Ads Area

இந்திய இயற்கையமைப்பு - புவியியல் - TNPSC Geography


இயற்கையமைப்பு : 

ஒரு நாட்டின் இயற்கை நிலத்தோற்றங்களைப் பற்றி விவரிப்பது இயற்கை அமைப்பு எனப்படும். இந்தியா பெரிதும் மாறுபட்ட தோற்றங்களைக் கொண்ட நாடாகும்.   இந்திய தீபகற்ப பீடபூமி புவியிலுள்ள  உறுதியான தொன்மையான பாறை அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது.  இந்தியா வடக்கிலுள்ள கம்பீரமான இமய மலை முகடுகளையும், தெற்கில் அழகான கடற்கரைகளையும், மேற்கில் இந்திய பாலைவனத்தையும், கிழக்கில்  புகழ்பெற்ற இயற்கை பாரம்பரியத்தையும் கொண்ட சிறந்த புவியியல் தோற்றங்களை கொண்ட வல்லமை பெற்ற நாடாக அமைந்துள்ளது. இந்திய நிலப்பகுதி பல மாறுபட்ட இயற்கை நிலத்தோற்றங்களைப் பெற்றுள்ளது இந்தியாவின் இயற்கை அமைப்பை 6 பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. இமய மலைகள்  உள்ளிட்ட மலைத்தொடர்கள் 

       இமயமலை மேற்கு இமயமலை அல்லது டிரான்ஸ் இமயமலை, மத்திய இமயமலை, கிழக்கு இமயமலை அல்லது பூர்வாஞ்சல் குன்றுகள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரவல்லி மலைத்தொடர், சாத்பூரா மலைத்தொடர், விந்தியா மலைத்தொடர், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் ஆகிய மலைத்தொடர்களை பற்றியும் காண்போம். 

2. வட இந்திய பெரும் சமவெளிகள் 

        வட இந்திய பெரும் சமவெளிகள் இராஜஸ்தான் சமவெளி, பஞ்சாப் - ஹரியான சமவெளி, கங்கைச்சமவெளி, பிரம்மபுத்திரா சமவெளி என நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

3. பீடபூமிகள்  

பீடபூமிகள் மாளவ பீடபூமி, சோட்டாநாகபுரி பீடபூமி, தக்காண பீடபூமி என பிரிக்கலாம். 

4. இந்திய பாலைவனம் 

5. கடற்கரை சமவெளிகள் 

கடற்கரை சமவெளிகள் இரண்டு வகைப்படும் :
1. மேற்கு கடற்கரை சமவெளி
2.  கிழக்கு கடற்கரை சமவெளி)

6. தீவுகள்
(அந்தமான் நிக்கோபர் தீவுகள், இலட்சத்தீவுகள் மற்றும் இதர கடல் தீவுகள்) 

இவை மட்டுமல்லாமல், இன்னும் சில வளங்களும் இயற்கையமைப்பு பிரிவில் அடங்குகின்றன. 

காடுகள்

பசுமை மாறாக்காடுகள்
பருவக்காற்று காடுகள் 
குறுங்காடு மற்றும் முட்புதர் காடுகள் 

இயற்கைத் தாவரங்கள் 

மலைத்தாவரங்கள்
இலையுதிர் தாவரங்கள்
பாலைவனத்தாவரங்கள்
சதுப்பு நிலத்தாவரங்கள்

மண் வகைகள் 

வண்டல்
கரிசல்
செம்மண் 
சரளை 
மலை மண்)

வடிகாலமைப்பு

ஆறுகள் 
ஏரிகள்

கனிம வளங்கள்

உலோகம் மற்றும் உலோகமற்ற கனிமங்கள்

காலநிலை 
மழைப்பொழிவு
வேளாண் வளங்கள்

உணவுப்பயிர், 
பணப்பயிர் மற்றும் தோட்டப்பயிர் 




Bottom Post Ad

Ads Area