Ads Area

TNPSC | பருவமழை | தென்மேற்கு பருவக்காற்று (ம) வடகிழக்கு பருவக்காற்று | Indian Geography Study Materials

பருவமழை | தென்மேற்கு பருவக்காற்று (ம) வடகிழக்கு பருவக்காற்று

TNPSC | பருவமழை | தென்மேற்கு பருவக்காற்று (ம) வடகிழக்கு பருவக்காற்று | Indian Geography Study Materials


தென்மேற்கு பருவக்காற்று (ஜுன் முதல் செப்டம்பர் வரை)


இந்திய காலநிலையின் முக்கிய அம்சமாக தென்மேற்கு பருவக்காற்று விளங்குகிறது.  பருவக்காற்று பொதுவாக ஜுன் முதல் வாரத்தில் இந்தியாவின் தென் பகுதியில் தொடங்கி கொங்கணக்கடற்கரை பகுதிக்கு ஜுன் இரண்டாவது வாரத்தில் இந்தியப் பகுதிகளுக்கும் முன்னேறுகிறது.  

உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கோடை காலத்திற்கு பின் தென்மேற்கு பருவக்காற்றின்  தொடக்கத்துடன் மழை காலம் தொடங்குகிறது. அதிக வெப்பத்தால் தொடக்கத்துடன் உருவாகிறது. மே மாத இறுதிக்குள் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பெரும் பரப்பில் தாழ்வழுத்தம் அமைகிறது. அதேநேரத்தில் பெருங்கடல்கள் குளிர் அடைவதால் அங்கு உயர் அழுத்தம் ஏற்படுகிறது. காற்று எப்பொழுதும் உயரழுத்த பகுதியிலிருந்து தாழ்வான பகுதியை நோக்கி வீசும் என்பதை நாம் அறிவோம். எனவே காற்று கடலில் இருந்து இந்திய நிலப்பகுதியை நோக்கி வீசுகிறது.இக்காற்றியே தென்மேற்கு பருவகாற்று என அழைக்கிறோம் .பூமத்திய ரேகையைக் கடக்கும் போது அதன் திசை மாற்றப்பட்டு தென்மேற்கு பருவக்காற்று வீசுகிறது. 

தென்மேற்கு பருவக்காற்று இந்தியப் பெருங்கடலிலிருந்து தோன்றுவதால் அதிக வெப்பத்தைத் தாங்கிய காற்றாக உள்ளது. கேரளாவின் தென் பகுதியை அடையும்போது பலத்த இடி மின்னலுடன் கூடிய மழையை அளிப்பதன் மூலம் தென்மேற்கு பருவக்காலம் ஆரம்பிப்பதை காட்டுகிறது. இதனை பருவமழை வெடிப்பு எனக் கூறலாம்.  தென்மேற்கு பருவக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும்பொழுது இரண்டு கிளைகளாக பிரிகிறது.  இதன் ஒரு கிளை அரபிக்கடல் வழியாகவும், மற்றொரு கிளை வங்காள விரிகுடா வழியாகவும் வீசுகிறது.

அரபிக்கடல் கிளை 


பருவக்காற்றின் அரபிக்கடல் கிளை ஒரு வலிமைமிக்க காற்று. இது அதிக மழைப் பொழிவை தருகிறது. அரபிக் கடலிலிருந்து வீசும் இக்காற்றின் ஒரு பகுதி முதலில் மேற்கு தொடர்ச்சி மலை மீது மோதுகிறது. ஈரப்பதம் மிக்க இக்காற்று மலைச் சரிவுகளின் வழியே உயரே எழும்பி ,குளிர்வடைந்து மேற்கு கடற்கரை பகுதியில் பலத்த மழை தருகிறது .மேற்கு தொடர்ச்சி மலையின் காற்று மோதும் திசையில் அமைந்துள்ள மும்பை 150 சென்டிமீட்டர் மழையையும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மறைவிலுள்ள மழை மறைவுப் பிரதேசத்தில் உள்ள புனே 50 சென்டி மீட்டர் மழையும் பெறுகின்றன.

காற்று மோதும் பக்கம்


காற்று வீசும் திசையை நோக்கி உள்ள மலைச் சரிவை காற்று மோதும் பக்கம் என்கிறோம் .இது அதிக மழையைப் பெறுகிறது.

காற்று மோதா பக்கம் 


மலையின் மறுபக்கம் சரிவு காற்று வீசும் திசைக்கு மறைவாக உள்ளதால் அதனை காற்றும் மோதாப்பக்கம் என்கிறோம்.

மழை மறைவுப் பகுதி மழை 


மலையின் காற்று மோதா பகுதியில் உள்ள மிகக் குறைந்த மழை பெறும் பகுதி மழை மறைவுப் பகுதி எனப்படும். இதன் இரண்டாவது பகுதி விந்திய சாத்பூரா  மலைகளின் வழியே சென்று ராஜ்மகால் குன்றுகளில் மீது மோதி சோட்டா நாகபுரி பீடபூமிக்கு அதிக மழைப் பொழிவை தருகிறது. காற்றின் மூன்றாவது பகுதி ராஜஸ்தானை  நோக்கி நகர்கிறது. அங்கு ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது. அதனால் காற்று மலை மீது மோத இயலாததால். ராஜஸ்தானுக்கு மழை பொழிவை தருவதில்லை. இதனால்தான் மேற்கு ராஜஸ்தானில் ஒரு பகுதி பாலைவனமாக அமைந்துள்ளது.இப்பிரிவானது இமாசலப்பிரதேசத்தை அடைந்து, பின் வங்காள விரிகுடா கிளை காற்றுடன் கலந்து விடுகிறது .இவை சிவாலிக் குன்றுகளால் தடுக்கப்படுவதால் அவற்றின் மலையடிவாரத்தில் நல்ல மழை பொழிவை தருகின்றன.  தமிழ்நாடு மலை மறைவுப் பகுதியில் அமைந்துள்ளதால் குறைவான மழையைப் பெறுகிறது.

வங்காள விரிகுடா கிளை 


வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் காற்றானது ஈரப்பதத்தை தாங்கி வரும் காற்றாகும். வங்காள விரிகுடா கிளை வடகிழக்கு இந்தியா மற்றும் மியான்மரை நோக்கி வீசுகிறது.  இது காசி, காரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீது மோதுகிறது. ஈரப்பதம் தாங்கி வரும்  இக்காற்றானது புனல் வடிவ குன்றுகளால் (காசி, காரோ, ஜெயந்தியா) தடுக்கப்பட்டு மேகாலயாவில் உள்ள சின்ராமில் மிக கன மழையைத் தருகிறது.  இது முன்பு அதிக சராசரி மழையைப் பெற்ற இடமென கருதப்பட்ட சிரபுஞ்சியிலிருந்து 16 கிமீ மேற்கே உள்ளது.  இக்காற்றின் ஒரு பகுதி இமயமலைகனால் தடுக்கப்பட்டு மேற்கு நோக்கி நகர்கிறது மேற்கு கங்கை சமவெளிக்கு மழையை தருகிறது. இது மேலும் மேற்கு நோக்கி நகர நகர தம்மிடம் உள்ள ஈரப்பதத்தை இழப்பதால் பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்கு மிகக் குறைந்த அளவு மழையைத் தருகிறது .இறுதியாக வங்காள விரிகுடா கிளை காற்று அரபிக்கடல் கிளையுடன் சேர்த்து இமய மலையின் அடிவாரமான சிவாலிக் குன்று பகுதிகளுக்கு அதிக மழைப்பொழிவை தருகின்றன .இந்த பருவத்தில் தமிழ்நாட்டில் வறண்ட நிலை காணப்படுகிறது. ஏனெனில் இது அரபிக்கடல் கிளை காற்றுக்கு மழை மறைவு பகுதியிலும், வங்காள விரிகுடா கிளை காற்றுக்கு இணையாகவும் உள்ளது. இந்தியாவின் ஒட்டு மொத்த மழைப்பொழிவில் 75 சதவீத மழைப்பொழிவானது இப்பருவக்காற்று காலத்தில் கிடைக்கிறது.


வடகிழக்கு பருவக்காற்று


செப்டம்பர் மாத இறுதியில் சூரியன் மகரரேகையை நோக்கி நகர ஆரம்பிப்பதால், தென்மேற்கு பருவகாற்று பின்னடையும் பருவகாற்றாக  நிலப்பகுதியில் இருந்து வங்காள விரிகுடா நோக்கி வீசுகிறது.  இந்திய நிலப்பகுதி வெப்பத்தை இழக்கிறது. நிலத்தின் வெப்பநிலை குறைந்து சென்றாலும் கடலின் வெப்பம் இன்னும் மிதமாகவே உள்ளது. இதனால் கடல் பகுதியில் குறைந்த அழுத்தமும், நிலப்பகுதியில் உயர் அழுத்தமும் ஏற்படுகிறது. இதனால் காற்று உயர் அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தத்தில் நோக்கி வீசுகிறது. அதாவது நிலத்தில் இருந்து கடலை நோக்கி வீசுகிறது. இது குளிர்ந்த வறண்ட காற்று என்பதால் நிலப்பகுதிக்கு மழையைத் தருவது இல்லை.  பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ் விசை )காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடக்கிலிருந்து வீசுகிறது. எனவே இக்காற்று வடகிழக்கு பருவக்காற்று என அழைக்கப்படுகிறது. இப்பருவகாலம் இந்தியத் துணைக்கண்ட பகுதியில் வட கீழைக்காற்று தொகுதி தோன்றுவதற்கு காரணமாக உள்ளது எனலாம். 

இப்பருவக்காற்றின் மூலம் கேரளா, ஆந்திரா,தமிழ்நாடு மற்றும் தென்கர்நாடகாவின் உட்பகுதிகள் நல்ல மழை பொழிவை பெறுகின்றன. இப்பகுதிகள்  சுமார் 35 சதவீதத்தை பெறுகின்றன. வங்க கடலில் உருவாகும் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகளும் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் சில பகுதிகளும் மழையைப் பெறுகின்றன. ஆனால் இது வங்காள விரிகுடாவைக் கடக்கும் பொழுது ஈரப்பதத்தை உறிஞ்சி, சோழமண்டலக் கடற்கரைக்கு கனத்த மழையைத்  தருகிறது. கடற்கரை பிரதேசங்களில் கனமழையுடன்  கூடிய பலத்த புயல் காற்று, பெரும் உயிர் சேதத்தையும் பொருட் சேதத்தையும் ஏற்படுத்துகிறது. இப்பருவத்தில் நாடு முழுவதும் பகல் நேர வெப்பநிலை வீழ்ச்சியடைகிறது. நாட்டின் வடமேற்குப் பகுதியின் சராசரி வெப்பநிலையானது அக்டோபர் மாதத்தில் 38 டிகிரி செல்சியஸில் இருந்து நவம்பர் மாதத்தில் 28 டிகிரி செல்சியசாக குறைகிறது.

Bottom Post Ad

Ads Area