Ads Area

TNPSC - PODHUTAMIL - உவமைத்தொகை - உருவகம் கண்டறிதல்

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று மற்றும் வினையாலணையும் பெயர் ஆகியவற்றைப் பற்றி பார்த்தோம் (பார்க்காதவர்கள் பார்க்க)

இந்தப்பகுதியில் உவமைத்தொகை மற்றும் உருவகம் பற்றி பார்க்கலாம் வாங்க



  உவமைத்தொகை

  ஒரு பொருளின் தரத்தை உயர்த்திக் கூறுவதற்காக உயர்ந்த பொருளொன்றோடு ஒப்பிடுவதே உவமைத்தொகை எனப்படும்.
     உவமைக்கும் உவமேயத்திற்கு மிடையே போல,போன்ற உவம உருபுகள் மறைந்து வரும்..

(எ.கா) கனிவாய்
              மலரடி

       'கனிவாய்' என்ற சொல்லிற்கு பொருள் கனி போன்ற வாய் என்பதாகும். அப்படியானல் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருவதைக் காணலாம்.

       எனவே 'கனிவாய்' என்பது உவமைத்தொகை ஆகும்.

  அதேபோல 'மலரடி' என்பதன் பொருள் மலர் போன்ற பாதம் என்பதாகும்.இதிலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வருகிறது.

       பெரும்பாலும் 'போன்ற' என்ற உருபு மறைந்து வரும்படியே வினாக்கள் அமையும்.

எ.கா

1.மலர்முகம்
2.பால்முகம்
3.மலர்க்கை
4.தாய்மொழி
5.முத்துப்பல்
6.அன்னைத்தமிழ்

   மேற்கண்டவை அனைத்தும் உவமைத்தொகை ஆகும்.

உருவகம்:

    உவமைத்தொகையை நன்றாகப் புரிந்து கொண்டீர்களா..அப்படியானால் உருவகத்தை புரிந்து கொள்வது மிகச்சுலபம்.

      அதாவது 'மலரடி' என்ற சொல் உவமைத்தொகை என்பதைப் பார்த்தோம்.
அச்சொல்லை திருப்பி எழுதினால் அது உருவகம்.

    'மலரடி' என்ற சொல்லை 'அடிமலர்' என்று மாற்றியமைக்கும் போது உருவகம் ஆகிறது.

     விளக்கம்:

       ஒரு பெண்ணின் முகத்தை  பார்க்கிறீர்கள்..உடனே மலரைப் போன்ற முகம் என மலருடன் அவளது முகத்தை ஒப்பிடுகிறீர்கள்.இதுவே 'மலர்முகம்'.இது உவமைத் தொகை.

     இன்னும் ஒருபடி மேலே போய்,மலரைப்போன்று முகமில்லை.இவள் முகத்தைப் போலத்தான் அம்மலர் இருக்கிறது என்று சொல்வீர்களானால் அது உருவகம்.அதாவது முகமலர்..

       அவ்வளவுதான் தோழர்களே..இரண்டுக்குமான வித்தியாசத்தை தெரிந்து கொண்டீர்களா..

எடுத்துக்காட்டு:

உவமைத்தொகை   உருவகம
மலர்முகம் முகமலர்
மலர்க்கைகைமலர்
தாய்மொழி மொழித்தாய்
மதிமுகம்முகமதி
அன்னைத்தமிழ் தமிழன்னை
மலர்விழிவிழிமலர்

           என்ன நண்பர்களே..பதிவு உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்குமென நினைக்கிறேன். பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்..படிப்பவர்களுக்கு பயன் அளிக்கட்டும்.

ஓரெழுத்து ஒருமொழி கண்டறிதல் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? எண்ணும்மை,உரிச்சொற்றொடர்,உம்மைத்தொகை பாடத்தைக்கான TOUCH HERE


Bottom Post Ad

Ads Area