Ads Area

2345 செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு

அரசு மருத்துவனைகளில் காலியாக உள்ள 2345 செவிலியர் பணியிடங்களை ஒப்பந்தகாலம் மற்றும் தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.






எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 

23.06.2019

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  

27.02.2019

எழுத்துத் தேர்வு மையங்கள்: 

 சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர்

பணி: செவிலியர்

மொத்த காலியிடங்கள்: 2345

சம்பளம்: மாதம் ரூ.14,000

வயதுவரம்பு: 01.07.2019 ன் படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

57 வயதுவரை உள்ள எம்பிசி, டிஎன்சி, பிசி, பிசிஎம், எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம்.

தகுதி:

பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் Psychiatry-இல் 6 மாத பயிற்சி பெற்று மாநில செவிலியர் கவின்சில் பதிவு செய்திருக்கும் ஆண்களும், பொது செவிலியர் பாடப்பிரிவில் 3 ஆண்டு படிப்புடன் Midwifery-இல் 6 மாத பயிற்சி பெற்று Nurse and Maternity Assistant ஆக பதிவு செய்திருக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: 

எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

வினாக்கள்:

எழுத்துத் தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு செவிலியர் பாடப்பிரிவுகளில் இருந்து ஆங்கிலத்தில் கொள்குறி வகையில் 200 கேள்விகள் கேட்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. 

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.350 கட்டணமாக செலுத்த வேண்டும். 

கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


மேலும் விவரங்களுக்கு இங்கே செல்லவும்..

Bottom Post Ad

Ads Area