சட்டங்கள் இயற்றும் போதும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எனப்படும். எந்த ஒரு சட்டத்தை இயற்றும் போது அரசு கண்டிப்பாக இந்த கோட்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். மக்கள் நலனை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும். இது ஒரு சமூக பொருளாதார ஜனநாயகம் ஆகும். இவை கருத்துக்கள் மட்டுமே இவற்றை நடைமுறைப்படுத்த சட்டங்கள் கிடையாது. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் அரசியலமைப்பின் புதுவகையான முக்கியத்துவம் என டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். அடிப்படை உரிமைகள் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் இரண்டும் அரசியலமைப்பின் மனசாட்சி என கூறியவர் கிரண்வில் ஆஸ்டின்.
அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள் (சரத்து 36 - சரத்து 51)
சமத்துவ நெறிகள் : சரத்து 38, 39, 39 a, 41, 42, 43 43a, 47.
காந்திய நெறிகள் : 40, 43, 43b, 46, 47, 48
மேற்கத்திய தாராளமய நெறிகள் : 44, 45, 48, 48 a, 49, 50, 51.
சமத்துவ நெறிகள்
சரத்து 36 : அரசை பற்றி விளக்குகிறது
சரத்து 37 : அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் செயல்படுத்துவது குறித்து கூறுகிறது (இக்கோட்பாடுகளை செயல்படுத்துமாறு அரசாங்கத்தை நீதிமன்றம் கட்டுப்படுத்த இயலாது)
சரத்து 38 : மக்களின் நல்வாழ்வை மேம்படுத்த சமூக ஒழுங்கைப் பாதுகாத்தல். மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைத்தல் .
சரத்து 39 : ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாமல் செய்வது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் (சம ஊதிய சட்டம் 1976)குழந்தைகளின் உடல்நலம் முன்னேற்றத்திற்கு வாய்ப்புகளை ஏற்படுத்துதல்
சரத்து 39 a : ஏழைகளுக்கு சமநீதி மற்றும் இலவசமாக சட்ட உதவிகளை ஏற்படுத்தித் தருதல்
சரத்து 41 : வேலை இல்லாதவர்கள் வயதானவர்கள் அறிந்தவர்கள் மற்றும் இயலாதவர்களுக்கு பின்வரும் உரிமைகளை உறுதிப்படுத்துதல் ஆகும். வேலை பெறும் உரிமை, கல்வி பெறும் உரிமை மற்றும் பொது சேவையை பெறும் உரிமை.
சரத்து 42 : வேலை செய்வதற்கான போதிய சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தருதல். பிரசவ காலங்களில் விடுமுறை அளித்தல்
சரத்து 43 : தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம், சமூக கலாசார வாய்ப்புகள் போன்றவற்றை உறுதிப்படுத்துதல்.
சரத்து 43a : தொழிற்சாலை நிர்வாகத்தில் தொழிலாளர்களை பங்கேற்க செய்தல்
சரத்து 47 : ஊட்டச்சத்து அளித்தல், வாழ்க்கை தரத்தை உயர்த்துதல், உடல்நலத்தை மேம்படுத்துதல்.
காந்திய நெறிகள் :
சரத்து 40 : கிராம பஞ்சாயத்துகளை அமைத்தல்
சரத்து 43 : குடிசை தொழில்கள் மேம்படுத்துதல்
சரத்து 43b : கூட்டுறவு சங்கங்களை மேம்படுத்துதல்
சரத்து 46 : தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பின்தங்கிய மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார வசதிகளை ஏற்படுத்தித் தருதல்
சரத்து 47 : உடல் நலத்திற்கு கேடான போதை பொருள், மருந்துகள் மற்றும் குடியை விலக்குதல்
சரத்து 48 : வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பசுவதையை தடை செய்தல்
மேற்கத்திய தாராளமயக் கொள்கை :
சரத்து 44 : நாடு முழுவதும் அனைத்து குடிமக்களுக்கும் சிவில் சட்டத்தை கொண்டு வருதல்
சரத்து 45 : ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச கட்டாய கல்வி வழங்குதல்
சரத்து 48 : கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண்மை வளர்ச்சியை மேம்படுத்துதல்
சரத்து 48 a : சுற்றுச்சூழல் காடுகள் மற்றும் வன வளங்களை பாதுகாத்தல்
சரத்து 49 : பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் இடங்களை பாதுகாத்தல்
சரத்து 50 : நிர்வாகத்திலிருந்து நீதியை தனியாக பிரித்தல்
சரத்து 51 : உலக அமைதி மற்றும் பாதுகாப்பு, நாடுகள் இடையே நல்லுறவு, சர்வதேச சட்டங்களை மதித்தல்.
சில சட்டத்திருத்தங்கள் மூலம் அரசு நெறிமுறைக்கோட்பாட்டில் புகுத்தப்பட்ட சரத்துகள் :
1976, 42 வது சட்டத்திருத்தம் மூலம் புகுத்தப்பட்ட விதிகள் 39, 39a, 43a, 48 a
1978, 44 ஆவது சட்டத்திருத்தம் மூலம் விதி 38 புகுத்தப்பட்டது.
2002, 86 வது சட்டத்திருத்தம் மூலம் விதி 45 புகுத்தப்பட்டது.
2011, 97 வது சட்டத்திருத்தம் மூலம் விதி 43 b ஏற்படுத்தப்பட்டது.
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் கோட்பாடுகளின் பட்டியல் நீளமாக இருந்தாலும் அதில் உள்ள அனேக நெறிகள் 1950 ஆம் ஆண்டிலிருந்து மத்தியிலும் மாநிலத்திலும் அமைந்த அரசுகள் நிறைவேற்றியுள்ளனர்.
குறைந்தபட்ச கூலி சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் 1986, கொத்தடிமை ஒழிப்பு சட்டம் 1976 போன்றவை மூலம் தொழிலாளர்களின் நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.
மகப்பேறு நலன் சட்டம் 1961, சம ஊதிய சட்டம் 1976 ஆகியவை இயற்றப்பட்டு பெண்களின் நலம் பாதுகாக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்காக நிதி ஆதாரங்களைப் பயன்படுத்தி 1956ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 1969ல் 14 வங்கிகள் மற்றும் 1971-இல் பொது காப்பீடு நிறுவனம் ஆகியவை தேசியமயமாக்கப்பட்டது.
சட்டப்பணிகள் ஆணைய சட்டம் 1971 இல் இயற்றப்பட்டது. இதன் மூலம் ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிப்பதற்கான வகை செய்யப்பட்டுள்ளது. சட்டப் பிரச்சினைகளில் சமாதானமாக தீர்க்க லோக் அதாலத்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக சமுதாய வளர்ச்சி திட்டம் 1952, மலைப்பகுதி வளர்ச்சித் திட்டம் 1960, குறைந்தபட்ச தேவை திட்டம் 1974, ஜவஹர் ரோஜ்கர் யோஜனா 1989, சம்பூர்ண யோஜ்கர் யோஜ்னா 2001, தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2005 போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 73-வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் முறை பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் நலன்களைப் பாதுகாக்க தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம் 1989-ல் ஏற்றப்பட்டது.
மேலும் 1990 ஆம் வருட 65 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இது 2003, 89 ஆவது திருத்தத்தின் படி தனித்தனி ஆணையங்களாக பிரிக்கப்பட்டன.
மேலும் 1990 ஆம் வருட 65 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் படி தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. பின்னர் இது 2003, 89 ஆவது திருத்தத்தின் படி தனித்தனி ஆணையங்களாக பிரிக்கப்பட்டன.
1951இல் பழங்கால வரலாற்று சின்னம் மற்றும் தொல்லியல் பகுதி பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்களை இயற்றி பல வழிகளில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகளை நிறைவேற்றியுள்ளன.
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.