எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » » TNPSC | பாரதியார் | பொதுத்தமிழ் | Bharathiyar

TNPSC | பாரதியார் | பொதுத்தமிழ் | Bharathiyar


 
 இயற்பெயர்: சுப்பையா (எ) சுப்பிரமணியன் 

பிறப்பு: திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம்

பெற்றோர் சின்னசாமி ஐயர், லட்சுமி அம்மாள் வாழ்க்கைத் துணை செல்லம்மாள் 

இறப்பு: செப்டம்பர் 11 1921 (அகவை 38)  

சமூக பங்களிப்பு: கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி

மற்ற பெயர்கள்: பாரதியார், சுப்பையா, சக்தி தாசன்
 

சிறப்புப் பெயர்கள்:

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
 

படைப்புகள்:

    குயில் பாட்டு
    கண்ணன் பாட்டு
(இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின்  தொகுப்பாகும்)  
    பாஞ்சாலி சபதம்

    புதிய ஆத்திச்சூடி
    சுயசரிதை
    பாரதி அறுபத்தாறு
    ஞானப் பாடல்கள்
    தோத்திரப் பாடல்கள்
    விடுதலைப் பாடல்கள்
    சந்திரிகையின் கதை(உரைநடை இலக்கியம்)
    ஞானரதம் (உரைநடை இலக்கியம்)

வாழ்க்கைக் குறிப்பு:

தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற பட்டம் எட்டயபுரம் அரசபையில் வழங்கப்பட்டது.வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 

பாரதியார் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் இந்தியா என்ற வார இதழில் விஜயா, சூரியோதயம்,  கர்மயோகி,  தர்மம் என்ற இதழ்களிலும் பாலபாரதா, ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர்.
 
தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். 
 
'பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமை தீருதல் முயற்கொம்பே' என பெண்ணுரிமையை குறித்து பாடினார்.

முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
 
இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்

நினைவு இல்லம்:

 
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் நினைவு இல்லமாகவும் கொண்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 
 
இவர் பிறந்த எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இதன் மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடி உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு 11-12-1999 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 
 
25 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரக்கூடிய அளவில் திறந்தவெளிக் கலையரங்கம் உள்ளது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
 
பாரதியாரின் புகழ்பெற்ற வரிகள் சில:
 
“ஏழை என்றும் அடிமை என்றும் எவரும் இல்லை சாதியில்”

“தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம்”
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்.”

“செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”
“காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்.

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே – அதைத்  தொழுது படித்திடடி பாப்பா”

“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும்”

“நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்”

 “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
 
“எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்.”

 “செந்தமிழ் நாடென்னும் போதினிலே”

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு – நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”

“காதல் காதல் காதல்

காதல் போயின் காதல் போயின்

சாதல் சாதல் சாதல்”

“செப்புமொழி பதினெட்டு உடையாள் – எனினும் சிந்தனை ஒன்றுடையாள்”

“சிந்து நதியின் மிசை…….”




Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template