பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக் கூறுகள்

நமது அரசியல் அமைப்பு பல்வேறு நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது ஆகும். 

1935-ஆம் ஆண்டு அரசு சட்டத்திலிருந்து  ஆளுநர் முறை,  கூட்டாட்சி முறை, நெருக்கடி நிலை, அரசு பணியாளர் தேர்வாணையம், நீதித்துறை ஆகியவை பெறப்பட்டன.


இங்கிலாந்து அரசியலமைப்பிலிருந்து பாராளுமன்ற முறை அரசாங்கம் மற்றும் கூட்டுப்பொறுப்பு, சட்டத்தின் ஆட்சி,  குடியரசுத்தலைவர் முறை,  ஒற்றைக் குடியுரிமை, அதிக அதிகாரம் வாய்ந்த கீழவை(மக்களவை),  அமைச்சரவையின் தலைவராக பிரதமர் செயல்படுவது,நீதிப்பேராணை போன்றவை பெறப்பட்டன.


சோவியத் ரஷ்யாவின் அரசியலமைப்பிலிருந்து  அடிப்படை கடமைகள்,  திட்டமிடல், ஆகியவை பெறப்பட்டன.  

அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடு,  குடியரசு தலைவர் தேர்தல் , ராஜ்யசபா உறுப்பினர் நியமன முறை ஆகியவை பெறப்பட்டன. 

ஆஸ்திரேலியாவிலிருந்து  பொதுப் பட்டியல் முறை, பாராளுமன்ற கூட்டு கூட்டம் ஆகியவை பெறப்பட்டன.

ஜெர்மனியிலிருந்து  நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை செயலிழத்தல் பெறப்பட்டது.  

தென்னாப்பிரிக்காவிலிருந்து  ராஜ்யசபா உறுப்பினர் தேர்தல்,  அரசியலமைப்பு சட்டம் திருத்தும் முறை  ஆகியவை பெறப்பட்டன.  

பிரான்ஸ் அரசியலமைப்பிலிருந்து  சுதந்திரம், சமத்துவம்,  சகோதரத்துவம் போன்றவை பெறப்பட்டு முகவுரையில்  சேர்க்கப்பட்டது.   

கனடாவிடமிருந்து கூட்டாட்சி முறை, வலிமையான மத்திய அரசு,  மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வு போன்றவை பெறப்பட்டன.  

அமெரிக்காவிடமிருந்து  அடிப்படை உரிமைகள்,முகவுரை, குடியரசு தலைவர் பதவி, குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம், குடியரசு தலைவர் நிர்வாக துறை தலைவர், குடியரசுத்தலைவர் முப்படை தலைவராக செயல்படுதல்,  எழுதப்பட்ட அரசியலமைப்பு சட்டம்,  நீதிப்புனராய்வு, சுதந்திரமான நீதித்துறை, குடியரசுத் துணைத்தலைவர் மாநிலங்களவையின் பதவி வழி தலைவராக செயல்படுதல்,  உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் மற்றும் பதவி நீக்கம் செய்வது போன்றவை பெறப்பட்டன.  


பிற நாடுகளிலிருந்து பெறப்பட்ட சட்டக்கூறுகளை தெரிந்து கொண்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.