எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி - TNPSC - Podhutamil

உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி - TNPSC - Podhutamil

                     உவமையால் விளக்கப்பெறும் பொருளைக் கண்டுபிடி   
               ஒரு உவமையைக் கொடுத்து அது வெளிப்படுத்தும் பொருள் என்ன என்பதைக் கண்டறிக என வினாக்கள் அமையும்.

            கொடுக்கப்பட்டிருக்கிற உவமையை நன்றாக புரிந்து கொண்டால்  எளிதாக விடையளிக்கலாம். இதில் பெரும்பாலும் புழக்கத்திலிருக்கும் பழமொழிகளில் இருந்து கேட்கப்படுகின்றன.

            எளிமையான பகுதிகளில் இதுவும் ஒன்று.

            கிழே சில உதாரணங்களைக் கொடுத்திக்கிறோம். இவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள் .


அசல் வினாத்தாள்:வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை
நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை போல                             - நிலையாமை
காராண்மை போல ஒழுகுதல்                                         - வள்ளல் தன்மை
நிலத்தறைந்தான் கை பிழையாதற்று                          - துன்பம்
விழலுக்கு இறைத்த நீர் போல                                        - பயனற்றது
புதையல் காத்த பூதம் போல                                            - பயனின்மை
தாமரை இலை தண்ணீர் போல                                      - பற்றற்றது
பால்மனம் மாறா குழந்தை போல                                  - வெகுளி
கடல் மடை திறந்த வெள்ளம் போல                            - விரைவாக வெளியேறுதல்
உடுக்கை இழந்தவன் கைபோல                                     - நட்பு
இடியோசை கேட்ட நாகம் போல                                   - அச்சம், மிரட்சி
புலி சேர்ந்து போகிய கல்லளை போல                       - வயிறு
சிப்பிக்குள் முத்து போல - மேன்மை
உமிகுற்றி கை வருந்தல் போல                                      - பயனற்ற சொல்
நீரும் நெருப்பும் போல                                                        - விலகுதல்
வெள்ளத்தனைய மலர் நீட்டம்                                        - முயற்சிக்கேற்ற பலன்
எட்டாப்பழம் புளித்தது போல                                           - விலகுதல்
கடன்பட்டவர் நெஞ்சம் போல                                         - வேதனை
நவில்தோறும் நூல் நயம்போல                                     - பண்பாளரின் தொகுப்பு
உடுக்கை இழந்தவன் கை போல                                    - நட்பு
அன்றளர்ந்த தாமரை போல                                             - சிரித்த முகம்
பகலவனைக் கண்ட பனி போல                                     - நீங்குதல்
குன்றேறி யானை போர் கண்டது போல                     - செல்வத்தின் சிறப்பு
கனியிருப்ப காய்கவர்ந்தற்று                                           - இன்னா சொல்
உள்ளங்கை நெல்லிக்கனி போல                                   - தெளிவு
பகலவனை கண்ட பனிபோல                                         - துன்பம் நீங்கிற்று
சிறுதுளி பெரு வெள்ளம்                                                    - சேமிப்பு
தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்                    - பாசம், பந்தம்
நகமும் சதையும் போல                                                     - ஒற்றுமை
நீர் மேல் எழுத்து போல                                                       - நிலையற்ற தன்மை
கண்ணைக் காக்கும் இமை போல                                  - பாதுகாப்பு
அடியற்ற மரம் போல                                                           - வீழ்ச்சி
செல்லரித்த நூலை போல                                                 - பயனின்மை
வேலியே பயிரை மேய்ந்தது போல                               - நம்பிக்கை துரோகம்
கிணற்றுத் தவளை போல                                                  - அறியாமை
செவிடன் காதில் ஊதிய சங்கு போல                           - பயனற்றது
அச்சில் வார்த்தாற் போல                                                   - உண்மைத் தன்மை
ஊமை கண்ட கனவு போல                                                - இயலாமை
மதில் மேல் பூனை போல                                                   - முடிவெடுக்காத நிலை
பசுத்தோல் போர்த்திய புலி                                                 - வஞ்சகம்
குரங்கு கையில் பூமாலை போல                                    - பயனற்றது
நீறு பூத்த நெருப்பு போல                                                      - பொய்த்தோற்றம்
இலைமறை  போல                                              - மறைபொருள்
அத்தி பூத்தாற்போல                                                               - எப்பொழுதாவது
பசுமரத்தாணி போல                                                               - ஆழமாக பதித்தல்
நாய் பெற்ற தெங்கப்பழம்                                                     - அனுபவிக்க தெரியாமை
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல                 - துன்பத்தை
மழை காணா பயிர் போல                                                   - வாட்டம் அதிகப்படுத்துதல்
திருடனுக்கு தேள் கொட்டியது போல                           - தவிப்பு


Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template