எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » அடிப்படைக் கடமைகள் - பகுதி - 4a - இந்திய அரசியலமைப்பு - TNPSC

அடிப்படைக் கடமைகள் - பகுதி - 4a - இந்திய அரசியலமைப்பு - TNPSC

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படைக் கடமைகள்  இடம் பெறவில்லை.பிறகு  சோவியத் யூனியன் ரஷ்யா அரசியலமைப்பிலிருந்து எடுக்கப்பட்டதுதான் அடிப்படை கடமைகள். 

இந்திய குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகள் எவ்வாறு வேண்டுமோ அதேபோல் அடிப்படைக் கடமைகளும் வேண்டும் என்று பிரதமர் இந்திரா காந்தி தீர்மானித்தார்.  பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் அடிப்படை கடமைகள் இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.
               
ஸ்வரண்சிங் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் படி 1976 ஆம் ஆண்டு 42 வது சட்ட திருத்தத்தின்படி பகுதி 4a அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.  இதைப் பற்றி கூறும் சரத்து 51a ஆகும்.  இதில் 10 அடிப்படை கடமைகள் இருந்தன.  ஆனால் தற்போது 11 அடிப்படை கடமைகள் உள்ளன. பதினொன்றாவது அடிப்படைக் கடமை 86 வது சட்டத்தருத்தம் 2002 இன் படி சேர்க்கப்பட்டது.   இது பிரிவு 21 எ -இல் கூறப்பட்டுள்ளது.  அதாவது 2009-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட  ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் யாவருக்கும் கல்வி வாய்ப்புகளை பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஏற்படுத்தித் தருதல். இதுவே 11-வது அடிப்படை கடமையாகும். 

அடிப்படை கடமைகள் 

1. ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் அரசியல் சட்டம், தேசியக் கொடி, தேசிய சின்னம், தேசிய கீதத்தை மதித்து நடக்க வேண்டும்.

2.சுதந்திரப்போராட்ட வீரர்களின் கொள்கைகளை மனதார பின்பற்ற வேண்டும்.

3.இந்தியாவின் இறையாண்மையையும் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும்  காப்பாற்ற வேண்டும்.

4. நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்ற வேண்டும் 

5. மதம், மொழி, இனம், வகுப்பு வேற்றுமைகளை களைந்து சகோதரத்துடன் இருக்க வேண்டும்

6. நம்முடைய பண்பாடு, பன்முக பாரம்பரிய கலாச்சாரத்தின் மேன்மையை  பாதுகாக்க வேண்டும் 

7. இயற்கை வளங்களையும், சுற்றுச்சூழலையையும் பாதுகாக்க வேண்டும்.

8. அறிவியல் மனப்பான்மை மற்றும் மனிதநேயம் வளர்த்தல்

9. பொதுச் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் 

10.தன்னுடைய முயற்சியினால் அனைத்து துறைகளிலும் தனித்தும் கூட்டமாகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.

11.14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு  கட்டாய கல்வி வழங்கப்பட வேண்டும்.

அடிப்படைக்கடமைகளுக்கு தொடர்பான சில சட்டங்கள் : 

சமூக விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

தேசியக் கொடி தேசிய கீதம் அவமதிப்பு எதிரான சட்டம் 1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 

வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது

வன பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 

வர்மா கமிட்டி 1999 இல் உருவாக்கப்பட்டது. இந்த வர்மா கமிட்டி அடிப்படை கடமைகள் மீதான விதிமீறலுக்கு அமைக்கப்பட்டது. வர்மா குழு பரிந்துரைப்படி அடிப்படை கடமைகளை மீறினால் நீதிமன்றங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அடிப்படைக் கடமைகள்  பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template