Ads Area

TNPSC - வினையெச்சம் - வினையெச்சத்தின் வகைகள் - பொதுத்தமிழ் - இலக்கணம்

வணக்கம் நண்பர்களே! சென்ற பதிவில் பெரயரெச்சத்தின் வகைகள் பற்றி பார்த்தோம் அல்லவா? (பார்க்காதவர்கள் பார்க்க).. 

இந்தப் பதிவில் வினையெச்சம் பற்றி பார்க்கலாம் வாங்க.. 

 

வினையெச்சம்:

            முடிவு பெறாத ஒரு எச்ச வினைச்சொல் தொழிலையும் காலத்தையும் உணர்த்தி வினையைக் கொண்டு முடியும் அதுவே வினையெச்சம் ஆகும்.

 (எ.கா)  படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி  மறைந்தான், பாடி முடித்தான், சென்று வந்தான்.

                மேற்கணடவற்றுள் படித்து,வந்து,ஓடி,பாடி,சென்று போன்றவை வினையெச்சங்கள் ஆகும்.

வினையெச்சத்தை எப்படி எளிதாக கண்டுபிடிப்பது?

            படித்து முடித்தான், வந்து சென்றான், ஓடி  மறைந்தான்,பாடி முடித்தான், சென்று வந்தான் போன்ற வாக்கியங்களைக் கொடுத்து இதன் இலக்கண வகை என்ன என்று வினா வரும்போது முதலில் உள்ள  படித்து, வந்து, ஓடி, பாடி, சென்று போன்றவற்றை கணக்கிட்டுதான் அவை வினையெச்சம் என எண்ண வேண்டும். அதற்காகத்தான் அவை அடிக் கோடிட்டு காட்டப்பட்டிருக்கிறது.
         
         முதலில் படித்து, வந்து, சென்று போன்ற வார்த்தைகளை நன்றாக உச்சரித்துப் பாருங்கள்.அவ்வார்த்தைகள 'உ' என்னும் சத்தத்தோடு முடியும்..

விளக்கம்:


படித்து- இதன் கடைசி எழுத்து 'து'


'து' என்ற எழுத்தை பிரித்தால் த்+உ என்று பிரியும்..

       பாடி,ஆடி,ஓடி என்ற வார்த்தைகளை உச்சரித்துப் பாருங்கள். அவ்வார்த்தைகள் 'இ' சத்தத்தில் முடியும்.

விளக்கம்:

பாடி-இதன் கடைசி எழுத்து 'டி'

 'டி' என்ற எழுத்தைப் பிரித்தால் ட்+இ என்று பிரியும்.

   
            இப்படி வார்த்தையின் இறுதியில் 'உ' மற்றும் 'இ'  என்னும் சத்தம் ஒலித்தால் அது வினையெச்சம் தான் என முடிவெடுத்துக் கொள்ளவும்.

  (அ) தெரிநிலை வினையெச்சம்
  (ஆ) குறிப்பு வினையெச்சம்

என வினையெச்சம் வகைப்படும்.

அ.தெரிநிலை வினையெச்சம்

       தெரிநிலை வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டி
வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா) வந்து போனான்
             நின்று வந்தான்

ஆ.குறிப்பு வினையெச்சம்

         குறிப்பு வினையெச்சமானது வெளிப்படையாக காலத்தைக் காட்டாமல்
பண்பின் அடிப்படையில் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்.

(எ.கா)மெல்ல நடந்தான்
            கோபமாக பேசினான்

 3. முற்றெச்சம்

         ஒரு வினைமுற்று சொல் தன்னுடைய வினைமுற்று பொருளை தராமல்.
வினையெச்ச பொருளைத் தருமாயின் அதற்கு “முற்றெச்சம்” என்று பெயர். இச்சொல் தனித்து நோக்கும்போது வினைமுற்றாகத் தோன்றும். இரண்டு வினைமுற்று தொடர்ந்து வருமாயின் அது முற்றெச்சம் ஆகிறது.

(எ.கா)

     சிறுவர் பாடினர் மகிழ்ந்தனர்
     படித்தனர் தேர்ந்தனர்
     எழுதினன் முடித்தனன்
--------------------------------------------------------------------------------------------------------------------

மாதிரி வினாத்தாள்:

1.கீழ்க்காண்பவருற்றுள் வினையெச்சம் அல்லாதது எது?

அ) பாடி மகிழ்ந்தான் ஆ) சிந்து பாடினாள் இ) ஆடிப் பாடினான் ஈ) விழுந்து எழுந்தான் 

2. 'கோபமாகப் பேசினான்' இது எவ்வகையான எச்சம்?

அ)குறிப்பு வினையெச்சம் ஆ)குறிப்பு பெயரெச்சம் இ) தெரிநிலை வினையெச்சம் ஈ)தெரிநிலை வினையெச்சம்

வினையெச்சம் மற்றும் வினையெச்சத்தின் வகைகள் பார்த்தோம் அல்லவா.. அடுத்த பாடமான வினைத்தொகை மற்றும் பண்புத்தொகை பாடத்தைக்காண இங்கே செல்லவும்..

Bottom Post Ad

Ads Area