எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , » டேனியர்கள் வருகை - ஐரோப்பியர் வருகை - TNPSC

டேனியர்கள் வருகை - ஐரோப்பியர் வருகை - TNPSC


டேனியர்கள் யார்:

டேனியர்கள் டென்மார்க்கை சார்ந்தவர்கள் ஆவார்கள்  (டென்மார்க் மற்றும் நார்வே இரண்டும் 1813 வரை இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது)

டேனியர் வசம் இருந்த இடங்கள்:

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் குடியேற்றங்களை கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் தரங்கம்பாடி,  மேற்கு வங்காளத்தில் செராம்பூர் (சீராம்பூர்), நிக்கோபார் தீவுகள் ஆகியன டேனியர் வசம் இருந்த பகுதிகள் ஆகும்.

தலைமையகம்:

செராம்பூர்

டேனிய கிழக்கிந்திய கம்பெனி

1616, மார்ச் 17ஆம் நாள் டென்மார்க் அரசர் நான்காம் கிறிஸ்டியன் ஒரு பட்டயத்தை வெளியிட்டதன்  மூலம் டேனிய கிழக்கிந்திய கம்பெனியை உருவாக்கினார்.  டேனிய வணிகரிடையே இந்நிறுவனத்திற்கு பெரும் ஆதரவு ஏதுமில்லை.
  
தமிழகம் வந்த கதை:

1618-இல்  கடற்படைத் தலைவர் ஒவி ஜெடி இலங்கைக்கு முதல் கடல் பயணத்தை மேற்கொண்டார்.

டேனியரால்  இலங்கையோடு வணிக ஒப்பந்தம் எதையும் மேற்கொள்ள இயலவில்லை,  ஏமாற்றத்தோடு திரும்புகிற வழியில் காரைக்கால் அருகே அவர்களின் முக்கிய கப்பல் போர்ச்சுகீசியரால் மூழ்கடிக்கப்பட்டது.

கப்பலில் சிக்கிக்கொண்ட 13 மாலுமிகளும் அவர்களின் வணிக இயக்குனரான ராபர்ட் கிராபி என்பவரும் தஞ்சாவூர் நாயக்க அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டனர்.  ராபர்ட் கிராபி தஞ்சாவூர் அரசரோடு பேச்சுவார்த்தை நடத்தி ஓர் ஒப்பந்தத்தையும் செய்து கொண்டார்.

1620, நவம்பர் 20 ஆம் நாள் கையெழுத்தான  அவ்வொப்பந்தத்தின்படி, டேனியர்கள்  தரங்கம்பாடியையும் அதில் கோட்டை கட்டிக் கொள்ளும் உரிமையையும் பெற்றனர்.

தரங்கம்பாடியில்  உள்ள  டேனியர் கோட்டை கட்டினர்.மசூலிப்பட்டனத்தில் ஒரு கிடங்கை அமைத்தனர். பாலசோரிலும், பிப்ளி(ஹீக்ளி ஆற்றின் அருகே )என்ற இடத்திலும்  வணிக  முகாம்களை அமைத்தனர்.  ஆனாலும் பெரிய வளர்ச்சியை அந்நிறுவனம் எட்டவில்லை.இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த டென்மார்க் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை கலைக்க வேண்டும் என்றனர்.   ஆனால் அரசர் நான்காம் கிறிஸ்டியன் அதை எதிர்த்தார். 

1648-இல்  அவரின் மரணத்திற்குப் பின்னர் அவருடைய மகன் பிரெடரிக் இந்நிறுவனத்தை கலைத்தார். இரண்டாவது டேனிய கிழக்கிந்திய கம்பெனி 1696- இல் தொடங்கப்பட்டது.

டென்மார்க்கிற்கும் தரங்கம்பாடி க்கும் இடையிலான வணிகம் மீண்டும் நடைபெறத் துவங்கியது.   பல புதிய வணிக முகாம்கள் அமைக்கப்பட்டன. தஞ்சாவூர் நாயக்க அரசர் தரங்கம்பாடியைச் சுற்றி இருந்த மேலும் மூன்று கிராமங்களை பரிசாக அளித்தார்.  1706, ஜூன் 9-ஆம் நாள் டென்மார்க்கிலிருந்து முதன்முதலாக 2 லுத்தரன் சமயப் பரப்பாளர்கள் வந்தனர். டேனியர்கள் 1755-இல்  அந்தமானிலும், நிக்கோபாரிலும் குடியேறினர்.   ஆனால் மலேரியா காய்ச்சல் ஏற்படுத்திய அச்சத்தால்  அங்கிருந்து வெளியேறினர்.

தமிழகமும் டேனியர்களும்

தரங்கம்பாடியில்  டேனியர் கட்டிய கோட்டை இன்றும் சீர் கெடாமல் உள்ளது. டென்மார்க்கிலிருந்து  இந்தியா வந்த முதல் இரண்டு லுத்தரன் மதப்பரப்பாளர்களான  பார்த்தலோமிய சீகன்பால்கு, ஹென்ரிச் புலுட்சா ஆகிய இருவரும் 1706 செப்டம்பரில் தரங்கம்பாடி வந்தனர்.

அவர்கள் சமயப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.10 மாதங்களுக்குள் தங்களால் மதமாற்றம் செய்யப்பட்டோருக்குத்  திருமுழுக்கு சடங்கு நடத்தி வைத்தனர்.  அவர்களின் பணிகளை உள்ளூர் டேனிய அதிகாரிகளும் இந்துக்களும் எதிர்த்தனர்.உள்ளூர் மக்களை  மதமாற்றம் செய்வதன் மூலம் சீகன்பால்கு  கலகத்தை  தூண்டுகிறார்  எனக் குற்றம் சாட்டப்பட்டு  நான்கு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 

டென்மார்க்கின் கோபன்ஹேகனைச் சேர்ந்த ஒரு மத பரப்பாளர்  சங்கம் உள்ளூர் கிறிஸ்துவ திருச்சபையை ஊக்கப்படுத்த நினைத்தது.   அதன்படி தனது மத பரப்பாளர்களை மத போதனையை மட்டும் செய்யுமாறும்,  ஏனையவற்றை பற்றி கவலைப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.   இருந்தபோதிலும் சீகன்பால்கு மற்றவர்கள் நலனில் அக்கறை கொள்வது என்பது மத போதனையின்  உட்பொருளாக உள்ளது என வாதிட்டார்.

சீகன்பால்கு ஓர் அச்சுக் கூடத்தை நிறுவினார். தமிழ்மொழி , இந்திய மதங்கள்,  பண்பாடு குறித்த நூல்களை வெளியிட்டுள்ளார்.   1715-இல் அவர் விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை  தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.   அவரும் அவருடைய சகாக்களும்,  1718-இல் கட்டிய தேவாலய கட்டடமும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது சிறப்பு மிக்கது.  உள்ளூர் மத குருமார்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஒரு இறையியல் பயிற்சி பள்ளியையும் நிறுவினார்.

1719, பிப்ரவரி 23ம் நாள் அவர் இயற்கை எய்திய போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பழைய மற்றும் புதிய ஏற்பாடு தமிழில் சுருக்கமாக எழுதப்பட்ட பல ஏடுகள் இரண்டு தேவாலயங்கள் இறையியல் பயிற்சி பள்ளி ஆகியவற்றையும் புனித நீராடல் சடங்கை முடித்து இருந்த 250 கிறிஸ்தவர்களையும் விட்டுச் சென்றார். 

1839 இல் செராம்பூர் ஆங்கிலேயருக்கு விற்கப்பட்டது.  தரங்கம்பாடி உள்ளிட்ட ஏனைய குடியேற்றங்கள் 1845ஆம் ஆண்டு விற்கப்பட்டன.  இறுதியில் டேனியர்கள் தங்கள் வாணிபத்தலங்களை ஆங்கிலேயர்களுக்கு விற்றுவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர்.

டேனியர்கள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template