எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » குடியரசுத்தலைவர் - இந்திய அரசியலமைப்பு - TNPSC

குடியரசுத்தலைவர் - இந்திய அரசியலமைப்பு - TNPSC

இந்திய குடியரசு தலைவர் (பகுதி 5)பகுதி 5-இல்  விதி 52 முதல் 151 வரை  கூறப்பட்டுள்ளது

இந்திய அரசியலமைப்பின் படி குடியரசு தலைவர், இந்திய குடியரசுத் தலைவராகவும் இந்திய ஒன்றியத்தின் நிர்வாகத் தலைவராக விளங்குகிறார்.  இதைப் பற்றி கூறும் சரத்து 52 ஆகும். மேலும் நீதித்துறைக்கும் பொறுப்பு உடையவராவார்.  53 ஆவது அரசியல் சட்டத்தின்படி மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் இவருக்கு உள்ளன.  இவ்வதிகாரங்களை இவர் நேரடியாகவோ அல்லது கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தலாம்.

தேர்தல் 

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் பற்றி சரத்து 54 கூறுகிறது மற்றும் தேர்தல் நடைமுறை பற்றி சரத்து 55 கூறுகிறது.

குடியரசுத்தலைவருக்கான  தேர்தல் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பின்பற்றி ஒற்றை மாற்று வாக்கு முறையில் தேர்வாளர் குழுவால் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் இறுதி முடிவெடுப்பது உச்சநீதிமன்றம் ஆகும்

தேர்வாளர் குழு :

தேர்வாளர் குழுவில் லோக் சபை உறுப்பினர்கள், ராஜ்ய சபா உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்குவர்.

பதவிக்காலம்

குடியரசுத்தலைவரின் பதவிக்காலம் பற்றி சரத்து 56 கூறுகிறது.  குடியரசுத் தலைவர் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.  அவர் மீண்டும் ஒருமுறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட தகுதியுடையவர் ஆவார்.  மறு தேர்தலுக்கு தயாராவதை பற்றி சரத்து 57 கூறுகிறது. 

குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் : (சரத்து 58)

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
2. 35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்
3.லோக்சபா என அழைக்கப்படும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட கூடிய தகுதி உடையவராக இருக்க வேண்டும்
4.மத்திய மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவி வகித்தல் கூடாது
5.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநில சட்டமன்ற அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. அப்படி உறுப்பினராக இருந்தால் குடியசுத் தலைவர் தேர்வுக்கு முன்னர் விலகிவிட வேண்டும்.

பதவி நீக்கம்

இந்திய அரசியலமைப்பை மீறிய குற்றத்திற்காக குடியரசுத் தலைவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமெனில்  இரு அவைகளில் ஏதேனும் ஒரு அவையில் குற்றச்சாட்டுகள் கொண்டு வரலாம்.

தலைவர் மீது குற்ற விசாரணை தீர்மானம் கொண்டு வர விரும்பினால் 14 நாட்கள்  முன்னரே முன்னறிவிப்பு கொடுக்கப்பட்ட பின்னரே தீர்மானத்தை தாக்கல் செய்ய இயலும். முன்னறிவிப்பின் போது அவையின் மொத்த உறுப்பினர்கள் நான்கில் ஒரு பகுதியினராவது கையொப்பமிட்டு இருக்க வேண்டும். தீர்மானத்தை நிறைவேற்ற மொத்த உறுப்பினர்களில் குறைந்த அளவு மூன்றில் இரண்டு பகுதியினரது ஒப்புதல் பெற வேண்டும். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப்படும் தேதியிலிருந்து குடியரசு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுவார். இந்திய குடியரசு தலைவரை விசாரணை மூலமாகவும் பதவி நீக்கலாம். பதவிக்காலம் முடியும் முன்னரே குற்ற விசாரணை மூலம் அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தினால்  முடியும். சரத்து 61 இதைப் பற்றி கூறுகிறது.

இவர் பதவி விலக விரும்பினால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசுத் துணைத் தலைவர் மக்களவை தலைவருக்கு    குடியரசுத் தலைவர் ராஜினாமாவைப் பற்றி உடனடியாக அறிவிப்பார்.

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்

குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள் பற்றி சரத்து 53 கூறுகிறது.

1. நிர்வாக அதிகாரங்கள்
2. சட்டமன்ற அதிகாரங்கள்
3. நிதி அதிகாரங்கள்
4. நீதித்துறை அதிகாரங்கள்
5. ராணுவ அதிகாரங்கள்
6.நெருக்கடி கால அதிகாரங்கள்.

நிர்வாக அதிகாரங்கள்

இந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் நிர்வாக தலைவராவார்.  நாட்டின் நிர்வாகம் இவரது பெயரால் மேற்கொள்ளப்படுகிறது.  பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் அனைத்து சட்டங்களும் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக வெளிவரும்.  பிரதம அமைச்சர் மற்றும் அவரது அமைச்சர்களை நியமிக்கிறார்.  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளையும்,  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளையும் நியமனம் செய்கிறார்.  தேர்தல் ஆணையத்தின் தலைவரையும், அட்டர்னி ஜெனரல் மற்றும் தணிக்கை குழு தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ராணுவப்படை தளபதிகளையும் நியமனம் செய்கிறார்.  முப்படைகளுக்கும் தலைவராக இவர் விளங்குகிறார்.

சட்டமன்ற அதிகாரங்கள்

மத்திய நாடாளுமன்றத்தின் தலைவராக விளங்குகிறார். நாடாளுமன்றத்தில் இரு சபைகளைக் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.  இதை பற்றி கூறும் சரத்து 85 ஆகும்.  முதல் நாடாளுமன்ற கூட்டத்தை துவக்கி அதில் உரை நிகழ்த்துகிறார். குடியரசுத்தலைவரால் நிகழ்த்தப்படும் சிறப்புரை பற்றி கூறும் சரத்து 87 ஆகும்.  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவும் இவர் இசைவு பெற்ற பின்னரே சட்டம் ஆகிறது. இதைப் பற்றி கூறும் சரத்து 111 ஆகும்.  பண மசோதா இவரது அனுமதி பெற்ற பிறகே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. குடியரசுத்தலைவர் இரு அவைகளிடையே ஏதேனும் சட்டமியற்றும் போது கருத்து வேறுபாடு தோன்றினால் இரு அவைகளைக் கூட்டும் அதிகாரம்(Joint Sitting) பெற்றவர் குடியரசுத்தலைவர் ஆவார். கலை அறிவியல் இலக்கியம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பு பெற்றவர்களை 12 உறுப்பினர்களை நியமனம் செய்கிறார்.

நீதித்துறை அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் எந்த ஒரு நீதி மன்றத்திற்கும் கட்டுப் பட்டவர் அல்ல. எனினும் பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தப்படலாம்.  குற்றவாளிகளின் தண்டனையை கூட்டவோ குறைக்கவோ மேலும் தள்ளுபடி செய்யவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு,  மரண தண்டனையை கூட இவர் தள்ளுபடி செய்யலாம்.

நிதித்துறை அதிகாரங்கள்

நாட்டின் நிதிக்கு குடியரசுத் தலைவரே முழு பொறுப்பாவார்.  இவரது பரிந்துரை இல்லாமல் எந்த ஒரு நிதி மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்த இயலாது. ஆண்டு வரவு செலவு கணக்கு இவரது அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படுகிறது. எதிர்பாராத  நிதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இறுதி அங்கீகாரம் பெறும் முன்னர் அரசின் எதிர்பாரா செலவுகளை சமாளிக்க அரசுக்கு முன்பணம் வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.

ராணுவ அதிகாரங்கள்

முப்படைகளின் தளபதி குடியரசுத் தலைவர் ஆவார். முப்படைகளின் தளபதிகளும் நியமிக்கும் அதிகாரம் பெற்றவர் ஆவார். ராணுவ அதிகாரங்களை பாராளுமன்றத்தின் அனுமதி பெற்று மட்டுமே குடியரசுத்தலைவர் நிறைவேற்ற முடியும்.

நெருக்கடி கால அதிகாரங்கள்

குடியரசுத் தலைவர் மூன்று அதிகாரங்களை பெற்றுள்ளார்.

தேசிய நெருக்கடி நிலை (சரத்து 352)

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், அயல்நாட்டு படையெடுப்பு மற்றும் ராணுவ கிளர்ச்சி ஏற்படும்போது அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 352 வது பிரிவு வழி செய்கிறது.

மாநில நெருக்கடி நிலை (சரத்து 356)

ஒரு மாநிலத்தில், மாநில அரசு செயலற்றுப் போகும் போது அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலைமை கொண்டுவர இந்திய அரசமைப்புச் சட்ட 356-வது பிரிவு வழி செய்கிறது.

நிதி நெருக்கடி நிலை (சரத்து 360)

இந்தியாவில் பொருளாதார நெருக்கடி தோன்றினால் அதை சமாளிப்பதற்கு இந்திய அரசியல் சட்டம் 360 வது பிரிவு செய்கிறது இதன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியில் நிலைமை அறிவிக்கப்படுகிறது.

குடியரசுத்தலைவர் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template