Ads Area

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்


வங்காளத்தைச் சேர்ந்த முதன்மையான சீர்திருத்தவாதிகளுள் ஈஸ்வர சந்திர வித்யாசாகரும் ஒருவராவார். ராஜாராம் மோகன்ராய் மற்றும் பிற சீர்திருத்தவாதிகளும் சமூகத்தை திருத்துவதற்கு மேலைநாட்டு கருத்துக்களையே நாடினர். ஆனால் இந்த மறை நூல்களே முற்போக்கானவை என்று கூறியவர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்.விதவைகளை எரிப்பதும், விதவை மறுமணத்தை தடை செய்வதும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதற்கு மறை நூல்களில் இருந்தே சான்றுகளை முன் வைத்தார் ஈஸ்வர சந்திர வித்யாசாகர். இவர்  நவீன உரைநடையின் முன்னோடி என அழைக்கப்படுகிறார் .

ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
ஈஸ்வர சந்திர வித்யாசாகர் தலைமையேற்ற இயக்கத்தின் விளைவாக 1856 இல் விதவைகள் மறுமணச் சட்டம் இயற்றப்பட்டது விதவைகள் மறுமணச் சட்டம் மறுமண சீர்திருத்த சட்டம் எனவும் அழைக்கப்பட்டது . இவர் பெண்களின் கல்விக்காக மிகவும் பாடுபட்டார் . எனவே பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் என அழைக்கப்படுகிறார் . 1860 இல் முதல்முறையாக திருமண வயது சட்டம் இயற்றப்பட்டது. இப்பெருமை ஈஸ்வர சந்திர வித்யாசாகரையே சாரும்.


ஆரம்பகட்டத்தில் திருமண வயது பத்து என்று நிர்ணயம் செய்யப்பட்டது, பின்னர் 1891இல் 12 ஆகவும், 1925இல் பதிமூன்று ஆகவும் உயர்த்தப்பட்டது. .  ஆனால் திருமண வயது ஒழுங்கு கமிட்டி 1929இல் கூறிய இச்சட்டம் காகிதத்தில் மட்டுமே இருந்தது.  நீதிபதிகள் வழக்கறிஞர்கள் மற்றும் ஒருசில படித்தவர்கள் மட்டுமே இச்சட்டத்தை பின்பற்றினர். படிப்பறிவு இல்லாதவர்கள் இச்சட்டத்தை பின்பற்ற இயலவில்லை .

Bottom Post Ad

Ads Area