எட்டிப்பிடி! இதுவே ஏணிப்படி!:
Home » , , » TNPSC - Indian History - இரண்டாம் கர்நாடக போர் - 1748 - 1754

TNPSC - Indian History - இரண்டாம் கர்நாடக போர் - 1748 - 1754

இரண்டாவது கர்நாடக போர்  (கிபி 1748-கிபி 1754)


ஐரோப்பாவில் பிரான்சுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே அமைதி நிலவியது.  ஆனால் இந்தியாவில் இவ்விரு காலனி நாடுகளாலும் அமைதியாக இருக்க முடியவில்லை . சுதேச அரசர்களை ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தூண்டி விட்டனர். ஹைதராபாத்திலும் கர்நாடகத்திலும் ஏற்பட்ட வாரிசுரிமைப் போர் இரண்டாவது கர்நாடக போராக பிரதிபலித்தது.  ஆற்காடு, ஹைதராபாத் அரசுகளில் ஏற்பட்ட வாரிசுரிமை போர்களில் பங்கு எடுப்பதன் மூலம் டியூப்ளே பிரான்சின் செல்வாக்கை மேம்படுத்த விரும்பினார்.
 


 
போருக்கான காரணம்:

1.ஹைதராபாத் நிஜாம் ஆசப்ஜா கி.பி.1748 இல் காலமானார். இதனால் அவரது மகன் நாசிர் ஜங் மற்றும் பேரன் முசபர் ஜங்கிற்கும்  இடையே போட்டி ஏற்பட்டது.  
 
2.இதே சமயத்தில் கர்நாடக நவாப் தோஸ்த் அலி காலமானார்.  இதனால் அவரது மகன் அன்வாருதினுக்கும் அவரது மருமகன் சந்தாசாகிப் -ற்கும் இடையே ஆற்காடு அரியணைக்கு போட்டி ஏற்பட்டது. 
 
முசபர் ஜங் மற்றும் சந்தா சாகிப்பை பிரெஞ்சுக்காரர்கள் ஆதரித்தனர். 
 
நாசிர் ஜங்கும் அன்வாருதினும் ஆங்கிலேயரின் உதவியை கோரினர்.
 
போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி 1748 ஆம் ஆண்டு இரண்டாவது கர்நாடகப் போர் ஆரம்பமாகியது.

ஆம்பூர் போர் 1749

ஹைதராபாத் நிஜாமிற்கு உரிமை கோரிய முசபர் ஜங்,  கர்நாடக அரியணைக்கு உரிமை கோரிய சந்தாசாகிப் ஆகிய இருவரும்  நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பிரெஞ்சு காலாட்படைகளின் உதவியோடு அன்வாருதீன் படைகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தினர்..   போரில் அன்வாருதீன் கொல்லப்பட்டார்..
 
சந்தா சாகிப் நவாபாக ஆற்காட்டிற்குள் நுழைந்தார் . இதே சமயத்தில் அன்வாருதீனின் மகனான முகமது அலி திருச்சிக்கு தப்பிச் சென்றார். டியுப்ளே ஆற்காட்டில் முகமது அலிக்கு எதிராக சந்தாசாகிப்பை ஆதரித்தார்.

பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கை குறைப்பதற்காக ஆங்கிலேயர் 1749 இல் நடைபெற்ற ஆம்பூர் போரில் நவாப் அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் அவ்வரியணைக்கு அவரது மகனான முகமது அலியையும்  ஆதரித்தனர். .

ஆம்பூர் போரை தொடர்ந்து வெற்றிபெற்ற படைகள் தக்காணத்தில் நுழைந்தன. பிரெஞ்சு  படைகளால் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முசபர் ஜங்  1750 டிசம்பரில் ஹைதராபாத்தின்  நிஜாமாக ஆக்கப்பட்டார். நிஜாமிடமிருந்தும், ஆற்காட்டு நவாப்பிடமிருந்தும் டியூப்ளே பெருமளவு பணத்தையும் நிலங்களையும் பெற்றார். 
 
முசபர் ஜங் பிரெஞ்சுக்காரரின்  பாதுகாப்பைக் கோரிய போது டியூப்ளே பிரெஞ்ச் தளபதி புஸ்ஸி அவருடன் அதிக எண்ணிக்கையில் பிரெஞ்சு வீரர்களையும் அனுப்பி வைத்தார். ஆனால் முசபர் ஜங் நீண்ட நாட்கள் உயிரோடு இல்லை. ஹைதராபாத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.
 
உடனடியாக புஸ்ஸி நாசிர் ஜங்கின் சகோதரனான  சலபத் ஜங் என்பவரை அரியணை ஏற்றினார். 

ஆற்காடு கைப்பற்றுதல் :
 
சந்தா சாகிப் ஆங்கிலேயரின்  செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் முகமது அலியை கைது செய்யவும்(அதாவது அன்வாருதீன் கொல்லப்பட்ட பின்னர் திருச்சிக்கு தப்பி ஓடியவர்) ஹைதராபாத் நிஜாம் மற்றும் பிரெஞ்சு உதவியுடன் திருச்சியை கைப்பற்ற முடிவு செய்தார். 

சந்தா சாகிப்பின் உதவியோடு திருச்சியை கைப்பற்ற வேண்டும் என டியூப்ளேயும் உறுதி கொண்டிருந்தார்.  சந்தா சாகிப்பின் படையோடு பிரெஞ்சுப் படையினர் 900 பேர் சேர்ந்தனர் . முகமது அலி 5000 படை வீரர்களையும் தனக்கு உதவியாக 600-க்கும் மிகாத ஆங்கில வீரர்களை மட்டுமே கொண்டிருந்தார்.
 
ராபர்ட் கிளைவின் எண்ணம் வரலாற்றின் போக்கை மாற்றி அமைத்தது. பிரெஞ்சுக்காரரும் நவாபும் திருச்சி முற்றுகையில் தீவிரமாக இருக்கையில் ஆற்காட்டின்  மீது திடீர் தாக்குதலை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை ராபர்ட் கிளைவ் முன்வைத்தார்

கிளைவ்  1752 ஆகஸ்ட் 26-இல்  புனித டேவிட் கோட்டையில் இருந்து 200 ஆங்கிலேய மற்றும் 300 இந்திய வீரர்களுடன் புறப்பட்டார்.  எதிர்பார்த்தபடி சிறிய பகுதியை சேர்ந்த பல அரசர்களிடமிருந்து உதவிகளைப் பெற்றனர். மறுபுறம் மைசூர் மற்றும் தஞ்சாவூர் அரசர்கள் முகமது அலியை ஆதரித்தனர் .
 
சந்தா சாகிப் உடனடியாக 3000 வீரர்களை தமது மகன் ராஜா சாகிப்பின் தலைமையில் ஆற்காட்டிற்கு அனுப்பி வைத்தார்.  1752 ஆகஸ்ட் 31-இல் ஆற்காட்டை  கைப்பற்றிய கிளைவ் ராஜா சாகிப்பின் 53 நாள் கோட்டை முற்றுகையையும் தாக்குப்பிடித்தார். ராஜா சாகிப்பிற்கு புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர் உதவினர். 
 
ஆரணி போரில் ஆங்கிலேயரும் மராத்திய அரசர் முராரிராவும் தங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான பிரெஞ்சு மற்றும் ஆர்க்காட்டு படைகளை எதிர் கொண்டனர்.  தொடர்ந்து நடைபெற்ற பல போர்களில் குறிப்பாக காவேரிப்பாக்கத்தில் நடைபெற்ற போரில்  சந்தாசாகிப் பிடிபட்டு கொல்லப்பட்டார்.  முகமது அலி எதிர்ப்பு ஏதும் இல்லாமல் கர்நாடகத்தின் அரசரானார். எனவே ராபர்ட் கிளைவ் ஆற்காடு வீரர் என பெருமையோடு அழைக்கப்பட்டார்.  
 
ஐரோப்பாவில் இங்கிலாந்தும் பிரான்சும் எப்போரிலும் ஈடுபடாத நிலையில் இந்தியாவில் தங்கள் காலனிகள் போரில் ஈடுபடுவதை கண்டனம் செய்தனர்.  இத்தோல்வியினால் பிரெஞ்சு அரசு 1754 ஆம் ஆண்டு டியூப்ளேவை  பிரான்சுக்கு திரும்ப அழைத்துக்கொண்டது.  
 
இவருக்கு பதிலாக தளபதி கோத்யூ பிரெஞ்சு தளபதியாக  இந்தியாவில் நியமனம் செய்யப்பட்டார்.  இரண்டாவது கர்நாடகப்போர் ஆங்கிலேயர்களுக்கு பெரும் வெற்றியையும் பிரெஞ்சுகாரர்களுக்கு சரிவையும் ஏற்படுத்தியது.

உடன்படிக்கை

இரண்டாவது கர்நாடகப்போர்  1755 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி (புதுச்சேரி) உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது.  

விளைவுகள் 

இதன்படி ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்திய சுதேசி சாம்ராஜ்யங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றும் போரின் போது இரு நாடுகளும் கைப்பற்றி நிலப்பகுதிகளை திரும்ப அந்தந்த நாடுகளுக்கு அளித்துவடுவது என்றும் ஒப்புக் கொண்டனர். 
 
முகமது அலியை ஆற்காடு நவாபாக ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் அங்கீகரித்தனர்.  இவ்வுடன்படிக்கை இந்தியாவில்  இவ்விருவரும் சொந்தமாக கொண்டிருந்த பகுதிகளை தெளிவாக வரையறுத்தது. சுமார் 200 ஆண்டுகாலம் இந்தியா விடுதலை பெறும் வரை நடைமுறையில் இருந்தது..
 
இந்தப் பாடத்திலிருந்து 10 வினாக்கள் கேட்டால் சரியாய் பதிலைச் சொல்வீர்களா? முயற்சித்துப் பாருங்கள்..கேள்விக்கான பதிலை அளிக்க TOUCH HERE
 
 இந்தப் பதிவின் PDF வேண்டுமா? TOUCH HERE
 
 
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Search..

TNPSC | Podhutamil Free Test

TNPSC | Indian Constitution | Shortcuts

TNPSC | Super Shortcut

TNPSC | Maths Importannt Problems

TNPSC | பொதுத்தமிழ் பாடப்புத்தகம்

TNPSC | பண்டைய இந்திய வரலாறு

பொதுத்தமிழ் - LIVE Test

Popular Posts

TNPSC | Podhutamil Grammar

TNPSC | Old Indian Hostory

TNPSC | Indian Economiccs | Important Notes

 
Template Design by Creating Website Published by Mas Template