எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » வேத காலம் - சமூக அரசியல் மற்றும் பெண்களின் நிலை - TNPSC Indian History

வேத காலம் - சமூக அரசியல் மற்றும் பெண்களின் நிலை - TNPSC Indian History


வேத காலத்தை இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தலாம் 

1. தொடக்க வேதகாலம் (கி.மு1500 லிருந்து 1000 வரைக்கும்) 
2. பின் வேத காலம் (கிமு 1000 லிருந்து 600 வரைக்கும்)


அரசியலும் சமூகமும் 

      நான்மறைகளில் ஒன்றான ரிக் வேதம் முன்வேத காலத்தில் தோன்றியது. அதுமட்டுமல்லாமல் வேதங்களில் பழமையானதும் ரிக் வேதமே ஆகும்.  ரிக் வேதத்தில் 10 பகுதிகளும் 1028 பாடல்களும் உள்ளன.  ரிக் வேதம் என்பது கடவுளை புகழ்ந்து பாடும் துதிப்பாடல். இதன் 3-வது பாகத்தில் தான் காயத்ரி மந்திரம் உள்ளது. 

      ரிக்வேத கால அரசியல் ரத்த உறவுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். குலம் என்பதை அரசியலின் அடிப்படை அலகாகும். அதன் தலைவர் குலபதி  என்றும் கிரகபதி என்றும் அழைக்கப்படுகிறார். பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஒரு கிராமமாகும். கிராமத்திற்கு கிராமணி தலைவராவார். பல கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு விஸ் (குலம்)என அழைக்கப்பட்டது அதற்கு குலம் என்று பொருள்.  இதன் தலைவர் விஜயபதி என அழைக்கப்படுகிறார்.அதாவது இனக் குழுவின் தலைவர் ராஜகோபால் அதாவது மக்களின் பாதுகாவலர் எனப்பட்டார்.   ரிக்வேத காலத்தில் பல இனக்குழுக்கள் அதாவது அரசுகள் இருந்தன.  

  தனது இனத்தை சேர்ந்தவர்களை பாதுகாப்பதே ராஜனின் முக்கிய பொறுப்பாகும் அதாவது ராஜன் என்று சொல்லக்கூடிய அரசரின் முக்கிய பொறுப்பாகும்.அரசப்பபதவி பரம்பரை உரிமையாக கருதப்பட்டது. அவருடைய அதிகாரம் இனக்குழு மன்றங்களான விதாதா, சபா, சமிதி, கணா ஆகிய அமைப்புகளால் கட்டுப்படுத்தப்பட்டது. இவைகளில் விதாதா (இனக்குழுவின் பொதுக்குழு) மிகப் பழமையானதாகும்.அரசர் தனக்கு நிர்வாகத்தில் உதவி செய்வதற்காக  4 பிரிவுகளை உருவாக்கினார். 

1.தலைமை குரு அதாவது புரோகிதர் ஒருவரை பணியில் அமர்த்திக் கொள்வார்.   
2.அரசியல் பொருளாதாரம் ராணுவம் தொடர்பான விஷயங்களில் அரசனுக்கு சேனானி அதாவது படைத்தளபதி உதவி செய்வார் .
3.சபா என்னும் மூத்தவர்களை கொண்ட மன்றம் மற்றும் சமிதி என்பது ஊர்மக்கள் அவை 
4.விதாதா என்னும் போர்ப்பணி மற்றும் சமயப்பணி ஆற்றும் அமைப்பு 

ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்து கங்கை யமுனை நதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் குடியேறிய போது தொடக்ககால குடியேற்றங்கள் மாற்றம் பெற்று பிரதேச அரசுகளாயின. குடியாட்சி முறையில் அரசனின் அதிகாரங்கள் அதிகரித்தன.அரசர் தனது நிலையை வலுப்படுத்திக் கொள்ள பல சடங்குகளையும் யாகங்களையும் நடத்தினார்.   

முன்வேத காலத்தில் இராஜசூயம், அசுவமேதம், வாஜ்பேயம் போன்றவை நடைபெற்றன. பெண்கள் யாகங்களில் அனுமதிக்கப்பட்டனர்.  

முன்வேத காலத்தில் ஆண்கள் வேட்டி, சால்வை, தலைப்பாகை அணிந்தனர்.  பெண்கள் வாசஸ் என்கிற உள்ளாடையும், அதிவாசஸ் என்கிற மேலாடையையும், நிவி என்கிற இடுப்பில் உடுத்தும் ஆடையையும் அணிந்தனர். 

போக்குவரத்திற்கு பெரிதும் குதிரைகளே பயன்படுத்தப்பட்டன.  மக்கள் சோம பானம், சுரா பானம் (பார்லியிலிருந்து கிடைப்பது) ஆகிய பானங்களை அருந்தினர்.  சோம பானம் தாவரங்களின் கடவுள் என அழைக்கப்பட்டது.

பின் வேதகாலம்:

பின் வேதகாலத்தில்  பல ஜனாக்கள் அல்லது இனக்குழுக்கள் இணைக்கப்பட்டு ஜனபதங்கள் அல்லது ராஷ்டிரங்கள்  உருவாகின. 

சமிதி சபா ஆகியவை தங்கள் முக்கியத்துவத்தை இழந்தன. விதாதா என்ற மன்றம் இல்லாமல் போனது. பாலி என்பது மக்கள் தாங்களாகவே மனமுவந்து அரசுக்கு கொடுத்த காணிக்கையாகும். 

பின் வேதகாலத்தில் இது ஒரு வழியாக மாற்றம் பெற்று மக்களிடமிருந்து தொடர்ந்து முறையாக வசூல் செய்யப்பட்டது.  குரு மற்றும் பாஞ்சால அரசுகள் செழித்தோங்கிய காலமிது. 

மேலும் அயோத்தி, இந்திரப்பிரஸ்தம், மதுரா போன்ற நகரங்களும் பின்வேத காலத்தில் உருவாகின.  எனவே, பின்வேத காலத்தினை இதிகாச காலம் எனவும் அழைத்தனர். 

பின்வேத காலத்தில் தான் யஜீர், சாம, அதர்வண வேதங்கள் தோன்றின.  பாலி என்பது ஒரு வரியின் பெயராகும். ஒருவர் தனது விவசாய மகசூலில் அல்லது கால்நடைகளில் 1/6 பங்கை வரியாக செலுத்த வேண்டும்.   வேத காலத்தின் சமூக அமைப்பு வேதகால சமூகம் தந்தை வழிச் சமூகமாகும்.  வெள்ளை நிறம் கொண்ட ஆரியர்கள் கருப்பு நிற தோல் கொண்ட ஆரியரல்லாதவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொண்டனர்.   கருப்பு நிற ஆரியர் அல்லாத மக்களை தசயுக்கள்,  தாசர்கள் என்று அழைத்தனர்.   தொடக்க வேத கால சமுதாயத்தில் மூன்று பிரிவுகள் காணப்பட்டன . பொதுமக்கள் விஸ் என்று அழைக்கப்பட்டனர் . போர்வீரர்கள் சத்ரியர்கள் எனவும் மதகுருமார்கள் பிராமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர்.  

பிற்காலகட்டத்தில் திறன் கொண்ட ஆரியர் அல்லாத மக்களை ஆரியர்கள் தனது சமுதாய ஏற்பாடு கொண்டு வர நேர்ந்தது.  அப்போது நான்கு இறுக்கமான வர்ண அமைப்பு உருவாக்கப்பட்டது. அவை :
1. மதகுருவான பிராமணர்
2. போரிடும் சத்ரியர் 
3. நில உடைமையாளர்களான வைசியர்
4. அரசியல் வேலைத் திறன் கொண்ட சூத்திரர் 

இவ்வாறு நான்கு படி இலைகள் கொண்ட சமூக ஒழுங்கு உருவாக்கப்பட்டது.  வேதகாலம் குறித்து கற்க அதிக அளவு இலக்கிய சான்றுகள் இருக்கின்ற போதிலும் பயன்பாட்டுப் பொருள் சான்றுகள், போதுமான அளவு இல்லை. 

பின்வேத காலத்தில் அரசர்கள் சூட்டிக்கொண்ட பட்டப்பெயர்கள் :   

ஏக்ராட், சாம்ராட், சர்வபௌமர் 

பின்வேத காலத்தில் உருவான வேதங்கள் : 

சாம வேதம் : இசையோடு இறைவனைத் துதிப்பதற்காக பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.  சாம வேதம் துருபத ராகத்தில் பாடப்பட வேண்டும்.  இந்திய இசை மரபின் அடித்தளம் என சாம வேதம் அழைக்கப்படுகிறது.

யஜுர் வேதம் : யாகம் செய்வதற்கான நடைமுறைகளை விளக்குகிறது.

அதர்வண வேதம் : மந்திர தந்திரங்களை பற்றி குறிப்பிடுகிறது.  அதர்வண வேதத்தின் மற்றொரு பெயர் பிரம்ம வேதம் ஆகும். 

வேதங்களின் துணை வேதங்கள் :

முன்வேத காலத்தில் தோன்றிய ரிக் வேதத்தின் துணை வேதம் ஆயுர்வேதம் ஆகும். (மருத்துவம் பற்றி)

யஜுர் வேதத்தின் துணை வேதம் தனூர் வேதம் ஆகும். (போர்க்கலை பற்றி)

சாம வேதத்தின் துணை வேதம் காந்தர்வ வேதம் ஆகும்.(பாடல்களைப் பற்றி)

அதர்வண வேதத்தின் துணை வேதம் சில்ப வேதம் ஆகும்(கட்டிட கலைப் பற்றி)

சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்ற சொற்றொடர் முண்டக உபநிஷத் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது ஆகும்.

வேதகாலத்தில் பெண்களின் நிலை :  

ரிக்வேத காலத்தில் அதாவது முன்வேதகாலத்தில் பெண்கள் சமூகத்தில் ஓரளவு சுதந்திரம் பெற்று உள்ளனர்.  மனைவி குடும்பத்தின் தலைவியாக மதிக்கப்பட்டார்.  பெண்கள் தனது கணவருடன் தமது வீட்டில் சடங்குகள் நடத்தினார்.  திருமணத்தையும் உடன்கட்டை ஏறுதலை அறிந்திருக்கவில்லை.  கைம்பெண்கள் மறுமணம் செய்ய தடைகள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் பெற்றோரிடமிருந்து சொத்துக்களைப் பெறும் சொத்துரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பொது நிகழ்வுகளில் பெண்கள் எந்த பங்கும் வகிக்கவில்லை.  

பின்வேத காலத்தில் சமூகத்தில் மட்டுமின்றி குடும்பத்திலும் பெண்களின் பங்கும் அவர்களுக்கான நிலையில் குறைந்து போனது. பெண்கள் குடும்பத்தில் சடங்குகளை நடத்த முடியாத நிலை உருவானது.  திருமணம் தொடர்பான விதிகள் இறுக்கமும் குழப்பமும் பெற்றன.  பலதாரமணம் சாதாரணமாக நடைபெற்றது.  மறுமணத்திற்கு ஊக்கம் அளிக்கப்படவில்லை.  பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. சாதிகளுக்கு இடையிலான திருமணம் நிராகரிக்கப்பட்டது.  

பெண் குழந்தைகள் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம் எனக் கூறும் நூல் அஸ்தேய பிராமணம் ஆகும்.

வேத காலத்தில் மதம் :

ரிக் வேத கால ஆரியர்கள் பெரும்பாலும் நிலம் மற்றும் ஆகாய கடவுள்களை வழிபட்டனர். பிரித்வி அதாவது நிலம், அக்னி(நெருப்பு), வாயு (காற்று), வருணன் (மழை), இந்திரன்(இடி) போன்றவற்றை வணங்கினர்.  மேலும் அதிதி (நித்தியக் கடவுள்) உஷா (விடியற்காலை தோற்றம்) ஆகிய குறைவான பெண் தெய்வங்களை வணங்கினர். 

அவர்களின் மதம் சடங்கு முறைகளை மையமாகக் கொண்டது. வேத மந்திரங்களை பாராயணம் செய்வதே வழிபாட்டு முறையாக இருந்தது.  குழந்தைகள்(பிரஜா), பசு(கால்நடைகள்), செல்வம்( தனா) ஆகியவற்றை நலனுக்காக மக்கள் தெய்வங்களை வழங்கினார்கள். 

பசு புனிதமான விலங்காக கருதப்பட்டது. அக்காலத்தில் கோவில்களில் சிலை வழிபாடும் வழக்கத்தில் இல்லை.  பின்னாளில் மதகுருவாக இருப்பது ஒரு தொழிலாகவும் அது பரம்பரை தொழிலாகவும் ஆனது. 

இந்திரனும் அக்னியும் முக்கியத்துவத்தை இழந்தனர்.  பிரஜாபதி அதாவது படைப்பவர், விஷ்ணு(காப்பவர்),  ருத்ரன் (அழிப்பவர்) ஆகிய கடவுளர்கள் முக்கியத்துவம் பெற்றனர்.வேள்விகளும் சடங்குகளும் மிகவும் விரிவடைந்தன.

வேத காலத்தில் கல்வி

குருகுலக் கல்வி முறை என்பது பழங்கால கற்றல் முறையாகும். குருகுலம் என்னும் சொல் குரு(ஒரு ஆசிரியர்) குலம் (குடும்பம், வீடு) என்ற இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கூட்டாகும். இம்முறையில் மாணவர்கள்  குருவுடன் தங்கியிருந்து அவருக்கு சேவை செய்வதோடு கல்வியும் கற்று அறிவை பெருக்கிக் கொள்வர்.   வாய்மொழி மரபில் மாணவர்கள் பாடங்களை கற்றனர்.  கற்றவை அனைத்தையும் மாணவர்கள் மனப்பாடம் செய்தனர்.  நான்கு வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், இலக்கணம், தர்க்கவியல், நெறிமுறைகள், ஜோதிடம், கணிதம், ராணுவ உத்திகள் ஆகியன மாணவர்களுக்கு கற்றுத் தரப்பட்டன.   ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வதற்கான பயிற்சியும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  இரு பிறப்பாளர்கள் மட்டுமே குருகுலத்தில் மாணவர்களாக சேர்க்கப்படுவர். பெண்களுக்கு பொதுக்கல்வி அளிக்கப்படவில்லை .

முன்வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் : அபாலா, கோஷா, லோபமித்ரா, சிகாரா, நிவாவரி, விஸ்வவாணி.

பின்வேத காலத்தில் கல்வி கற்ற பெண்கள் : கார்கி, மைத்ரேயி

4 ஆஸ்ரமங்கள்(வயதின் அடிப்படையில்)
பின் வேதகால இறுதியில் வாழ்க்கையின் நான்கு நிலைகள் அதாவது நான்கு ஆஸ்ரமங்கள் என்ற கோட்பாடு உருவாகின.
1.பிரம்மச்சரியம் அதாவது மாணவப்பருவம் 
2.கிரகஸ்தம் அதாவது திருமணப்பருவம்
3.வனப்பிரஸ்தம் (காடுகளுக்குச் சென்று தவம் செய்தல்)
4.சன்னியாசம் (வீடுபேறு அடைவதற்காக துறவற வாழ்க்கை மேற்கொள்ளுதல்)

பொம்மை வழக்கு பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template