Ads Area

TNPSC | Debendranath Tagore | மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் | Short Notes

 

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் (1817-1905)

 

www.vendrukaattu.com

 

மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் (1817-1905)

இவர் 15 மே 1817 அன்று கொல்கத்தாவில் பிறந்தார். இவரது தந்தையார் தொழிலதிபரான துவார்க்கநாத் தாகூர். இந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். உபநிடத்தை நன்றாக பயின்றவர். இவரது இயக்கமான தத்துவபோதினி சபாவும் பிரம்மோ சபாவும் இணைந்து பிரம்மோ சமாஜ் என 1848ஆம் ஆண்டில் துவங்கியது. ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் தந்தை தான் மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.

பிரம்ம சமாஜத்தைத் தோற்றுவித்தவராக இராசாராம் மோகன் ராய் இருந்தபோதிலும் சபாவாக இருந்ததை சமாஜமாக உருவாக்கியவர் மகரிஷி தேவேந்திர நாத் தாகூர். உருவ வழிபாட்டை எதிர்த்த தேவேந்திர நாத் தாகூர் உபநிடதங்களை ஏற்றுக் கொண்டார்.

இராஜா ராம்மோகன் ராய் 1833 இல் இயற்கையெய்திய பின்னர் அவர் விட்டுச்சென்றப் பணிகளை, தேவேந்திரநாத் தாகூர் தொடர்ந்தார். நம்பிக்கை பற்றிய நான்கு கொள்கைக்கூறுகளை தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்தார்.

1. தொடக்கத்தில் எதுவுமில்லை. எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.

2.அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின்,நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர், அவருக்கிணையாருமில்லை.

3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவரையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.

4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது..

வென்று காட்டு!                                       அரசு அலுவலராய் நின்றுகாட்டு!

Bottom Post Ad

Ads Area