வணக்கம் நண்பர்களே! இதற்கு முந்தைய பகுதியில் துருக்கிய படையெடுப்பு பற்றி பார்த்தோம் பார்க்காதவர்கள் இங்கே க்ளிக் செய்து பார்த்துக்கொள்ளலாம்..
டெல்லி சுல்தான்கள்
இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி 1206 தொடங்கப்பட்டது.. 1206 முதல் 1526 வரையிலும் இவர்களது ஆட்சி நிலைபெற்றிருந்தது. இந்த ஆட்சி காலத்தில்
- அடிமை வம்சம்,
- கில்ஜி வம்சம்,
- துக்ளக் வம்சம்,
- சையது வம்சம்,
- லோடி வம்சம்
ஆகியன டெல்லி சுல்தானியத்தை ஆட்சி செய்தன. வட இந்தியா முழுவதையும் கைப்பற்றியதோடு நிற்காமல், அவர்கள் தக்காணத்திலும் தென்னிந்தியாவிலும் நுழைந்தனர். இந்தியாவில் அவர்களது ஆட்சி, சமூகம், ஆட்சித் துறை மற்றும் பண்பாட்டு நிலைமைகளில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்தின.
அடிமை வம்சம் (1206-1290)
மாம்லுக் என்ற சொல்லுக்கு இராணுவ பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளை குறிக்கும் சொல் இது பாரசீகச் சொல்.. இதற்கு பொருள் அடிமை.. இந்த அடிமைகளைக் கொண்டு இந்த வம்சம் உருவாக்கப்பட்டதால் இதனை அடிமை வம்சம் மற்றும் மாம்லுக் வம்சம் என்கிறோம்.. அடிமைகள் முதலில் மாகாண அளவில்
ஆளுநர்களாக பதவியில் அமர்ந்தப்பட்டு பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அப்படி முகமது கோரியின் அடிமையாக இருந்து அவரது தளபதியானவர்தான் குத்புதீன் ஐபக்.
1206 இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கிய பகுதிகளுக்கு அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன், பால்பன் ஆகிய மூவரும் வம்சத்தை சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான் அவர். அடிமை வம்சத்தினர் இத்துணைக் கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
மாம்லுக் மரபு
குத்புதீன் ஐபக்
குத்புதீன் ஐபக், மாம்லுக் மரபினை நிறுவி டெல்லி சுல்தான்களின் ஆட்சியைத் தொடங்கினார். இவர் கி.பி. 1206 ஜூன் 24 இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். தனது பெயரில் நாணயங்களை வெளியிடுவதையும். குத்பா படிப்பதையும் இவர் விரும்பியதில்லை. இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தை தொடங்கி வைத்தவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆட்சியை நிலை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள்
குத்புதீன் பட்டமேற்ற உடனே தனது ஆட்சியை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். எனவே அவர் பல்வேறு முயற்சிகள் செய்ய வேண்டியதாயிற்று.
அவை
1.க்வாரிசம் பகுதியின் ஆட்சியாளன் அலாவுதீன் முகமது டெல்லி, கஜினியை கைப்பற்றாமல் தடுப்பது.
2.ராஜபுத்திரர், தான் இழந்த பகுதிகளை மீட்க மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பது.
3.வங்காளத்தின் ஆட்சியாளர்கள் அலிமர்தன்கான் உள்ளிட்டவர்களை அடக்கி துருக்கிய ஆட்சியை பாதுகாப்பது. மேலும் குத்புதீன், துருக்கிய மரபு அரசைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளில் பல திருமணம் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.
குத்புதீன் லாகூரை தலைநகராகக் கொண்டு தனது ஆட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்.
டெல்லியில் ஆட்சி புரிந்த வரை செயல் திறன் மிக்கவராக செயல்பட்டு பல புதிய பகுதிகளை கைப்பற்றினார். கலகங்களை ஒடுக்கினார். மத்திய மற்றும் மேற்கு சிந்து - கங்கைச் சமவெளி பகுதிகளில் (வட இந்தியா) தானே தலைமையேற்று படைநடத்திசென்று பல பகுதிகளைக் கைப்பற்றினார்.
கீழே கங்கை சமவெளியை (பீகார் , வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பைப் பக்தியார் கில்ஜி என்பவரிடம் ஒப்படைத்தார்.
குத்புதீன் ஐபக் ஓர் இஸ்லாமிய பற்றாளர் ஆவார். ராணுவத்தின் வலிமையை பயன்படுத்தியதோடு மாம்லுக் ஆட்சியை நிலை நிறுத்தினார். நாட்டின் உள்ளாட்சியினை நிர்வகிக்க உள்ளூர் அதிகாரிகளை நியமித்தார். அஜ்மீரில் குவ்வதுல் இஸ்லாம் என்ற மசூதியை கட்டினார். அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது.
டெல்லியில் தாய்டின்கா - ஜோன்பரா என்ற மசூதியையும் கட்டினார். ஹாசன் நீசாமி போன்ற அறிஞர்களை ஆதரித்தார். இவர் பல இலட்சங்களை கொடையாக வழங்கியதால் 'லக்பாக் ஷா' என புகழப்பட்டார். குதுப்மினாருக்கு அவரே அடிக்கல் நாட்டினார். ஆனால், அவரால் பணியை முடிக்க இயலாமல் போயிற்று. அவருடைய மருமகனும் அவருக்குப்பின் ஆட்சிப் பொறுப்பேற்றவருமான இல்துமிஷ் குதுப்மினாரைக் கட்டி முடித்தார். கிபி 1210 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், குதிரையின் மீது அமர்ந்து போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது குத்புதீன், நிலை தடுமாறி விழுந்து இறந்து போனார்.
இல்துமிஷ்
மத்திய ஆசியாவில் வாழ்ந்த இல்பாரி என்ற பழங்குடி இனத்தில் பிறந்தவர் இல்துமிஷ். இவர் சிறுவனாக இருந்த போதே குதிபுதீனுக்கு விற்கப்பட்டார். ஐபக், இவரை தன்னுடைய மருமகனாக்கினார். ஐபக்கின் மகன் ஆரம் ஷா திறமையற்றவராக இருந்தார்.
கி.பி. 1211 இல் இல்துமிஷ், குத்புதீனுடைய மகனும், மன்னருமான ஆராம்ஷாவைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
இல்துமிஷ் படையெடுப்பு
இவரது ஆட்சியின் தொடக்க காலத்தில், நாட்டை சுற்றிலும் எதிரிகளே சூழ்ந்திருந்தனர். அவர்களையெல்லாம் படிப்படியாக வென்று தமது ஆட்சியை நிலை நிறுத்தினார். கோரி முகமதுவின் வழித்தோன்றல் என எண்ணிய யுல்துஸ் என்பவரை இல்துமிஷ் தோற்கடித்து கொன்றார். 1830இல் வங்காளத்தில் ஏற்பட்ட கில்ஜி மாலிக்குகளின் களத்தை அடக்கினார்.
இவருடைய ஆட்சியின் போதுதான் மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப் பகுதிகளை அச்சுறுத்தினர். ஏற்கனவே செங்கிஸ்கனால் தோற்கடிக்கப்பட்டு விரட்டப்பட்ட குவாரிஜம் ஷா ஜலாலுதீன் என்பவருக்கும் அடைக்கலம் கொடுக்க இல்துமிஷ் மறுத்தார் . எனவே மங்கோலியர்கள் டெல்லியை முற்றுகையிட இல்லை. இதனால் மங்கோலியர்களின் படையெடுப்பில் இருந்து டெல்லியை பாதுகாத்துக் கொண்டார். ராஜபுதன பகுதியைச் சேர்ந்த ராண்தாம்பூர், மாண்டுர் ஆகியவற்றை மீண்டும் கைப்பற்றினார். ஜாலோர் பகுதியின் மன்னரான உதய்சிங் தோற்கடிக்கப்பட்டு இல்துமிஷ் ஆட்சிக்கு உட்பட்ட குறுநில மன்னரானார். தங்கிரி, சம்பா நாகூர்,கலிஞ்சார், குவாலியர் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினார. கனோஜ், பனாரஸ் உள்ளிட்ட கங்க யமுனை பகுதிகள் இவ்வரசுடன் இணைக்கப்பட்டன.
இல்துமிஷ் நாணயங்கள்
இல்துமிஷ் வெளியிட்ட டங்கா என்ற வெள்ளி நாணயம் 175 மில்லி கிராம் எடை கொண்டது. அதில் அராபிய மொழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்த செம்பு நாணயத்தை அவர் வெளியிட்டார்.
நிர்வாகம்
துருக்கியப் பிரபுக்கள் 40 பேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு "சகல்கானி" அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது.
இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு 'இக்தாக்களை' (நிலங்களை) வழங்கினார். "இக்தா" என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படவேண்டிய ஊதியத்திற்காக கொடுக்கப்பட்ட நிலமாகும்.
நிலத்தைப் பெற்றவர் இக்தாதார் அல்லது முக்தி என்றர்க்கப்பட்டார். இவர் போர் காலங்களில் சுல்தானுக்கு ராணுவ உதவிகள் செய்ய வேண்டும். தனது படைகளையும் குதிரைகளையும் பராமரிப்பதற்காக தனக்கு வழங்கப்பட்ட நிலங்களில் இருந்து வரிவசூல் செய்யப்படுவார்
மதிப்பீடு
இல்துமிஷ் நிர்வாகத் திறமை கொண்டவர். சிறந்த தளபதி. குத்புதீன் ஐபக்கால் தொடங்கப்பட்ட பல பணிகளை இவர் நிறைவுசெய்தார். வட இந்தியாவில் துருக்கி அரசை வலிமையடைய செய்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். தொடங்கப்பட்ட குதுப்மினாரின் கட்டுமான பணிகளை இல்துமிஸ் நிறைவு செய்தார்
முடிவு
இருபது ஆண்டுகள் ஆட்சி புரிந்த இல்துமிஷ் உடல்நலக்குறைவால் கி.பி.1236 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். இறப்பதற்கு முன் தனது மகள் ரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
ரசியா
சுல்தான்கள் வரிசையில் வந்த முதல் பெண்ணரசி ரசியா ஆவார். இல்துமிஷின் திறமைவாய்ந்த மகன் ருபி ரோஸ் மரணமுற்றதால் இல்துமிஷ் தனது மகளான ரஸியாவை அரியணைக்கான வாரிசாக அறிவித்தார். திறமையுள்ளவரும், மன வலிமை கொண்ட வீராங்கனையும் ஆவார் .
ரசியா துருக்கிய இனத்தைச் சாராத பிரபுக்களுக்கு ஆதரவாக இருந்ததால் துருக்கியப் பிரபுக்களின் வெறுப்பை சம்பாதித்தார். அதேநேரத்தில் பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.
ரசியா, ஜலாலுதீன் யாகுத் என்னும் எத்தியோப்பிய அடிமையை தனது உதவியாளராக நியமித்து, அவரை பெரிதும் நம்பத் தொடங்கினார். அப்போக்கு துருக்கிய பிரபுக்கள் கலகம் செய்ய காரணமாயிற்.று அவருக்கு எதிராக பிரபுக்கள் செய்த சதியால் கிபி 1240 இல் ரசியா கொலையுண்டார் .
கியாசுதீன் பால்பன்
ரசியாவுக்கு பின்னர் வலிமை குன்றி மூன்று சுல்தான்கள் ஆட்சி புரிந்தனர்.அவர்களுக்கு பின்னர் கியாசுதீன் பால்பன் அரசராக பொறுப்பேற்றார். 1765 நசுருதின் முகமது இறப்பிற்குப்பின் ஆட்சியில் அமர்ந்தார். தீபிக உரிமை கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். பைபோஸ் எனும் புதிய வணிக முறையை நடைமுறைப்படுத்தினார். பைபோஸ் முறைப்படி மன்னரை சந்திக்க வருபவர் அவரது காலை முத்தமிட்டு வணங்க வேண்டும்.
ஆட்சி முறை
துருக்கிய உயர்குடியினர்களை அடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினார் தனது ஆட்சிக்கு எதிராக சதி செய்வோரையும், நாற்பதின்பர் அமைப்பை களைத்துவிட்டு இடையூறாய் இருப்போரையும் கண்டறிய என்ற ஒற்றர் துறையென்றை நிறுவினார்.
மேலும் திவானி அர்ஸ் என்றொரு தனிப்படை பிரிவொன்றை உருவாக்கினார். அரசு அதிகாரத்திற்கு கீழ்ப்பணியாமை, எதிர்த்தல் போன்றவற்றைக் கடுமையாக கையாண்டார். பால்பனுக்கு எதிராக கலகம் செய்ததால் வங்காள மாகாண ஆளுநரான இருந்த துக்ரில்கான் கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
தனது எதிரிகளான வட மேற்கு இந்தியாவைச் சேர்ந்த ராஜபுத்திர முஸ்லிம் இனத்தினர் போன்றோரிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டார். இருந்தபோதிலும் மங்கோலியர்கள் உடன் இணக்கமான உறவை பராமரிப்பதில் கவனத்துடன் செயல்பட்டார். செங்கிஸ்கானின் பேரனும். ஈரானிய மங்கோலிய வைஸ்ராயுமான குலகுகான் என்பவரிடமிருந்து "மங்கோலியர்கள் சட்லெஜ் நதியை கடந்து படையெடுத்து வர மாட்டார்கள்" என்னும் உறுதிமொழியை பெற்றார் .மங்கோலியரின் தாக்குதல்களிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்காக பல கோட்டைகளை கட்டினார்.
மதிப்பீடு
கற்றவர்களை ஆதரிப்பதில் பால்பன் சிறந்து விளங்கினார். இந்திய கிளி என பாராட்டப்பட்ட அமீர் குஸ்ருவையும் அமீர் ஹாசன் என்ற அறிஞர்களை இவர் ஆதரித்தார். அடிமை வம்சம் மன்னர்களில் சிறந்த மன்னராகவும் திகழ்ந்தார்.
பால்பனின் முடிவு
பால்பனின் மகனான கைகுபாத் திறமையற்றவராக இருந்தார். 1290 இல் படைத்தளபதியாய் பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநியாகப் (நாயிப்) பெறுப்பேற்றார். சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டையாண்டார். பின்னர் ஒரு நாளில் ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால் கைகுபாத் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜலாலுதீன் முறையே அரியணை ஏறினார். அவரிலிருந்து கில்ஜி வம்சத்தின் ஆட்சி தொடங்கிற்று.
அடிமை வம்சம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா?
இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல
முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE