எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் - TNPSC - PODHUTAMIL

எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல்


வணக்கம் நண்பர்களே! இதற்கு முந்தைய பதிவில் உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டறிதல் பதிவைப் பார்த்தோம் அல்லவா? (பார்க்காதவர்கள் பார்க்க)

        

மோனை:
 
ஒரு அடியிலோ அல்லது  சீர்களிலோ முதலெழுத்து ஒன்றி வருவது மோனை ஆகும்.

அடிமோனை, இணைமோனை,பொழிப்பு மோனை,ஒரூஉ மோனை,கூழை மோனை,கீழ்க்கதுவாய் மோனை,மேற்கதுவாய் மோனை,முற்று மோனை என் அவைகபடுத்தப்படுகிறது.


அடிமோனை(அடிதோறும்)

         அடிதோறும் முதற்சீரின் முதலெழுத்து ஒன்றி வருவது அடிமோனை ஆகும்.

(எ.கா) டி விளையாடு பாப்பா - நீ
             ய்ந்திருக்கலாகாது பாப்பா

இணை மோனை 1, 2

          ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் மோனை இணை மோனை ஆகும்.
(எ.கா) “றந்தார் றந்தா ரனையர் சினத்தை”

பொழிப்பு மோனை 1, 3

          ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.

(எ.கா) லர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்


ஒரூஉ மோனை 1, 4

         ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஒரூஉ மோனை ஆகும்.

(எ.கா) ழுக்கம் விழுப்பம் தரலான் ழுக்கம்

கூழை மோனை 1, 2, 3

          ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் மோனை கூழை மோனை ஆகும்.
(எ.கா) “ல்விக் ரையில ற்பவர் நாற்சில”

கீழ்க்கதுவாய் மோனை 1, 2, 4

         ஓரடியில் முதல் சீர், இரண்டாம் சீர், நான்காம் சீர் போன்றவற்றில் வரும்
மோனை கீழ்க்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “ற்றார் ழிபசி தீர்த்தல் ஃதொருவன்”

மேற்கதுவாய் மோனை 1, 3, 4

        ஓரடியில் ஒன்று, மூன்று, நான்காம் சீர்களில் வரும் மோனை மேற்கதுவாய் மோனை ஆகும்.
(எ.கா) “வானின்று உலகம் ழங்கி ருதலால்”

முற்று மோனை

        ஓரடியில் நான்கு சீர்களிலும் வரும் மோனை முற்று மோனை
(எ.கா) ற்க சடற ற்பவை ற்றபின்

எதுகை:

அடி எதுகை

        அடிதோறும் முதல் சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி
எதுகை ஆகும்.
(எ.கா.)செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
              செல்வத்துள் எல்லாம் தலை

இணை எதுகை 1, 2

        ஓரடியில் முதல் இரு சீர்களில் வரும் எதுகை இணை எதுகை ஆகும்
(எ.கா) “இன்மையுள் இன்மை விருந்தொறால் வன்மையுள்”

பொழிப்பு எதுகை 1, 3

        ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் எதுகை பொழிப்பு எதுகை
ஆகும்.
(எ.கா) “தோன்றின் புகமொடு தோன்றுக அஃதிலார்”

ஒரூஉ எதுகை 1.4

           ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் எதுகை ஓரூஉ எதுகை
ஆகும்.
(எ.கா) “ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்”

கூழை எதுகை 1, 2, 3

         ஓரடியில் முதல் மூன்று சீர்களிலும் வரும் எதுகை கூழை எதுகை ஆகும்.
(எ.கா) “பற்றுக பற்றற்றான் பற்றிணை அப்பற்றை”

கீழ்க்கதுவாய் எதுகை 1, 2, 4

        ஓரடியில் முதலாம் இரண்டாம், நான்காம் சீர்களிலும் வரும் எதுகை
கீழ்க்கதுவாய் எதுகை ஆகும்.
(எ.கா) செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்

மேற்கதுவாய் எதுகை 1, 3, 4

         ஓரடியில் முதலாம், மூன்றாம் நான்காம் சீர்களில் வரும் எதுகை
மேற்கதுவாய் எதுகை ஆகும்.
“கற்க கசடற கற்பவை கற்றபின்”

முற்று எதுகை 1, 2, 3, 4

          ஓரடியில் நான்கு சீர்களிலும் எதுகை வந்தால் அது முற்று எதுகை ஆகும்.
(எ.கா) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

இயைபுத் தொடை        

 ஒரு செய்யுளின், அடிகளிலும் சீர்களிலும் அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபுத்தொடையாகும்.

(எ.கா) திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

அசல் வினாத்தாள்:




எதுகை, மோனை, இயைபு போன்றவற்றை கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE.