Ads Area

வைகுண்ட சுவாமிகள் - Vaikunda Swamigal

வைகுண்ட சுவாமிகள்

கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள சாமிதோப்பு என்றழைக்கப்படும் சாஸ்தா கோவில் விளை என்னும் கிராமத்தில் பிறந்தார் . 

இவரது இயற்பெயர் முடிசூடும் பெருமாள் ஆகும் . இப்பெயருக்கு உயர்சாதி இந்துக்கள்  எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது பெற்றோர் முத்துகுட்டி என பெயரை மாற்றினர் . 

வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியை  வெள்ளை பிசாசுகளின் ஆட்சி என்றும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியை  கருப்பு பிசாசுகளின் ஆட்சி என்றும் விமர்சித்தார்.  

ஒடுக்கப்பட்ட மக்கள் தலைப்பாகை அணியக் கூடாது என்று இருந்த நிலையை மாற்றும் வகையிலும்  அதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் மக்களை தலைப்பாகை அணியும் படி கூறியவர் வைகுண்ட சுவாமிகள்.


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சுதந்திர உணர்வை வழங்கியதோடு அவர்களுக்கு சுயமரியாதையை சார்ந்த ஊக்கத்தையும் கொடுப்பதற்கும்  பல்வேறு சாதிகளை சேர்ந்த மக்களை ஒருங்கிணைப்பதற்கும் வைகுண்ட சுவாமிகள் 'சமத்துவ சமாஜம்' எனும் அமைப்பை நிறுவினார் .  

இவர் இந்த நோக்கத்தில் வெற்றி பெறுவதற்காக அனைத்து சாதி மக்களும் சேர்ந்து உண்ணும் வகையில் சமபந்தி விருந்துகளை நடத்தினார் .

மேற்கண்ட காரணங்களுக்காக திருவிதாங்கூர் அரசரால் சிறையில் அடைக்கப்பட்ட போதும் தனது கொள்கைகளை விட்டு தராமல் இருந்தார் .  

அவரை பின்பற்றியவர்கள் அவரை மிக்க மரியாதையுடன் ஐயா என அழைத்தனர் . அவருடைய சமய வழிபாட்டு முறை அய்யாவழி எனப்பட்டது.

வருடைய அறிவுரைகள் நீதிக்குப் புறம்பான சமூக பழக்கவழக்கங்களில் இருந்தும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவித்தது. அவருடைய கருத்துகள் ஒரு நூலாக திறக்கப்பட்டுள்ளது, அந்நூலின் பெயர் அகிலதிரட்டு என்பதாகும்.

வைகுண்ட சுவாமிகள் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் செய்து நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.

Bottom Post Ad

Ads Area