வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் பிறமொழிச்சொற்களை கண்டறிதல் பற்றி பார்த்தோம் அல்லவா (பார்க்காதவர்கள் பார்க்க)
இந்தப்பகுதியில் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல் பற்றி பார்க்கலாம் வாங்க..
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல்:
ஒரு ஆங்கிலச் சொல்லைக் கொடுத்துவிட்டு அந்தச் சொல்லுக்கு இணையான பொருள் தரக்கூடிய தமிழ்ச்சொல்லை கண்டறிந்து விடை அளித்தல் வேண்டும்..
வினா எப்படி கேட்கப்படும்?
உதாரணம்:
Passport - என்ற சொல்லுக்கு இணையான தமிழ்சொல்லைக்கண்டறிக.
ஆளறி சான்றிதல் கடவுச்சீட்டு ஒப்புகைசீட்டு அடையாள அட்டை
அசல் வினாத்தாள்:
Admission
|
சேர்க்கை
|
Agency
|
முகவாண்மை
|
Accident
|
நேர்ச்சி
|
Automobile
|
தானியங்கி
|
Bench
|
விசிப்பலகை
|
Binding
|
கட்டமைப்பு
|
chalk piece
|
சுண்ணக்கட்டி
|
Ever silver
|
நிலைவெள்ளி
|
Lorry
|
சரக்குந்து
|
Plastic
|
நெகிழி
|
Photocopy (Xerox)
|
ஒளிப்படி
|
Company
|
குழுமம்
|
Tea Stall
|
தேனீர் அங்காடி
|
Document
|
ஆவணம்
|
Passport
|
கடவுச்சீட்டு
|
Visa
|
நுழைவு இசைவு
|
Champion
|
வாகை சூடி
|
Proposal
|
கருத்துரு
|
Visiting card
|
காண்புச்சீட்டு
|
Central Government
|
நடுவண் அரசு
|
Agent
|
முகவர்
|
Allergy
|
ஒவ்வாமை
|
Technical
|
தொழில்நுட்பம்
|
Key
|
திறவுகோல்
|
Irregular
|
ஒழுங்கற்ற
|
License
|
உரிமம்
|
Lift
|
மின்தூக்கி
|
Laptop
|
மடிக்கணினி
|
Planet
|
கோள்
|
Search Engine
|
தேடுபொறி
|
Fax
|
தொலை நகலி
|
Missile
|
ஏவுகணை
|
Bonafide
|
ஆளறி சான்றிதழ்
|
Deposit
|
இட்டு வைப்பு
|
Receiver
|
அலை வாங்கி
|
Print out
|
அச்சுப் படி
|
Tele Print
|
தொலை அச்சு
|
Telex
|
தொலை வரி
|
Password
|
கடவுச் சொல்
|
Mammal
|
பாலூட்டி
|
Photo Graph
|
நிழற்படம்
|
Insurance
|
ஈட்டுறுதி
|
Assurance
|
காப்பீடு
|
Traitor
|
துரோகி
|
Attestation
|
சான்றொப்பம்
|
Fiction
|
புனைக்கதை
|
Compounder
|
மருந்தாளுநர்
|
Research Centre
|
ஆராய்ச்சி நிலையம்
|
E-Mail
|
மின்னஞ்சல்
|
Probationary Period
|
தகுதிகாண் பருவம்
|
Temporary
|
தற்காலிகம்
|
Mortuary
|
பிணக்கிடங்கு
|
Permanent
|
நிரந்தரம்
|
Keyboard
|
விசைப்பலகை
|
Attendance Register
|
வருகைப் பதிவேடு
|
Interview
|
நேர்காணல்
|
Ultra Sound Scanning
|
மீயொலி வரிக் கண்ணோட்டம்
|
Remote Sensing
|
தொலை உணர்தல்
|
Acknowledgement Card
|
ஒப்புகை அட்டை
|
ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.