும் மணல் பாறைகள் இத்தொடரில்  காணப்படுகின்றன. நகரமயமாக்கல் , காடுகள் அழிப்பு மற்றும் மிக அதிக மழைப்பொழிவின் காரணமாக மண் அரிப்பு ஏற்படுகிறது. இம்மலைத்தொடரில் காணப்படும் மலைகள்  பீர்பாஞ்சல், தவ்லதார் மற்றும் மகாபாரத் ஆகிய மலைகள் இத்தொடரில் காணப்படுகின்றன. புகழ்பெற்ற கோடை வாழிடங்களான சிம்லா, முசெளரி, நைனிடால், அல்மோரா, ராணிகட் மற்றும் டார்ஜிலிங் போன்றவை இம்மலைத்தொடரில் அமைந்துள்ளன .

(iii) சிவாலிக் அதாவது வெளி இமயமலை 

வெளி இமய மலைத் தொடரானது ஜம்மு காஷ்மீரில் இருந்து அசாம் வரை நீண்டுள்ளது.  இத் தொடரின் ஒரு பகுதி ஆறுகளால் உருவாக்கப்பட்ட படிவுகளால் ஆனது.  இதன் உயரம் 900 மீட்டரிலிருந்து 1500 மீட்டர் வரை வேறுபடுகிறது . இதன் சராசரி உயரம் 1000 மீட்டர் ஆகும் . இதன் சராசரி அகலமானது மேற்கில் 50 கிலோ மீட்டர் முதல் கிழக்கில் 10 கிலோ மீட்டர் வரையும் மாறுபடுகிறது.  இது மிகவும் தொடர்ச்சியற்ற  மலைத் தொடர்களாகும். குறுகலான நீண்ட பள்ளத்தாக்குகள் சிறிய இமயமலைக்கும் வெளிப்புற இமயமலைக்கும் இடையில் காணப்படுகின்றன இவை கிழக்குப் பகுதியில் டூயர்ஸ் எனவும், மேற்குப் பகுதியில் டூண்கள் எனவும் அழைக்கப்படுகிறது.  இப்பகுதிகள் குடியிருப்புகளின் வளர்ச்சிக்கு ஏற்றதாக உள்ளது.  

3. பூர்வாஞ்சல் குன்றுகள் 

இவை இமய மலையின் கிழக்கு கிளையாகும் . இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது. பெரும்பாலான குன்றுகள் மியான்மர் மற்றும் இந்திய எல்லைகளுக்கு இடையே காணப்படுகின்றன.  மற்ற மலைகள் அல்லது குன்றுகள் இந்தியாவின் உட்பகுதிகளில் பரவியுள்ளன.  டாப்லா, அபோர், மிஸ்மி , பட்காய்பம், நாகா, மணிப்பூர், மிக்கீர், காரோ, காசி மற்றும் ஜெயந்தியா குன்றுகள் அனைத்தும் ஒன்றிணைந்து பூர்வாஞ்சல் மலைகள் என்று அழைக்கப்படுகின்றன.  

இமயமலையின் முக்கியத்துவம் 

தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து  வட இந்தியப் பகுதிக்கு கன மழையை கொடுக்கிறது. இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.  வற்றாத நதிகளின்  பிறப்பிடமாக உள்ளது.  சிந்து கங்கை பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகளை கொண்டது.  இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது.  பல கோடை வாழிடங்களுக்கும், புனித தலங்களான அமர்நாத் , கேதார்நாத்,  பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவிதேவி கோவில்களும் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளன. வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப் பொருட்களை அளிக்கிறது.   மத்திய ஆசியாவில் இருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து இந்தியாவை குளிரில் இருந்து பாதுகாக்கிறது.  இமயமலை பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை . 

இமயமலையின் நீள்வெட்டு  பிரிவுகள் 

காஷ்மீர் , பஞ்சாப்,  இமாச்சல் இமயமலைகள்  : சிந்து மற்றும் சட்லெஜ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ளன . 

குமாயுன் இமயமலைகள் : சட்லெஜ் மற்றும் காளி ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது.  

மத்திய நேபாள இமயமலைகள் : காளி மற்றும் திஸ்தா ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது .

அசாம் கிழக்கு இமயமலைகள் : திஸ்தா மற்றும் திகாங் ஆறுகளுக்கு  இடையே அமைந்துள்ளது. 


முக்கிய கணவாய்கள் : 

    காரகோரம் கணவாய் (ஜம்மு-காஷ்மீர்), சொஜிலா கணவாய் மற்றும் சிப்கிலா கணவாய்(இமாச்சலப்பிரதேசம்), மொமிடிலா கணவாய்(அருணாச்சலப்பிரதேசம், நாதுலா கணவாய் மற்றும் ஜெலிப்பா கணவாய்(சிக்கிம்) ஆகியன இமயமலையின் முக்கிய கணவாய்களாகும்.

       பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் பாகிஸ்தானில் உள்ள போலன் கணவாய் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள முக்கிய கணவாய்களாகும்.

பொம்மை வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Bottom Post Ad

Ads Area