காஞ்சிபுரம்
ஆயிரம் கோயில்களின் நகரமான காஞ்சிபுரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். கி.பி 4-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலையிலும், தமிழ் மற்றும் சமற்கிருத மொழிகளின் கல்வியிலும் சிறந்து விளங்கியது.
சான்று:சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன், காஞ்சி நகரத்தை ஆண்டதைப் பரிபாடல் மூலம் அறிய முடிகின்றது.
கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது.
கி.பி. 2-ஆம் நூற்றாண்டு காலச் சங்கவிலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது.
மாமல்லபுரம்
தற்போதைய செங்கல்பட்டு மாவட்டிலுள்ளது.
தற்போதைய செங்கல்பட்டு மாவட்டிலுள்ளது.
சான்று: மாமல்லபுரம் நரசிம்மவர்மன் I (மாமல்லன்) கிபி 630 - 668 காலங்களில் உருவாக்கம் பெற்றது.
மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன.
உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.
அரிக்கமேடு
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு மேற்கொள்ளப்படும் முக்கியமான தளங்களில் அரிக்கமேடுவும் ஒன்று..
பூம்புகார்
பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்நகரின் புகழ் பாடக்கூடிய முக்கிய நூல் சிலப்பதிகாரம். கோவலன் கண்ணகி பிறந்த ஊர்..கோவலனின் தந்த மாசாத்துவான் கண்ணகியின் தந்தை மாநாய்கன் இருவருமே பெருங்கடல் வணிகர்கர்கள்.. பட்டினப்பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணன் 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என்பது குறிப்படத்தக்கது.
கொடுமணல்
தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம்,சென்னிமலை யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது.[1] இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சான்று:
இன்றைக்கு முக்கிய தொல்லியற் களமாக அறியப்படும் கொடுமணல், கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்டது.இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன.
கரூர்
சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை சேரன் செங்குட்டுவன், கரூர் ஆட்சி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சேரர்களுக்குப் பிறகு, பாண்டியர்களால் கரூர் கைப்பற்றப்பட்டு, பல்லவர்களும் பின்னர் சோழர்களும் ஆட்சி செய்தனர். கரூர் நீண்ட காலமாக சோழ மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டது, மேலும் நாயக்கர்களை தொடர்ந்து திப்பு சுல்தானும் கரூரை ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர் மைசூர் போரில் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் உயிர்களை இழந்த வீரர்களுக்கு கரூர் அருகே உள்ள ராயனூரில் ஒரு நினைவுச்சின்னம் ஏற்படுத்தியுள்ளனர்.
உறையூர்
உறையூர் தமிழகத்தில் உள்ள பழமையான ஊர்களில் ஒன்று. இன்று திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு பகுதியாக இருந்தாலும், வரலாற்றில் இது ஒரு தனிபெரும் நகரமாகவே திகழ்ந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகரமாகும். உறந்தை எனவும், கோழியூர் எனவும் இதனை வழங்குவர்.
கீழடி
வைகை நதியின் தென்கரையில் மதுரையிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள வரலாற்ற சிறப்புமிக்க கீழடி கிராமம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது.தமிழகத்தில் அமைந்துள்ள அகழாய்வுகளிலேயே இதுதான் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற அகழாய்வாகும். சிந்து,கங்கை நதிக்கரை நாகரீகத்திற்கு பின்,இரண்டாம் நிலை நகர நாகரீகங்கள்,தமிழகத்தில் தோன்றவில்லை என்ற கருத்துக்கு மாறாய்,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை கரை நாகரீகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன.
மதுரை
தற்போது தமிழகத்தின் நான்காவதாக இருக்கக்கூடிய மதுரை ஒரு தொன்மையான நகரம் ஆகும். சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.
சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை, தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில், தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.
தொண்டி
தொண்டி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரம். இது பாண்டியர்களின் துறைமுகமாகவும் விளங்கிய முக்கிய பண்டைய நகரமாகும்.
அழகன்குளம்
அழகன்குளம், பாண்டியர்களின் ஒரு துறைமுக நகராகவும் விளங்கியது; மன்னராட்சி நடைபெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் மருவி அழகன்குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது.இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பண்டைய நகரம் ஆகும்..
காயல்பட்டினம்
பண்டை கால இலக்கியங்கள் & கல்வெட்டுகளில் வகுதை, பெத்திர மாணிக்கப் பட்டணம், தென்காயல் போன்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்நகர் தோன்றி ஏறத்தாழ ஐந்தாயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது என்று இந்நகரில் கிடைக்கப்பெற்ற தொல்பொருள் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பாண்டியர் ஆட்சி காலத்தில், மதுரை அதன் தலைநகரமாகவும், காயல்பட்டினம் அதன் துறைமுகமாகவும் திகழ்ந்தது என்று DISCOVERY OF INDIA எனும் நூலில் பண்டித ஜவகர்லால் நேரு கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது..
கொற்கை
பாண்டியர்களின் முதல்தலைநகரம் கொற்கை ஆகும்.பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது. இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது..