வணக்கம் நண்பர்களே முந்தைய பதிவில் வாக்கிய வகைகளை கண்டறிவது எப்படி எனப் பார்த்தோம்... பார்க்காதவர்கள் இங்கே சென்று பார்க்கலாம்.
ஒரு வாக்கியத்தைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக என வினாக்கள் அமையும்.
1. தன் வினை வாக்கியம்
ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை ஆகும்.
(எ.கா) செல்வி பாடம் கற்றாள்.
முருகன் திருந்தினான்
2. பிறவினை வாக்கியம்
ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
‘பித்து’ ‘வித்து’ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
(எ.கா) ஆசிரியை பாடம் கற்பித்தார்
அவன் திருத்தினான்
தன்வினை |
பிறவினை |
திருந்தினான் |
திருத்தினான் |
உருண்டான் |
உருட்டினான் |
பயின்றான் |
பயிற்றுவித்தான் |
பெருகு |
பெருக்கு |
செய் |
செய்வி |
வாடு |
வாட்டு |
நடந்தான் |
நடத்தினான் |
சேர்கிறேன் |
சேர்க்கிறேன் |
ஆடினாள் |
ஆட்டுவித்தாள் |
பாடினான் |
பாடுவித்தான் |
கற்றார் |
கற்பித்தார் |
தேடினான் |
தேடுவித்தான் |
உண்டாள் |
உண்பித்தாள் |
அடங்குவது |
அடக்குவது |
தச்சன் நாற்காலியைச் செய்தான்
அவள் மாலையைத் தொடுத்தாள்
ராதா பொம்மையைச் செய்தாள்
4. செயப்பாட்டு வினை வாக்கியம்
(எ.கா) கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது
(செயப்படுபொருள்) (எழுவாய்) (பயனிலை)
தஞ்சை சோழர்களால் புகழ்பெற்றது..
----------------------------------------------------------------------------------------------------------------
செய்வினை,பிறவினை போன்றவை கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் தேர்வெழுதி பார்க்க TOUCH HERE