அடிப்படைத் தகவல்கள்:
பிறப்பு: கும்பகோணம்
நாள்: ஆகஸ்டு 15 1900
பெற்றோர்: நடேச தீட்சிதர் - காமாட்சியம்மாள்
இயற்பெயர் : வேங்கட மகாலிங்கம்
பணி: வழக்கறிஞர் , இந்து அறநிலையத்துறை அதிகாரி
இலக்கியப்பணி: எழுத்தாளர்
சிறப்புப் பெயர்: புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி.
புதுக்கவிதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர்.
சிறுகதை எழுத்தாளராக அறிமுகமாகிப் புதுக்கவிதை எழுத ஆரம்பித்தார்
முதல் சிறுகதை: விஞ்ஞானத்திற்குப் பலி
முதல் கவிதை: காதல் (1934)
--------------------------------------------------------------------------------------------------------------
முக்கியக் குறிப்புகள்:
ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.
1933 இல் "முள்ளும் ரோசாவும்" என்ற சிறுகதை கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்றது. இதன் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.
1934இல் “காதல்” என்ற இவர்தம் முதல் கவிதை வெளியாகியது.
1937 இல் “கிளிக்கூண்டு” தினமணிக்கதிரில் வெளியானது. இது இவரை அடையாளம் காட்டியது.
அகலிகை கதைக்குப் புத்துயிர் கொடுத்து இவர் எழுதிய காவியம் "உயிர்மகள்” என்ற பெயரில் வெளியானது.
1962 இல் 35 கவிதைகள் அடங்கிய “காட்டு வாத்து” என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாகக் கொண்டவர்.
மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன் ஆகிய இதழ்களில் கவிதை எழுதினார்.
பிச்சமூர்த்திக் கவிதைகள், கிளிக்குஞ்சு, பூக்காரி, வழித்துணை போன்றனவும் வெளிவந்தன. சிறுகதை நூல்கள்: மோகினி, பதினெட்டாம் பெருக்கு, சம்பரும் வேட்டியும், மாங்காய்த் தலை, பிச்சமூர்த்திக் கதைகள், இரட்டைவிளக்கு.
பின்குறிப்பு:
ஸ்ரீ ராமானுஜர் என்ற திரைப்படத்தில் ஆளவந்தார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------
மேற்கோள்:
"முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி"
இருபுறமும் ஒடும்"
ந.பிச்சமூர்த்தியைப் பற்றி படித்துவிட்டீர்களா? இந்தப் பாடத்தில் 10 வினாக்கள் கேட்டால் சரியான பதிலைச் சொல்லி விடுவீர்களா? இங்கே க்ளிக் செய்து தேர்வெழுதுங்கள்..