Ads Area

வேதகாலம் - ஆரியர் வருகை - பொருளாதார வாழ்க்கை - TNPSC Indian History

ஆரியர்களின் பூர்வீகம் அவர்கள் இந்தியாவிற்குள் குடியேறிய விதம்,வேத காலம்,தொடக்க மற்றும் பின் வேத கால மக்கள் வாழ்ந்த பகுதிகள், தொடக்க காலத்திற்கும் இந்தக் காலத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றை  அறிந்து கொள்ளலாம் வாருங்கள்..

வேதகாலம்

       சிந்துவெளி நாகரிகத்திற்கு பிறகு உருவான ஒரு காலகட்டம் தான் வேதகாலம்.

         ரிக்,யஜூர்,சாம,அதர்வண வேதங்களின் காலக்கட்டம் என்பதால் இது வேத காலம் ஆனது.

            வேதகாலம் கி.மு 1500 லிருந்து 600 காலகட்டத்தை சார்ந்தது.

ஆரியர்கள் வருகை:

ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து அலை அலையாக குடிபெயர்ந்து இந்து குஷ் மலையில் உள்ள கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் .இந்தோ-ஆரிய மொழி பேசும் இவர்கள், இடம் விட்டு இடம் குடிபெயர்ந்த செல்லக்கூடிய கால்நடை மேய்ப்பவர்கள் . கால்நடை மேய்ப்பது இவர்களின் முதன்மைத் தொழில் என்றாலும் அழித்து எரித்து சாகுபடி செய்யும் முறையையும் பின்பற்றினர். அழித்து எரித்து சாகுபடி செய்யும் வேளாண் முறை என்பது நிலத்தின் மீதுள்ள மரங்கள் மற்றும் செடி கொடிகள் அனைத்தும் வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு வேளாண்மை செய்யும் முறை ஆகும்.அதன்பின் கைவிடப்பட்டு பின்னர்  மற்றோரிடத்தில் இதேபோன்று வேளாண்மை செய்ய தொடங்குவர்...

ஆரியர்கள் இந்தியாவில் அவர்களின் வாழ்விடங்களும் 

ரிக் வேத கால ஆரியர்கள் நாடோடிகள் அவர அடிப்படையில் மேய்ச்சல் சமூகத்தினரான அவர்களுக்கு கால்நடைகளே முக்கிய சொத்து.. ரிக் வேத காலத்தில் ஆரியர்களின் வாழ்விடம் பஞ்சாப் ஆகும். அப்போது அப்பகுதி சப்தசிந்து அதாவது ஏழு ஆறுகள் ஓடும் நிலப்பகுதி என்று அழைக்கப்பட்டது. ஏறத்தாழ கிமு ஆயிரத்திலிருந்து ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து சிந்து கங்கைச் சமவெளியில் குடியமர்ந்தனர். இரும்புக் கோடரி இரும்பினாலான கொழு முனையை கொண்ட கலப்பை ஆகியவற்றை பரவலாக பயன்படுத்தினர்...

சான்றுகள் 

வேதகால சான்றுகள் 

வேதகால இலக்கியங்களை இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 

1.ஸ்ருதிகள்

நான்கு வேதங்கள், பிராமணங்கள், ஆரண்யங்கள் மற்றும் உபநிடதங்களை உள்ளடக்கியது ஆகும் அவைகள் புனிதமானவை, நிலையானவை, கேள்விகள் கேட்கப்பட முடியாத உண்மை எனக் கருதப்படுபவை.ஸ்ருதி என்பது கேட்டல் அல்லது எழுதப்படாத எனும் பொருள் கொண்டது.இவை வாய் மொழி வாயிலாக அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டன .

2.ஸ்மிருதிகள்:

ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இதிகாசங்கள் ஆகிய மதம் குறித்த போதனைகள் கொண்ட நூல்கள் ஆகும். அவை நிலையானவை அல்ல தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகக் கூடியவை.ஸ்மிருதி என்பதன் பொருள் இறுதியான எழுதப்பட்ட பிரதி ஆகும்....



தொல்பொருள் சான்றுகள்  


சிந்து மற்றும் கங்கை நதி பகுதிகளிலும் பஞ்சாப் உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய தொல்லியல் ஆய்விடங்களிலும் கிடைத்துள்ள இரும்புக் கம்பிகள் மட்பாண்டங்கள் ஆகியன..

பொருளாதார வாழ்க்கை 
 
வேதகால பொருளாதாரமானது. கால்நடைகளும் வேளாண்மையும் கலந்ததாகும். ரிக் வேத கால ஆரியர்களின் முதன்மைத் தொழில் கால்நடைகள் மேய்த்தல் என்றாலும் மரவேலை செய்வோரும் மட்பாண்டங்கள் செய்வோரும் உலோக வேலை செய்வோரும் துணி நெய்யும் வேலை செய்வோரும் தோல் வேலை செய்பவர்களும் இருந்தனர். பழுப்பு மஞ்சள் நிற மட்பாண்டங்கள் இக்காலத்தை சேர்ந்தவையாகும்.


குதிரைகள், பசுக்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் நாய்கள் வீட்டு விலங்குகளாக பழக்கப்படுத்தப்பட்டிருந்தன.சிந்து மற்றும் பஞ்சாப் பகுதிகளில் ஆரியர்கள் நிரந்தரமாக குடியேறி பின் அவர்கள் வேளாண்மை செய்ய தொடங்கினர்.யவா (பார்லி) அவர்களின் முதன்மைப் பயிராகும் பருத்தி,கோதுமை ஆகியவை சிந்துவெளி மக்கள் பயிர் செய்யப்பட்ட போதிலும், ரிக்வேதத்தில் அவைகள் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொரு வருடமும் இரு போகம் சாகுபடி செய்யப்பட்டது.பின் வேத காலத்தில் ஆரியர்கள் பசு வெள்ளாடு செம்மறி ஆடு குதிரை மட்டுமல்லாமல் யானைகளையும் பழக்கப்படுத்தினர்.

தொடக்க வேதகால கைவினைஞர்களோடு நகை செய்வோர்,செய்வோர் சாயத்தொழில் செய்வோர் உலோகங்களை உருக்குவோர் சமூகத்தில் இடம்பெற்றிருந்தனர். இக்கால பண்பாடு வர்ணம் தீட்டப்பட்ட சாம்பல் நிற மட்பாண்ட பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.கொழுமுனை கொண்ட கலப்பை மற்றும் இரும்புக் கோடரி ஆகியவற்றின் உதவியோடு அதிக அளவிலான இடங்களில் வேளாண்மை செய்யப்பட்டது. நெல் கோதுமை பார்லி ஆகியன பயிர் செய்யப்பட்டன.வேளாண்மை வளர்ச்சி பெற்றதால் நிலத்தின் மீது தனி உரிமை உருவானது. புதிய தொழில்களும் கலைகளும் வளர்ந்து உபரி உற்பத்தி ஏற்பட்டு வணிகம் பெருகியது. பண்டமாற்று முறை பரவலாக காணப்பட்டது. அவர்கள் 'நிஷ்கா' 'சத்மனா' என்னும் தங்க நாணயங்களையும் 'கிறிஸ்னாலா' என்னும் வெள்ளி நாணயங்களையும் வணிகத்தில் பயன்படுத்தினார். ரிக்வேத காலத்தில் மக்கள் அறிந்திருந்த உலோகங்கள் தங்கம் (ஹிரண்யா) இரும்பு(சியாமா) செம்பு தங்கம்(அயாஸ்) போன்றவை ஆகும்..



அடுத்த பதிவில் வேதகாலத்தின் கல்வி,சமூகம்,பண்பாடு ஆகியவற்றைப் பார்ப்போம்..

வேதகாலம் - ஆரியர் வருகை - பொருளாதார வாழ்க்கை பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.




 

Bottom Post Ad

Ads Area