Ads Area

சீக்கிய சீர்திருத்த இயக்கம்

19 ஆம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்த இயக்கங்களில் முக்கியமானது பஞ்சாபில் உருவான சீக்கிய சீர்திருத்த இயக்கம்.இந்த இயக்கம் நிரங்காரி இயக்கம் எனவும் நாம்தாரி இயக்கம் எனவும் இரண்டாக பிரிக்கப்பட்டது. 

நிரங்காரி இயக்கம்:

உருவமற்ற இறைக் கொள்கை உடைய சீர்திருத்த கருத்துக்கள் கொண்ட சீக்கிய சமயத்தின் ஒரு உட்பிரிவினர் நிரங்காரிகள் ஆவர்.சீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங் ஆட்சி காலத்தில்,குரு நானக்கின் உபதேசங்களின் அடிப்படையிலும் மற்றும் பாபா தயாள் சிங்கின் கருத்துகளின் தொகுப்பின் அடிப்படையிலும், பாபா தர்பாரா சிங் என்பவரால் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவு ராவல்பிண்டியில் 1890களில் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் சாகிப் இரத்தாஜி என்பவர் நிரங்காரி இயக்கத்தில் கால்சா உணர்வை முன்னிறுத்தினார்.


கால்சா :

மார்ச் 30, 1699 ல் பத்தாவது சீக்கிய குரு குரு கோவிந்த் சிங் துவக்கினார் கால்சா அமைப்பை துவக்கினார்.கால்சா என்ற சொல்லிற்கு இறைமை,தூய்மை, உண்மையான என பொருள்படும்.இதன் பிரதிநிதியை குருபாந்த் எனவும் குரு அல்லது சீக்கியர்களின் தலைவர் எனவும் கூறலாம்.சீக்கியர்களின் தலைமையாக கால்சா அமைந்தது.கால்சா சீக்கிய சமூகத்தின் அனைத்து செயலாக்க, படைத்துறை மற்றும் குடியதிகாரத்திற்கு பொறுப்பானதுகால்சா சீக்கியர்களின் நாடு எனவும் கூறப்படுகின்றது.



பிரிட்டிஷ் ராஜ் காலத்தில் நிரங்காரி சீக்கிய பிரிவினர்கள் ஓரங்கட்டப்பட்டனர். நிரங்காரிகளால் 1929 ல் சந்த் நிரங்காரி இயக்கம் துவக்கப்பட்டது. குரு கிரந்த் சாகிப்பிற்குப் பின்னர், அப்போதைய  சீக்கிய குருவின் மீது நிரங்காரிகள் நம்பிக்கை வைத்தனர். நிரங்காரிகள் இதனை தங்களுக்கென தனிப்பட்ட சிறப்பான ஆன்மீக இயக்கமாக வளர்த்தனர்.

 நிரங்காரிகளின் முக்கிய கொள்கைகள்:

       1.உருவமற்ற இறைவனை வழிபடுதல்.
       2.உருவமுடைய தெய்வங்களை ஒதுக்கி வைத்தல்.
   3.வேத சடங்குகள், விழாக்கள் மற்றும் நம்பிக்கைகளை மறுத்தல்.   எடுத்துக்காட்டாக தீர்த்த யாத்திரை மேற்கொள்வதை மறுத்தல் இறந்தவர் உடலை இந்துக்கள் போன்று எரிக்காமலும் இசுலாமியர் போன்று புதைக்காமலும், ஆற்றில் எறிந்துவிடுவார்கள்.
       4.மாமிசம், மது, புகையிலைப் பொருட்களை மறுத்தல்
       5.ஜோதிடம் பார்பதை மறுத்தல்.

நாம்தாரி இயக்கம்:


சீக்கியரிடையே  நடைபெற்ற மற்றொரு சமூக சமய சீர்திருத்த இயக்கம் பாபா ராம் சிங் என்பவரால் தொடங்கப்பட்ட நாம்தாரி இயக்கமாகும்.நாம்தாரி இயக்கம் சீக்கியர்களின் அடையாளங்களை அணிய வற்புறுத்தியது.  வாளுக்கு பதிலாக தனது சீடர்களை லத்தியை வைத்துக் கொள்ளும்படி ராம்சிங்  கூறினார் .இவரது சீடர்கள் வெள்ளை உடை அணிந்து, புலால் உண்பதை தவிர்த்தனர்இவ்வியக்கம் ஆணும் பெண்ணும் சமம் என கருதியது,  விதவை மறுமணத்தை ஆதரித்தது,வரதட்சனை முறையையும் குழந்தை திருமணத்தையும் தடை செய்தது . 


ஆரிய சமாஜம் கிறிஸ்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள் ஆகியவற்றின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருந்த சூழலில் சிங்சபா எனும் அமைப்பு அமிர்தசரஸ் நிறுவப்பட்டது.   சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது சபாவின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.   ஆங்கிலேயரின் ஆதரவுடன் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு கால்சா கல்லூரி உருவாக்கப்பட்டது. சிங்சபாவே அகாலி இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.. 1870ல் லாகூர் மற்றும் அமிர்தசரசில் துவக்கப்பட்ட சிங் சபாக்கள் சீக்கிய சமுதாயத்தை சீர்திருத்த முற்பட்டன. 1892ல் அமிர்தசரசில் கால்சா கல்லூரி நிறுவப்படுவதற்கு இந்த சபாக்கள் உறுதுணையாக இருந்தன. குருமுகி மற்றும் பஞ்சாபி இலக்கியத்தை இவை ஆதரித்தும் போற்றின. சீக்கிய குருத்வாராக்களிலிருந்து ஊழல்மிக்க மகர்த்களை (பூசாரிகளை) நீக்குவதற்கு 1920ல் அகாலிகள் ஒரு இயக்கத்தை தோற்றுவித்தனர். இது தொடர்பான சட்டங்களை இயற்ற பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அகாலிகள் தங்களை ஒரு அரசியல் கட்சியாக மாற்றிச் கொண்டனர்.

Bottom Post Ad

Ads Area