Ads Area

ஐரோப்பியர் வருகை - போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் - TNPSC

இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே மிகப் பழங்காலம் தொட்டே தொடர்பு காணப்பட்டது. மேலும், அத்தொடர்பு அலெக்சாண்டர் வருகையால் மேலும் வலுவடைந்தது. இந்திய பொருளான பட்டு நறுமணப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஆடைகளுக்கு மற்றும் கைத்தறி ஆடைகள்  உள்ளிட்ட பொருள்களுக்கு வரவேற்பு காணப்பட்டது.

இந்தியாவில் மிளகு, மிளகாய் பட்டை, இஞ்சி, தேங்காய் சர்க்கரை, சாயப் பொருட்கள் போன்றவை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. மூன்று முக்கிய வழித்தடங்கள் மூலமாக நடைபெற்றது. 

அவை ,
1.ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் கடல் வழியாக கருங்கடல் தரைப் பகுதி வரையிலும் 
2.பாரசீகம் மற்றும் சிரியா வழியாக மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள அலெக்ஸாண்ட்ரியா வரையிலும் 
3.அரபிக்கடல் பாரசீக வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக கடல் மார்க்கம் ஆகிய மூன்று வழித்தடங்கள் வாயிலாக வியாபாரம் நடைபெற்றது.

1453 ஆம் ஆண்டு ஆட்டோமானிய துருக்கியர் கான்ஸ்டாண்டிநோபிள் நகரத்தைக் கைப்பற்றி ஐரோப்பியர்களுக்கு இடையூறு தந்தனர் வாணிபத்திற்கு தடை விதித்தனர் ஆப்கானிஸ்தான் வழியாக நடைபெற்ற வாணிபத்திற்கும் தடை விதித்தனர். 

அரேபியர்கள் படையெடுப்பின் விளைவாக மற்ற இரண்டு வழித்தடங்களும் கிபி எட்டாம் நூற்றாண்டில் தடைபட்ட எனவே ஐரோப்பியர்கள் இந்திய பொருட்கள் இன்றி அவதிப்பட்டனர் எப்படியாவது இந்திய பொருட்களை பெற வேண்டும் என்று பெரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் விளைவாக இந்தியாவிற்கு புதிய கடல் வழி காணும் முயற்சியில் இறங்கினர் ஐரோப்பியர்கள்.

போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் புதிய கடல் வழி கண்டுபிடிக்கும் முயற்சியில் முதலில் இறங்கியவர்கள் போர்ச்சுகீசியர்கள் ஒருவரான சர் ஹென்றி மாலுமிகளுக்கு பயிற்சி அளிக்க அறிவியல் முறையில் அமைந்த பள்ளி ஒன்று தொடங்கினார் இவருக்கு கடல் பயணத்தின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மாலுமி ஹென்றி என்றே போற்றப்பட்டார்

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பார்த்தலோமிய டயஸ் என்பவர் கிபி 1487 ஆம் ஆண்டு முதன் முதலில் கடல் பயணத்தை மேற்கொண்டார் ஆப்பிரிக்காவின் தென் கோடி முனையில் வந்தடைந்தார். அச்சமயத்தில் அங்கு அதிகமாக புயல் வீசியதால் ஆப்பிரிக்காவின் தென்கோடி முனை புயல் முனை என்று பெயரிட்டார். இதனைக் கடந்து சென்றால் புதிய பகுதிகளை காணலாம் என நம்பிக் கையை வெளிப்படுத்தினார் இதனால் புயல் முனை நன்னம்பிக்கை முனை என அழைக்கப்பட்டது.

வாஸ்கோடகாமா 

 

போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா நன்னம்பிக்கை முனையை கடந்து மொசாம்பிக் பகுதிக்குத் தனது பயணத்தைத் தொடர்ந்தார். மே 27 1498 ஆம் ஆண்டு இந்திய மாலுமி ஒருவரின் உதவியோடு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள கோழிக்கோடு (கள்ளிக்கோட்டை) வந்தடைந்தார். கள்ளிக்கோட்டை மன்னர் சாமொரின் அவரை வரவேற்று உபசரித்தார் மேலும் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவில் வாணிபம் நடத்த அனுமதி வழங்கினார். இரண்டாவது போர்ச்சுகீசிய மாலுமி பெட்ரோ அல்வாரிஸ் காப்ரல் என்பவர் வாஸ்கோடகாமாவின் கடல் வழியைப் பின்பற்றி 13 கப்பல்களில் சில 100 வீரர்களுடன் 1500ஆம் ஆண்டு கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்.

வாஸ்கோடகாமா 1501இல் இருபது கப்பல்களுடன் இரண்டாவது முறையாக இந்தியா வந்தடைந்தார். அப்பொழுது கண்ணனூரில் ஒரு வர்த்தக மையத்தை நிறுவினார். பின்னர் கள்ளிக்கோட்டை, கொச்சின் பகுதிகளிலும் வர்த்தக மையத்தை நிறுவினார். இதனால் கோபங்கொண்ட மன்னர் சாமரின் போர்ச்சுக்கீசியரைத் தாக்கினார். ஆனால் அவர் போர்ச்சுக்கீசியரால் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் கொச்சின் போர்ச்சுக்கீசிய கிழக்கிந்திய கம்பெனியின் முதல் தலைநகரமாயிற்று. 1524இல் வாஸ்கோடகாமா மூன்றாவது முறையாக இந்தியா வந்தபொழுது நோய்வாய்ப்பட்டு டிசம்பர் 1524 இல் கொச்சியில் காலமானார்.


பிரான்சிஸ்கோ -டி - அல்மெய்டா

பிரான்சிஸ்கோ -டி - அல்மெய்டா என்பவர் இந்தியாவிலிருந்த போர்ச்சுக்கீசிய பகுதிகளுக்கு 1505 இல் அனுப்பப்பட்ட முதல் ஆளுநர் ஆவார். இந்தியாவில் போர்ச்சுக்கீசிய கப்பற்படையை பலப்படுத்துவதே அல்மெய்டாவின் நோக்கமாக இருந்தது. அதற்காக அவர் பின்பற்றிய கொள்கை 'நீலநீர்க்கொள்கை எனப்பட்டது. இந்தியப் பெருங்கடலில் அரேபிய ஏகபோக வர்த்தகத்தை போர்ச்சுக்கீசியர் தகர்க்க முயன்றபோது அது எதிர்மறையாக துருக்கி மற்றும் எகிப்தை பாதித்தது. பீஜப்பூர் மற்றும் குஜராத் சுல்தான்கள் போர்ச்சுகீசியருக்கு எதிராக, எகிப்து மற்றும் துருக்கி சுல்தான்களுக்கு ஆதரவளித்தனர். இதனால் துறைமுகங்களின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவது குறித்தும் போர்ச்சுகீசியர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சாவலுக்கு அருகில் நடைபெற்ற கடற்படை போரில் முஸ்லீம் கூட்டுப்படைகள் போர்ச்சுகீசியரைத் தோற்கடித்தன. இப்போரில் அல்மெய்டாவின் மகன் கொல்லப்பட்டான். பின்னர் டையூவில் நடைபெற்ற கடற்போரில் அல்மெய்டா, முஸ்லீம் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தார். 

அல்போன்ஸ் டி அல்புகர்க் இவர் இரண்டாவது ஆளுநராகப் பதவியேற்றார் இவர் மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தார் .பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கிபி 1500 ஆம் ஆண்டு கோவாவை கைப்பற்றி அதனனை தலைநகராக மாற்றினார்.

விஜயநகரப் பேரரசுவுடன் தனது உறவை பலப்படுத்திக் கொண்டார். தூர கிழக்கு பகுதியில் அமைந்திருந்த மலக்கா தீவைக் கைப்பற்றினார். பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் என்ற இடத்தில் துறைமுகம் ஒன்றையும் கட்டினார். ஆதிக்கத்தை உண்மையாக நிலைநாட்டியவர் என்று போற்றப்படுகிறார் இவர் ஒரு சிறந்த நிர்வாகி. இந்துக்களிடம் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தினார்.

கல்வி வளர்ச்சிக்காக பல பள்ளிகளை திறந்தனர் போர்ச்சுகீசியர்கள் இந்தியப் பெண்களை திருமணம் செய்து கொள்வதை ஊக்குவித்தார். இவரின் சமயக் கொள்கை முஸ்லிம்களுக்கு எதிரானது.இதனால் முஸ்லிம்களின் செல்வாக்கினை இவர் இழக்கத் தொடங்கினார்.இவர் கிபி 1516 ஆம் ஆண்டு கோவாவில் காலமானார்.

நினோ -டி-குன்கா (1529-1538)

 

அல்புகர்க்குவிற்குப் பிறகு கவர்னரான நினோ-டி-குன்கா 1530இல் தலைநகரை கொச்சியிலிருந்து கோவாவிற்கு மாற்றினார். 1534இல் குஜராத்தின் பகதூர்ஷாவிடமிருந்து பசீன் பகுதியைக் கைப்பற்றினார். மேலும் 1537இல் டையூவைக் கைப்பற்றினார். பின்னர் குஜராத்தின் உள்ளூர்த் தலைவர்களிடமிருந்து டாமனைக் கைப்பற்றிய பின் சால்செட்டை 1548இல் ஆக்கிரமித்தார். இவ்வாறு போர்ச்சுக்கீசியர் 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் கோவா, டையூ, டாமன், சால்செட், பசீன், செளல் மற்றும் பம்பாய் போன்ற பகுதிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றனர். வங்காள கடற்கரையில் ஹூக்ளி, சென்னை கடற்கரையில் சாந்தோம் போன்ற பகுதிகளைக் கைப்பற்றினர். போர்ச்சுக்கீசியர் இந்தியாவில் புகையிலை சாகுபடியை அறிமுகப்படுத்தினர். போர்ச்சுக்கீசியரின் செல்வாக்கினால் கத்தோலிக்க கிறித்துவம் இந்தியாவின் கிழக்கு, மேற்கு கடற்கரையோர சில பகுதிகளில் பரவியது. 1556இல் போர்ச்சுக்கீசியரால் கோவாவில் அச்சு இயந்திரம் அமைக்கப்பட்டது. அச்சு இயந்திரத்தின் உதவியால் ஓர் ஐரோப்பிய எழுத்தாளர் 1563இல் கோவாவில் இந்திய மருத்துவ தாவரங்கள் என்ற நூலை அச்சிட்டு வெளியிட்டார். 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியஅதிகாரம் படிப்படியாக டச்சுவிடம் வீழ்ச்சியடைந்தது. மேலும் 1739ஆம் ஆண்டில் போர்ச்சுக்கீசிய அதிகாரம் கோவா, டையூ, டாமன் ஆகியவற்றோடு நின்றுபோனது.


இவரது மறைவிற்கு பிறகு போர்ச்சுகீசியர்கள் டாமன் டையூ பம்பாய் இலங்கை போன்ற பகுதிகளை கைப்பற்றினர் சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களின் ஆதிக்கம் படிப்படியாக இந்தியாவில் வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கான காரணங்கள்:

அல்புகர்க்கு பிறகு வந்தவர்கள் திறமை அற்றவர்களாக இருந்தார்கள் இவர்களால் போர்ச்சுகீசியர்களின் செல்வாக்கை காக்க இயலவில்லை போர்ச்சுகீசியர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏராளமான இந்தியர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினார். முஸ்லிம்களின் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிரான பகைமையை ஏற்படுத்தியது. போர்ச்சுகீசியர்கள் விஜயநகர பேரரசர்கள் மட்டுமே உறவு கொண்டிருந்தனர் ஆனால் விஜயநகரப் பேரரசுக்கு 1565 நடைபெற்ற தலைக்கோட்டைப் போருக்குப் பின் வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இது போர்த்துக்கீசிய வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது. போர்ச்சுக்கல் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் வந்தது.

டச்சு

போர்ச்சுகீசியர்களின் வீழ்ச்சிக்கு பிறகு டச்சுக்காரர்கள் இந்தியாவில் வருகை புரிந்தனர். கிபி 632 ஆம் ஆண்டு ஹாலந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒன்று சேர்ந்து டச்சு கிழக்கிந்திய கம்பெனி என்ற நிறுவனத்தை தோற்றுவித்தனர் இவர்கள் கீழை நாடுகளுடன் வியாபாரம் செய்ய ஈடுபட்டனர். இவர்களுக்கு இந்தியாவின் மீது அதிக ஆர்வம் இல்லை. நறுமணத்தீவுகளின் மீது இவர்கள் அதிக நாட்டம் செலுத்தினர். இருப்பினும் இவர்கள் இந்தியாவில் சின்சுரா, நாகப்பட்டினம், சூரத் மற்றும் மசூலிப்பட்டினத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவினார். கிபி 1602 ஆம் ஆண்டு புலிகாட் ஏரி என அழைக்கப்படும் பழவேற்காட்டில் தங்கள் தளத்தை நிறுவி அங்கு கோட்டை ஒன்றைக் கட்டினர் இது டச்சுக்காரர்களின் தலைமை இடமாக திகழ்ந்தது 

பின்னர் கி.பி.1605இல் போர்ச்சுக்கீசியரிடமிருந்து அம்பாய்னாவை கைப்பற்றி இந்தோனேசியா தீவில் (Spice Island) ஆதிக்கத்தை நிலை நிறுத்தினர். மேலும் போர்ச்சுக்கீசியரிடமிருந்து நாகப்பட்டினத்தைக் கைப்பற்றி, தென்னிந்தியாவில் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டனர். ஆரம்பத்தில் பழவேற்காடு (Pulicat) டச்சுக்காரர்களின் தலைநகராக இருந்தது. பின்னர் 1690இல் பழவேற்காட்டிலிருந்து தலைநகரை நாகப்பட்டினத்திற்கு மாற்றிக் கொண்டனர். இந்தியப் பொருட்களான பட்டு, பருத்தி, இண்டிகோ, அரிசி மற்றும் அபினி ஆகியவை டச்சுக்காரர்கள் வர்த்தகம் செய்த பொருட்களாகும். கருப்பு மிளகு மற்றும் மற்ற நறுமணப் பொருட்கள் மீதான வியாபாரத்தில் அவர்கள் ஏகபோக உரிமை பெற்றிருந்தனர். இந்தியாவில் பழவேற்காடு, சூரத், சின்சுரா, காசிம்பஜார், பாட்ன , நாகப்பட்டினம், பாலசோர் மற்றும் கொச்சின் போன்ற இடங்களில் அவர்களது முக்கிய வர்த்தக மையங்கள் இருந்தன.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 17ஆம் நூற்றாண்டு முழுவதும், டச்சு மற்றும் போர்ச்சுக்கீசியர்களுக்குப் போட்டியாக இருந்தது. இந்நிலையில் 1623இல் டச்சுக்காரர்கள் அம்பாய்னாவில் பத்து ஆங்கில வியாபாரிகள் மற்றும் ஒன்பது ஜப்பானியர்களை இரக்கமின்றி கொன்றனர். இந்நிகழ்வு டச்சு மற்றும் ஆங்கிலேயர்களிடையே மேலும் பகைமையை வளர்த்தது. 1759இல் நடைபெற்ற பெடரா போரில் ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்களைத் தோற்கடித்தனர். தொடர்ந்து டச்சு இறுதி வீழ்ச்சியை எட்டியது. ஒன்றன் பின் ஒன்றாக தனது குடியேற்றங்களை ஆங்கிலேயரிடம் இழந்த டச்சு 1795இல் முழுமையாக ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தது.

தமிழ்நாட்டில் டச்சுக்காரர்கள்

1502 முதல் பழவேற்காட்டின் மீது கட்டுப்பாட்டை ஏற்படுத்திய போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்களால் தங்களின் ஆதிக்கத்தை இழந்தனர். பழவேற்காட்டில் டச்சுக்காரர்கள் 1613இல் கெல்டிரியா கோட்டையைக் கட்டினர். இந்தக் கோட்டை ஒரு காலத்தில் டச்சு அதிகார மையத்தின் இருப்பிடமாக இருந்தது.

அக்காலத்தில் பழவேற்காட்டிலிருந்து வைரங்கள் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. நாகப்பட்டினம், புன்னக்காயல், பரங்கிப்பேட்டை (Porto Novo) கடலூர் மற்றும் தேவனாம்பட்டினம் ஆகியன டச்சுக்காரர்களின் கோட்டைகள் மற்றும் கைப்பற்றிய பகுதிகளாகும்.

ஐரோப்பியர் வருகை - போர்த்துகீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும். 

Top Post Ad

Bottom Post Ad

Ads Area