எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , , , , , » இந்தியாவின் இருப்பிடமும் பரவலும் - புவியியல் - TNPSC

இந்தியாவின் இருப்பிடமும் பரவலும் - புவியியல் - TNPSC

                   


இந்தியா ஒரு பார்வை:

இந்தியாவின் நில எல்லைகள்:

இந்தியாவின்  நீர் எல்லைகள் :

இந்தியாவின் புவியியல் பரவல்:

இந்தியாவின் உருவ அளவு:இந்தியா ஒரு தீபகற்ப நாடாகும். மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்ட பெரிய நிலப்பகுதி இந்தியா ஆகும்.  இது இந்திய துணைக்கண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 
கண்டம் என்பது பல்வேறு வகையான இயற்கை அமைப்புகளையும் கால்நடைகளையும் இயற்கை தாவரங்களையும் கனிம மற்றும் மனித வளங்களையும் பல்வேறு மொழிகளையும் மிகப்பரந்த நிலப்பரப்பையும் கொண்டுள்ளதாகும். ஒரு கண்டத்திற்கு உரிய மேற்கண்ட பண்புகள் அனைத்தும் இந்தியாவில் காணப்படுவதால் இந்தியாவை ஒரு துணை கண்டம் என அழைக்கிறோம்.


ஆசிய கண்டத்தின் பழமையான நாகரிகம் கொண்ட மிகப்பெரிய நாடு இந்தியா ஆகும்.  இந்திய நாடு கலாச்சாரத்தினால் எவ்வளவு பலம் பெற்று உள்ளதோ அவ்வளவு பலத்தை நமது புவியியல் அமைப்பும் பெற்றுள்ளது.  

வரலாற்று காலத்தில் இந்தியா "பாரதம்" என்றும் "இந்துஸ்தான்" என்றும் அழைக்கப்பட்டது.  ஒரு காலத்தில் வலிமை வாய்ந்த அரசனாக இருந்த பரதன் என்பவரை பின்பற்றி இந்தியாவை பாரதம் என்றும் சிந்து ஆற்றின் பெயரால் இந்துஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது என கூறப்படுகிறது. அதன்பின் வந்த ஐரோப்பியர்கள் சிந்து என்ற சொல்லின் அடிப்படையிலேயே இந்தியா என்று பெயரிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்திய நாடு 29 மாநிலங்களாகவும், 9 ஒருங்கிணைந்த பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தில்லி, நாட்டின் தலைநகரப் பிரதேசம் ஆகும்.  2019, அக்டோபர் 31 வரை  இந்தியாவின் 7 ஒருங்கிணைந்த பிரதேசங்கள் இருந்தன. அக்டோபர் 31, 2019 அன்று ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக சேர்க்கப்பட்டதால் மாநில அந்தஸ்தை இழந்தது.  2014 ஜூன் 2-இல் தெலுங்கானா ஆந்திர பிரதேசத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 29 ஆவது மாநிலமாக உருவாக்கப்பட்டது. தற்போது காஷ்மீரத்தை கழித்து இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் இருந்தன. தாத்ரா நகர் ஹைவேலியுடன் டையூ டாமன் 2020 ஜனவரி 26 அன்று இணைக்கப்பட்டதால் தற்போது 8 யூனியன் பிரதேசங்கள் உள்ளன

ஆந்திரப் பிரதேசத்தின் வடகிழக்குப் பகுதி பிரிக்கப்பட்டு தெலுங்கானா என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலமாக ஆந்திராவின் தலைநகரமாக இருந்து வந்த ஐதரபாத் நகரம், தெலங்கானாவின் தலைநகரமாக மாறியது. எனினும் ஆந்திர பிரதேச மறுசீரமைப்பு சட்டம் 2014-இன் படி ஐதராபாத் ஆந்திரப் பிரதேசத்தின் சட்டப்பூர்வ தலைநகராக அதிகபட்சம் பத்தாண்டுகள் (2024)வரை நீடிக்கும். அதற்குள் புதிய தலைநகரமாக அமராவதி என்ற நகரம் உருவாக்கப்பட்ட பிறகு அது சட்டப்படி ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக மாறும்.


இந்தியாவின் நில எல்லைகள் : 

                    இந்தியா பரப்பளவில் ஆசிய கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகவும்,  உலகின் ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது.  இந்தியாவின் நிலப்பரப்பு 32,87,263 சதுர கிலோமீட்டர் ஆகும்.  புவியின் மொத்த பரப்பளவில் 2.4 சதவீதம் ஆகும்.  உலகில் உள்ள பல நாடுகளை விட இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பரப்பளவில் பெரியவைகளாக உள்ளன.  

                  இந்தியாவின் நில எல்லைகள் 15200 கிலோமீட்டர் ஆகும்.  இந்தியா மேற்கில் பாகிஸ்தானுடனும் வடமேற்கில் ஆப்கானிஸ்தானும், வடக்கில் சீனா, நேபாளம்,  பூட்டான்  நாடுகளுடனும்,  கிழக்கில் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளுடனும்  நிலஎல்லைகளை பகிர்ந்து கொள்கிறது.  மேலும் இந்தியா அதிகபட்சமாக வங்கதேசத்துடன் 4156 கிலோ மீட்டர் நீளமுள்ள நில எல்லையையும்,  குறுகிய எல்லையாக ஆப்கானிஸ்தானுடன் 106 கிலோ மீட்டர் நிலஎல்லையையும் கொண்டுள்ளது.    

            இந்திய கங்கைச் சமவெளியானது இந்தியாவின் வடக்கு, கிழக்கு, மற்றும் மத்திய பகுதிகளில் பரவியுள்ளது. தக்காணப் பீடபூமி தென்னிந்தியாவின் பெரும்பகுதியில் பரவியுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் தார் பாலைவனம் அமைந்துள்ளது. இது மணலும் பாறைகளும் கலந்து காணப்படும் பகுதியாகும்.  

             
             இமாலய மலைத்தொடரானது இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் எல்லையாக அமைந்துள்ளது.இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. 


இந்தியாவின்  நீர் எல்லைகள் :

          இந்தியா தெற்கில் இந்தியப் பெருங்கடலாலும், கிழக்கில் வங்காள விரிகுடாவாலும், மேற்கே அரபிக்கடலாலும் சூழப்பட்டு சுமார் 6100 கிலோ மீட்டர் நீளமுள்ள நீண்ட கடற்கரை பகுதியை மூன்று பக்கங்களில் கொண்டுள்ளது.   இந்திய கடற்கரையின் மொத்த நீளம் மற்றும் தீவுக் கூட்டங்களையும் சேர்த்து 7516.6 கிலோமீட்டர் ஆகும்.  இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் குறுகிய ஆழமற்ற கடல் பகுதி பாக் நீர் சந்தி ஆகும்.

               குஜராத், மகாராஷ்டிர, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. இந்த மாநிலங்களின் கடற்கரைகளில் பெரிய மற்றும் சிறிய துறைமுகங்கள் அமைந்துள்ளன. இவற்றில் பல இயற்கையாகவே அமைந்த துறைமுகங்கள் ஆகும்.  வங்காள விரிகுடாவிலுள்ள அந்தமான் நிகோபார் தீவுகளும் அரபிக் கடலிலுள்ள இலட்சத் தீவுகளும் இந்தியாவின் பகுதிகளாகும்.


இந்தியாவின் புவியியல் பரவல்:

அட்சக்கோடுகள் தீர்க்க கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தை அறிந்துகொள்ள உதவுகின்றன.  இந்தியா  8°4' வட அட்சரேகை முதல் 37°6' வட அட்சரேகை வரையிலும் 68° 7' கிழக்கு தீர்க்கரேகை முதல் 97° 25'கிழக்கு தீர்க்கரேகை வரையிலும் பரவியுள்ளது. இதன் மொத்த பரப்பளவு 3,287,263 சதுர கி. மீ. ஆகும். இந்தியா வடக்கே  காஷ்மீரிலுள்ள இந்திராகோல் முதல் தெற்கே கன்னியாகுமரி வரை 3,214 கி.மீ. நீளத்தையும், மேற்கே  குஜராத்திலுள்ள ரான் ஆப் கட்ச் முதல் கிழக்கே அருணாச்சலப் பிரதேசம் வரை 2,933 கி.மீ. நீளத்தையும் கொண்டுள்ளது.  ஐரோப்பிய நாடுகளுடன் சூயஸ் கால்வாய் வழியாகவும் சீனா ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளுடன் மலாக்கா நீர் சந்தி வழியாகவும் வணிகம் மற்றும் பொருளாதார செயல்களில் ஈடுபட இந்தியாவின் அமைவிடம் ஏதுவாக உள்ளது.  23° 30' வட  அட்சமான கடகரேகை இந்தியாவின் மையமாக அமைந்து தென்பகுதி வெப்ப மண்டலமாகவும், வடபகுதி மித வெப்ப மண்டலமாகவும் இரு பெரும் பகுதிகளாக பிரிக்கிறது.

இந்தியாவின் உருவ அளவு 

                      ஆசியாவிலேயே பரப்பளவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு இந்தியா. இது பாகிஸ்தானை விட நான்கு மடங்கு பெரியதாகவும்,  ஜப்பானை விட 8 மடங்கு பெரியதாகவும்,  இங்கிலாந்தை விட 12 மடங்கு பெரியதாகவும் உள்ளது.   ஆனால் ஐக்கிய அமெரிக்க நாட்டை விட மூன்று மடங்கு சிறியதாக உள்ளது. 

இந்தியாவின் இருப்பிடமும் பரவலும் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க நினைத்தால் இங்கே க்ளிக் நமது தளத்தின் EXAM CENTER சென்று தேர்வெழுதிப் பாருங்கள்.. படித்த பாடம் பளிச்சென்று மனதில் பதியும்.
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template