Ads Area

புத்த சமயம் - கௌதம புத்தர் - இந்திய வரலாறு - TNPSC




புத்த சமயம் :

புத்த சமயம் இந்தியாவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது.தற்போது சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை என பல்வேறு நாடுகளில் பரவி கிடக்கிறது.புத்த சமயத்தை தோற்றுவித்தவர் கௌதம புத்தர் ஆவார். 

யார் இந்த புத்தர்?

புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் என்பதாகும். இவர் நேபாளத்தில் உள்ள கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி வனத்தில் பிறந்தார்.இவரது காலம் கிமு 563 முதல் 483 ஆகும்.இவர் சாக்கிய குலத்தைச் சார்ந்தவர் ஆவார். இவரது தந்தை பெயர்  சுத்தோதனர்,தாயின் பெயர் மாயா தேவி, இவர் கோசல நாட்டு அரசி ஆவார். புத்தர் பிறந்த ஏழாவது நாளில் தனது தாயை இழந்தார்.புத்தரின் வளர்ப்புத் தாய்  பிரஜாபதி  கௌதமி  ஆவார்.இவரது மனைவியின் பெயர் யசோதரா. இவரது மகனின் பெயர் ராகுல் அல்லது ராகுலன் ஆகும். 

புத்தர் சாக்கிய முனி எனவும் ஆசியாவின் ஒளி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தனது 29 ஆவது வயதில் துறவறம் மேற்கொண்டார்.இவர் துறவறம் மேற்கொள்ள காரணமான சிலவற்றைப் பார்ப்போம்

அவை, 
வயதான முதியவர், 
நோயாளி, 
பிணம,
முனிவர்
ஆகியவை ஆகும்.

புத்தர்  6 ஆண்டுகள் துறவு வாழ்க்கை மேற்கொண்டார்.தனது 35வது வயதில் ஞானம் பெற்றார்.இவர் பீகாரில் கயாவில் நிரஞ்சனா ஆற்றங்கரையில் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார்.எனவே அது புத்தகயா என அழைக்கப்படுகிறது.  இது ஒரு அரச மரமாகும். 

புத்தர் ஒரு முக்கிய போதனையை நிகழ்த்துவது தர்மசக்கரம் சுழற்சி என அழைக்கப்பட்டது இதை வடமொழியில் தர்மசக்கரம் பரிவர்த்தனம் என அழைக்கின்றனர்.புத்தரின் முதல் போதனை "தர்மசக்கரம் பரிவர்த்தனை" உத்தரப்பிரதேசம்,சாரநாத்திற்கு அருகில் உள்ள மான் பூங்கா என்னுமிடத்தில் நடைபெற்றது.

திரிபீடகங்கள் :
 
புத்த சமயத்தின் புனித நூல் திரிபீடகங்கள் ஆகும். திரிபீடகங்களை மூன்று கூடைகள் எனவும் கூறலாம்.இது பாலி மொழியில் பரப்பப்பட்டது. 

1. சுத்த பீடகம்
2. வினய பீடகம்
3. அபிதம்ம பீடகம்

சுத்த பீடகம் என்பது தூய்மை பற்றியும் 
வினய பிடகம் என்பது ஒழுக்கம் பற்றியும்
அபித்தம பீடகம்  என்பது அறநெறி பற்றியும் கூறுகிறது. 

மாநாடுகள் : 

முதல் மாநாடு இராஜகிருகத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கியவர் மகாகசபர் ஆவார். நடத்திய அரசர் அஜாதசத்ரு ஆவார். 

இரண்டாவது மாநாடு வைசாலியில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கியவர் சபகாமி ஆவார்.இதனை நடத்தியவர் காலசோகன் ஆவார். 

மூன்றாவது மாநாடு பாடலிபுத்திரத்தில் நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கியவர் மொகாலி புத்ததிசா ஆவார்..இதனை நடத்தியவர் அசோகர் ஆவார்.இம்மாநாட்டில் திரிபிடகம் இறுதிவடிவம் பெற்றது.
  
நான்காவது மாநாடு காஷ்மீரில் உள்ள குந்தல் வனத்தில் நடைபெற்றது.தலைமை தாங்கியவர் வசுமித்ரராவார்.இதனை நடத்தியவர் கனிஷ்கர் ஆவார்.கனிஷ்கர் காலத்தில் புத்த சமயம் இரண்டு பிரிவுகளாக பிரிந்தது.

ஐந்தாவது மற்றும் ஆறாவது மாநாடுகள் முறையே  ஹர்ஷர் காலத்தில் கன்னோசி மற்றும் அலகாபாத்தில் நடைபெற்றது.

கனிஷ்கர் காலத்தில் புத்தம் மகாயானம், ஹீனயானம் என இரண்டு பிரிவுகளாக பிரிந்தது.

1.மகாயானம் : புத்தரை கடவுளாக கொண்டு வழிபட்டவர்கள் 
2.ஹீனயானம் : உருவ வழிபாடு இல்லை, கொள்கை வழிபாடு மட்டுமே. 

அசோகரும் ஹீனயானத்தை பின்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீனயான பௌத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் சௌத்திராந்திகம், வைபாடிகம் போன்ற பிரிவுகள் தோன்றியிருந்தாலும், தற்போது தேரவாதப் பிரிவே நிலைத்துள்ளது. 

மகாயானம் இந்தியா சீனா ஜப்பான் நாடுகளில் பரவியது, ஹீனயானம் இலங்கை பர்மா ஆகிய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பரவியது. 

பேருண்மைகள்:

புத்த சமயம் நான்கு பேருண்மைகள் பற்றியும் உரைக்கிறது. 

1.மனித வாழ்க்கை துன்பம் நிறைந்தது.  
2.துன்பத்திற்கு காரணம் ஆசை. 
3.துன்பத்தினை நீக்க ஆசையை ஒழிக்க வேண்டும். 
4.ஆசையை ஒழிக்கும் எண்வழிப்பாதை. 

எண்வழிப்பாதை : 

1. நன்னம்பிக்கை
2. நல்லெண்ணம்
3. நல்வாக்கு
4. நற்செயல்
5. நல்வாழ்வு
6. நன்முயற்சி
7. நற்சிந்தனை
8. நல்ல தியானம்

புத்த துறவிகளின் விகாரங்கள்(மடங்கள்) மிகுந்த மாநிலம் பீகார் ஆகும். புத்தர் 80 வயதில் உத்திரப்பிரதேசத்தில் உள்ள நகரம் குசிநகரம் என்னும் இடத்தில் இயற்கை எய்தினார். இது பரிநிர்வாணம் எனப்படுகிறது. 

புத்தர் இறக்கும்போது மகத மன்னராக இருந்தவர் அஜாதசத்ரு என்பது குறிப்பிடத்தக்கது. புத்தசரிதம் அஸ்வகோஷர் என்பவரால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. புத்தமத அறிஞர் நாகர்ஜுனா Doctorine of Shunyata கோட்பாட்டை விளக்கியுள்ளார். மகாயானத்தை பின்பற்றியவர்கள் புதியவர்கள் என்றும் ஹீனயானத்தை பின்பற்றியவர்கள் பழமைவாதிகள் எனவும் கூறப்பட்டது.

புத்தரின் சீடர்கள் :

சரிபுட்டர், மொக்கலண்ணர், ஆனந்தர், கசபர்,  உபாலி, கோசல நாட்டு மகத நாட்டு பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு.  

புலன்களுக்கு எட்டாத வெற்று தத்துவங்களான ஆன்மா, கடவுள், மறுபிறவி போன்றவற்றில் ஈடுபடுவதை புத்தர் தவிர்த்தார். புத்தசமய எழுச்சியை சமூக புரட்சி என்றும் கூறலாம். 

புத்தத்தை பின்பற்றிய சீடர்கள் இரண்டு வகைப்படுவர். 

1.பிக்குகள் 
2.உபாசகர்கள் 

புத்த சமயத்தைப் பற்றி கூறும் இலக்கியங்கள் : 

தீபவம்சம் என்பது தீவு பற்றியது, மகாவம்சம்(மகாநாமதேரர்) என்பது பெரும் வரலாற்று குறிப்பு மற்றும் குலவம்சம் என்பது சிறிய வரலாற்றுக் குறிப்பு ஆகும். 

தமிழ்நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தில் பௌத்த வளாகம் இருந்தது என தொல்லியல் ஆய்வு குறிப்பிடுகிறது. 

வரலாற்று அறிஞரான நொபொரு கராஷிமா தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாறு எனும் நூலில் பட்டினப்பாலை பற்றி குறிப்பிடுகிறார்.

பல்லவ அரசன் இரண்டாம் நரசிம்மவர்மன் நாகப்பட்டினத்தில் பௌத்த கோவில் ஒன்றை நிறுவினார்.  

புத்தரின் போதனைகள் தம்மா எனப்படுகின்றன.

புத்த சமயத்தின் கட்டிடக் கலைக்கு சாஞ்சி, கயா போன்ற இடங்களில் உள்ள கோயில்கள் எடுத்துக்காட்டுகளாகும். 

ஹீணர்களான தோரமானர், மிகிரகுலர் ஆகியோரின் படையெடுப்பாலும், துருக்கிய படையெடுப்பாலும் புத்தத்தை பின்பற்றியவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி சீனா, இலங்கை, நேபாளம் போன்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். புத்த சமயத்தின் வீழ்ச்சிக்கு காரணம் பக்தி இயக்கங்களும் ஆகும். 

புத்த சமயம் - கௌதம புத்தர் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Bottom Post Ad

Ads Area