பிரம்மஞான சபை
தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு:1875
தோற்றுவிக்கப்பட்ட இடம்:நியூயார்க், அமெரிக்கா
தோற்றுவித்தவர்கள்:எலனா பிளவாத்ஸ்கி, ஹென்றி ஸ்டீல் ஆல்காட், வில்லியம் ஜட்ச் உள்ளிட்டோர்
தலைமையகம்- அடையாறு,சென்னை.
தோற்றுவித்ததின் நோக்கம்:
இனம், மதம், பால், ஜாதி வேறுபாடின்றி மனித உலகளாவிய அளவில் சகோதரத்துத்தை ஒரு மையக்கருவை வைத்து ஒரு சமுதாயம் உருவாக்குவதற்கு.
சமயம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை ஒப்பீட்டு ஆய்வுகலைச் செய்து ஊக்குவிக்க.
இயற்கையின் விவரிக்க முடியாத சட்டங்கள் மற்றும் மனிதன் பொதிந்த அதிகாரங்களை அறிய முற்படுவது.
1875 ஆம் ஆண்டு பிரம்மஞான சபை அமெரிக்காவில் நியூயார்க் நகரில் கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட இச்சபை 1886 ம் ஆண்டு ஆல்காட், பிளவாத்ஸ்கி ஆகியோர் இந்தியாவுக்கு வந்து சென்னை அடையாரில் தமது அமைப்பின் தலைமை அலுவலகத்தை நிறுவினார்கள்
இச்சபை தியோசோபி மீது நம்பிக்கை கொண்டுள்ளது. தியோஸ் என்றால் கடவுள் , சோபாஸ் என்றால் அறிவு. எனவே தியோசோபி என்றால் கடவுளைப் பற்றிய அறிவு என்று பொருள்படும். பிரம்ம ஞான சபை இந்து செவ்வியல் நூல்களை குறிப்பாக உபநிடதங்கள் , பகவத்கீதை ஆகியவற்றினை படிக்க உற்சாகமூட்டியது.
ஹென்றி ஸ்டீல்ஆல்காட்டின் மறைவிற்குப் பிறகு அன்னிபெசன்ட் பிரம்மஞான சபையின் தலைவரானார். இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கும் இந்திய கல்விக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அன்னிபெசன்ட் அம்மையார். அயர்லாந்திற்கு வழங்கப்பட்டதை போலவே இந்தியாவிற்கும் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அன்னிபெசன்ட் முன்வைத்தார் .இதன் விளைவாக தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார் . அன்னிபெசன்ட் மற்றும் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் முயற்சியால் பனராசில்(காசி) தோற்றுவிக்கப்பட்ட மத்திய இந்து கல்லூரி பனாரஸ் இந்து பல்கலைக் கழகமாக வளர்ச்சி அடைந்தது. பிரம்மஞான சபையின் கருத்துக்களை நியூ இந்தியா மற்றும் காமன்வீல் போன்ற செய்திதாள்களின் மூலமாக அன்னிபெசன்ட் பரப்பினார்.
அன்னிபெசன்ட் கீழ்க்காணும் முக்கிய விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென நிபந்தனை விதித்தார்.
ஜாதி வேறுபாடு பார்க்க மாட்டேன்
பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன்.
பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்..
பெண் குழந்தைக்கும் மனைவிக்கும் கல்வி போதிப்பேன்.
பெண்களுக்கு 21 வயதுக்குள் திருமணம் செய்துவைக்கமாட்டேன். விதவை மறுமணத்தை ஆதரிப்பேன்..

இந்த இலச்சினையில் மேல் இருக்கும் எழுத்து (ஓம்) இந்து, புத்த மற்றும் பிற மதங்களாலும் புனிதமாக போற்றப்படும் ஒன்று. உலகில் உள்ள அனைத்திற்கும் ஆன தொடக்கத்தைக் குறிப்பதால் இது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.வலப்புறமாக சுற்றும் வகையில் அமைந்துள்ள சிலுவை போன்ற அமைப்பு. "ஸ்வஸ்திக்" என்ற சமஸ்கிரத சொல்லுக்கு நலம் என்ற அடிப்படையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. அதனை சுற்றி உள்ள வட்டம் ஒரு எல்லையில் தான் இந்த பரிணாமம் நடக்கும் என்பதை விலக்குகிறது. பரிணாம வளர்ச்சியின் அடைப்படையில் சக்தி ஒரு இடத்தில் சேர்ந்து பின்பு பிரியும் என்பதற்கான தத்துவத்தை குறிக்கிறது.பாம்பு எப்போதும் ஞானத்தின் சின்னமாகவே கருதப்படுகிறது.பாம்பு தனது வாலை தனது வாயில் வைத்துள்ளது உலகத்தில் அனைத்துமே ஒரு சுழற்சியில் தான் இயங்குகிறது என்பதை குறிக்கிறது.
இலச்சினையில் உள்ள இரண்டு முக்கோணங்கள் இந்திய சாஸ்திரங்களில் இது ஸ்ரீ யந்த்ரா அல்லது சத்கோண சக்கரம் என்றழைக்கப்படுகிறது. இது ஆறு புள்ளிகளை கொண்ட நட்சத்திர வடிவம் கொண்டுள்ளது. இது பல ஜுடையிசம், இந்து மதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிருஸ்துவ மதத்தை பொறுத்த வரையில் தந்தை, மகன் மற்றும் பரிசுத்த ஆவி எனவும், இந்து மதத்தில் சிவா, விஷ்ணு மற்றும் பிரம்மா எனவும் குறிப்பிடுகின்றனர்.
பிரம்மஞான சபையைப் பற்றி நன்றாக படித்துவிட்டீர்களா?அப்படியானால் இங்கே க்ளிக் செய்து கேட்கப்பட்டுள்ள 10 வினாக்களுக்கு விடையளித்து உங்களை நீங்களே சோதித்துக் கொள்ளுங்கள்.