எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , , » அரசியல் அறிவியல் - ஓர் பார்வை

அரசியல் அறிவியல் - ஓர் பார்வை

வணக்கம் அன்பர்களே..  போட்டித்தேர்வுக்கு படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில்  இந்திய அரசியலமைப்பு  பாடத்தை பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.

தேர்வுக்கு தேவைப்படுகின்ற முக்கியமான செய்திகளைத் தொகுத்து பதிவிட இருக்கிறேன்.எந்தப் பாடம் இங்கே பதிவிடப்படுகிறதோ அந்தப் பாடத்தின் குரல்வழி விளக்கத்தை வென்று காட்டு யூடியூப் பக்கத்திலும் வெளியிட இருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக 'அரசியல் அறிவியல் - அறிமுகம் என்ற தலைப்பில் முதல் பதிவை பதிந்திருக்கிறேன். இனி தொடர்ந்து இப்பகுதியில் பாடங்கள் வெளியாகும்.ஆரம்பத்திலிருந்தே இந்த பாடங்களைத் தொடருங்கள்.. பயனடையுங்கள்..

                                                        அரசியல் அறிவியல்ஒரு நாட்டின் நிர்வாகமானது அடிப்படை கொள்கைகளை சார்ந்து அமைந்துள்ளது என்பதை பிரதிபலிக்கும் அடிப்படை சட்டமே அரசியலமைப்பு சட்டம் ஆகும். 


ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அச்சாணியாக இருப்பது அந்நாட்டின் அரசியல் அமைப்புதான்.  

அனைத்து மக்களாட்சி நாடுகளும்  தங்களுக்கென  ஒரு அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியுள்ளன .  

ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ விரும்பும் வகையில் சில அடிப்படை கொள்கைகளை  வகுத்தளிப்பது அந்நாட்டின் அரசியலமைப்பு தான்.  

ஒரு நாடு பல்வேறு நம்பிக்கைகளை கொண்டுள்ள பல்வேறு இன மக்களைப் பெற்றிருக்கும் . எனவே,  அரசியல் அமைப்பானது  குடிமக்களின் நம்பிக்கைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்க வேண்டும்.  இதன் அடிப்படையில்தான் நமது அரசியலமைப்பு  உருவாக்கப்பட்டுள்ளது.   

இந்தியா இறையாண்மை உடைய சமதர்ம,  மதசார்பற்ற,  ஜனநாயக,  குடியரசு நாடாக திகழ்கிறது.  இந்திய அரசியலமைப்பு சட்டம்   உலகிலேயே எழுதப்பட்ட மிக நீண்ட  அரசியலமைப்பு  சட்டமாகும் .

அரசியலமைப்பு என்ற கொள்கை முதன் முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தான் தோன்றியது.

அரசியல் அறிவியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்,  ஜீன் போடின் என்ற பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ஆவார். 

கிரேக்க நாட்டு அரசியல் தத்துவஞானி அரிஸ்டாட்டில், அரசியல் என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தினார் .  

"பொருளாதாரத்தின் தந்தை" என அழைக்கப்படுகிற  ஆடம்ஸ்மித் பொருளியல், அரசியல் அறிவியலின் ஒரு பகுதி என குறிப்பிட்டுள்ளார்.இதுவே அரசியல் பொருளாதாரம் எனப்பட்டது. 

இத்தாலி நாட்டைச் சேர்ந்த நிக்கோலோ மாக்கியவெல்லி என்ற அறிஞர் தன்னுடைய இளவரசன் என்ற புத்தகத்தில் முதன்முதலாக அரசு என்ற சொல்லை பயன்படுத்தினார் . 

உட்ரோ வில்சன் என்பவர் அரசு என்பது ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் சட்டத்திற்காக அமையப்பெற்ற மக்கள் கூட்டம் என்று கூறினார் . 

கார்னர் என்பவர் அரசு என்பது வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில் வசிக்கும் ஒரு மக்கள் கூட்டம் என்றார் . 

அரசின் கூறுகள் நான்கு வகைப்படும். 


அவை:


மக்கள்தொகை

நிலப்பரப்பு

அரசாங்கம்

இறையாண்மை. 


மக்கள்தொகை


மக்கள்தொகை பற்றி தத்துவஞானி பிளாட்டோ ஒரு அரசில் 5040 மக்கள் இருக்கவேண்டும் என்று வரையறுக்கிறார்.  ஆனால் ரூசோ என்பவர் ஒரு அரசில் பத்தாயிரம் பேராவது இருக்க வேண்டும் என்று கூறுகிறார். 

நிலப்பரப்பு

இந்தியாவின் பரப்பளவு கிட்டத்தட்ட  32 லட்சத்து 87 ஆயிரத்து 763 சதுர கிலோ மீட்டர் ,உலக பரப்பளவில் 2.4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 அரசாங்கம்

சி.எப். ஸ்டிராங் என்பவர் ஒரு நாடு சட்டத்தை இயற்றி அமல்படுத்த அரசுக்கு அதிகாரம் தேவைப்படுகிறது. அந்த அதிகாரம் அரசாங்கத்திடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

இறையாண்மை. 

இறையாண்மை என்பது உயர்ந்த மற்றும் தலையாய அதிகாரமாகும்.மேலும், இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடா வண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.    

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த  ஜீன் போடின் என்பவர் நவீன இறையாண்மையின் தந்தை என அழைக்கப்படுகிறார்.    

அரசியல் அறிவியல் அடிப்படை பற்றி அறிந்துகொண்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template