எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » குரூப் - 2 முதன்மை தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா?....

குரூப் - 2 முதன்மை தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா?....

குரூப் - 2 முதன்மை தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா?....

 அப்போ…, இந்த பதிவு உங்களுக்காகத் தான்…

 சீக்கிரமே., முதனிலை தேர்வு முடிவுகள் வெளிவரவிருக்கின்றன.

ஏறத்தாழ ஒரு 75 நாட்கள் மட்டுமே முதன்மை தேர்வுக்கு தயாராக அவகாசம் இருக்கும். ஒரு குயிக் ப்ளான்.. முதன்மை தேர்வுக்கு இரண்டு தாள்களுக்கு நீங்கள் தயாராக வேண்டியுள்ளது.


 

 தாள் -1 .

 பள்ளி புத்தகங்கள் தான் முதன்மையானது. அதனைக் கசடறக் கற்றிருந்தால் போதுமானது. எளிதில் வெற்றி பெறலாம் . குறைந்தபட்ச தகுதியான 40/100 என்பது ஒரு எளிதான இலக்கு தான். ஏதேனும் ஆங்கில சிறுகதை அல்லது பள்ளி பாடப்புத்தகங்களில் உள்ள ஆங்கில கட்டுரைகளை படித்து தமிழில் எழுத முயற்சித்து பார்க்கவும். எழுதிய பின்னர் google translate அல்லது வேறு ஏதேனும் translate appல் சரிபார்த்துக் கொள்ளவும்.இதில் நீங்களே சரி பார்க்கும் போது, ஏதேனும் தவறுகள் கண்டறிந்தால், அது முதன்மை தேர்வுக்கு பயன்படும். பயிற்சிக்காக தினம் ஒரு 1/2 மணிநேரம் ஒதுக்கினால் போதுமானது. ஆனால், தினசரி மறவாமல் இப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.


 

 தாள் -2

 பாடத்திட்டம் (Syllabus) மிகக் குறைவு. ஆனால் எழுதி எழுதி பழக வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். கை மிகவும் வலிப்பதாய் உயர்ந்தால், சிறிய இலகுவான (smiley ball) கொண்டு, அவ்வப்போது  அழுத்தி பயிற்சி எடுத்தால், தேர்வு சமயத்தில் மிகவும் கை கொடுக்கும். எவ்வளவு தெரிந்தாலும், விரைவாகவும், தெளிவாகவும், எழுதினால் மட்டுமே மதிப்பெண் கிடைக்கும். படிக்கும் நேரம் போக தினமும் 1 மணிநேரமாவது படித்ததை எழுதி பார்க்கவும். மாதிரித் தேர்வுத்தாள்கள் ஏராளமாக இணையத்தில் இருக்கின்றன. அவற்றை முழுமையாக 3 மணி நேரம் ஒதுக்கி எழுதி பார்க்கவும் . இவ்வாறு பயிற்சி செய்தால், தேர்வில் சிறப்பாக பங்கெடுக்க முடியும். தொடக்கத்தில் குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. போகப் போக முன்னேற்றம் தெரியும். நடப்பு நிகழ்வுகளுக்கு மே 2021 முதல் ஜூன் 2022 வரை இணைய தளங்களில் தேடி நீங்களே முயன்று கட்டுரையாக மாற்றவும். Readymade articles தவிர்த்து சுயமாக நோட்ஸ் தயாரிக்கவும். எஞ்சியுள்ள நாட்களில் கடினமாக உழைத்தால் கண்டிப்பாக நினைத்த பதவியை அடையலாம். வென்று காட்டலாம். வாழ்த்துகள்..


 


official website revised syllabus click here

Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template