Ads Area

19 ஆம் நூற்றாண்டின் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் - நோக்கங்கள்

வணக்கம் நண்பர்களே! போட்டித்தேர்வுகளில் தவறாமல் இடம் பெறக்கூடிய ஒரு பகுதிதான்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் ஆகும்.இந்த நூற்றாண்டில் தோன்றி மக்கள் மத்தியில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கங்களைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியம்.

அடிப்படைக்காரணம்:

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்திய மக்கள் பகுத்தறிதல், சமத்துவம், சுதந்திரம் மற்றும் மனிதாபிமானம் போன்றவற்றில் கவனம் செலுத்த முற்பட்டனர். இந்திய பண்பாட்டில் இருந்த குறைகளை களைந்து இந்தியாவின் பழம்பெரும் கலாச்சார புகழை மீண்டும் கொண்டுவர விரும்பினர். இதனால் அவர்கள் பல்வேறு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களைத் தோற்றுவித்தனர்.

இத்தகைய சமய சமூக சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.





முக்கிய இயக்கங்கள்

பிரம்ம சமாஜம்(வங்காள இயக்கம்)

பிரார்த்தனை சமாஜம்
அலிகார் இயக்கம் 

தியோபந்த் இயக்கம்
 (இசுலாமிய இயக்கங்கள்)
ஆரிய சமாஜம்

ராமகிருஷ்ணாஇயக்கம் 

பிரம்மஞானசபை
(இந்து புத்தெழுச்சி இயக்கங்கள்) 

பார்சி சீர்திருத்த இயக்கம்

சீக்கிய சீர்திருத்த இயக்கம்






நன்மைகள்:


புனேவைச் சார்ந்த ஜோதிபா பூலே, அம்பேத்கர், கேரளாவைச் சார்ந்த நாராயணகுரு மற்றும் அய்யன்காளி, தமிழகத்தில் ராமலிங்க அடிகள் , வைகுண்ட சுவாமிகள், அயோத்திதாசர், பெரியார் போன்றவர்கள் உருவாக்கிய சாதி எதிர்ப்பு இயக்கங்கள் ஆகியன சமுதாய மாற்றங்களை ஏற்படுத்திய முக்கிய இயக்கங்கள் ஆகும்.  

சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்திலும் சமயத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின.சமூகத்தில் பரவியிருந்த கொடுமைகளான உடன் கட்டை ஏறுதல், குழந்தை திருமணங்கள், தீண்டாமை போன்றவை ஒழிய பெரும் உதவியாக அமைந்தன.விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணங்கள் ஆகியவை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மக்களிடையே சமுதாய எழுச்சி, தேசிய உணர்வு பெருகிட வழிவகுத்தன. மக்கள் தங்களின் கலாச்சார மற்றும் அதன் பெருமைகளை அறிந்து கொள்ள செய்தன. அனைத்திற்கும் மேலாக இவ்வியக்கங்கள் அறிவியல் மற்றும் நேர்மையான வழியில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணச் செய்தன.

Bottom Post Ad

Ads Area